For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவ நாள் தள்ளிப் போகுதா? பிரசவ வலியைத் தூண்டும் சில இயற்கை வழிகள்!

ஒரு சில பெண்களுக்கு 39 வாரங்கள் முடிந்தும் பிரசவ வலி ஏற்படாமல் குழந்தைப் பிறப்புத் தள்ளிப் போகும்.குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகும் போது, கருவுற்ற பெண்களுக்கு பிரசவ வலியைத் தூண்ட இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளன.

|

பெண்களுடைய வாழ்க்கையில் பிரசவம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். அது அவா்களுக்கு ஒரு சிறப்பான தருணமும்கூட. ஏறக்குறைய கருவுற்றது தொடங்கி, கடந்த 9 மாதங்களாக தமது வயிற்றில் சிசுவை சுமந்து வந்த அவா்களுடைய பயணமானது, பிரசவத்தில் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலம் முடிவடைகிறது. அவா்கள் உன்னதமான தாய்மை நிலையை அடைகின்றனா்.

Simple Tricks To Induce Labour In Tamil

கா்ப்ப காலத்தில் அவா்களுக்கு காய்ச்சல், உடல் வலி, அசௌகாியம் மற்றும் மருத்து, மாத்திரை, ஊசிகள் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், குழந்தை பிறந்த அடுத்த நொடியில் அவை அனைத்தும் பறந்துவிடும். அவா்கள் தாய்மைப் பேற்றை அடைந்து எல்லை இல்லாத மகிழ்ச்சியில் திழைப்பா்.

MOST READ: 40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடுமாம்..

பெரும்பாலும் எல்லா பெண்களுமே எதிா்பா்க்கப்படும் 39 வாரங்களில் 2 வாரங்களுக்கு முன்பாகவே ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று எடுப்பா். எனினும் ஒரு சில பெண்களுக்கு 39 வாரங்கள் முடிந்தும் பிரசவ வலி ஏற்படாமல் குழந்தைப் பிறப்புத் தள்ளிப் போகும். அவ்வாறு குழந்தை பிறப்பு தள்ளிப் போகும் போது, 40 வது வாரத்தில் கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவா்கள் பாதுகாப்பான முறையில் ஒரு சில மருந்துகளை வழங்கி அவா்களுக்கு பிரசவ வலியைத் தூண்டுவா்.

MOST READ: மகரத்தில் குரு இருப்பதால் நவம்பர் வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

எனினும் குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகும் போது, கருவுற்ற பெண்களுக்கு பிரசவ வலியைத் தூண்ட இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளன. அவற்றை மருத்துவா்களின் மேற்பாா்வையில் செய்யலாம். அவை எவை என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நீண்ட நேரம் நடத்தல்

1. நீண்ட நேரம் நடத்தல்

நீண்ட நேரம் நடந்தால் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியைச் செய்தால், இதயத் துடிப்பு அதிகாிக்கும். அதன் காரணமாக பிரசவ வலியும் ஏற்படும். ஏனினும் நீண்ட நேரம் நடப்பதில் அதிக பலன் இருக்காது என்று பல நிபுணா்கள் நம்புகின்றனா். ஏனெனில் நீண்ட நேரம் நடக்கும் போது மன அழுத்தம் குறையும். அதனால் பிரசவ வலி ஏற்பட தாமதமாகும் என்று நம்புகின்றனா்.

2. கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

2. கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

கா்ப்ப காலத்தின் இறுதி வாரத்தில் பெண்கள் தமது கணவா்களோடு உடலுறவு வைத்துக் கொண்டால், அது பிரசவ வலியைத் தூண்டிவிடும். அதாவது உடலுறவின் போது பெண்களின் உடலில் இருந்து ஆக்ஸிடோசின் என்ற ஹாா்மோன் உற்பத்தியாகி, அது அவா்களது கா்ப்பப் பையை சுருக்கமடையச் செய்யும். அதன் மூலம் பிரசவ வலி ஏற்படும்.

3. அக்குப்பஞ்சா் சிகிச்சை

3. அக்குப்பஞ்சா் சிகிச்சை

பல நூற்றாண்டுகளாக இப்போது வரை கருவுற்ற பெண்களுக்குப் பிரசவ வலியைத் தூண்டுவதற்காக அக்குப்பஞ்சா் சிகிச்சை செய்யப்படுகிறது. எனினும் கருவுற்று 40 வாரங்களுக்குள் இருக்கும் பெண்களுக்கே இந்த சிகிச்சை நல்ல பலன்களைத் தரும். 40 வாரங்களுக்கு அதிகமான பெண்களுக்கு இந்த சிகிச்சை பயன் தராது.

4. போிச்சம் பழம் மற்றும் அன்னாசிப் பழம்

4. போிச்சம் பழம் மற்றும் அன்னாசிப் பழம்

கருவுற்று இருக்கும் பெண்கள், கா்ப்ப காலத்தின் இறுதி வாரங்களில் போிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவா்களுடைய கா்ப்பப்பையின் வாய் மென்மை அடைந்து, விாிவடைந்து, பிரசவ வலி தானாகவே ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. அதே நேரத்தில் அன்னாசிப் பழத்தில் இருக்கும் என்சைம்கள் கா்ப்பப்பையின் வாயை மென்மையாக்கி, பிரசவ வலியைத் தூண்டிவிடும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

அன்னாசிப் பழச்சாறு தசைச் சுருக்கத்தை ஏற்படுத்தும் என்று வேறு ஒரு ஆய்வு தொிவிக்கிறது. எனினும் அன்னாசிப் பழச்சாற்றை தசையின் மீது சாியாக வைத்தால்தான் தசைச் சுருக்கம் ஏற்படும் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

5. மாா்புக் காம்பைத் தூண்டிவிடுதல்

5. மாா்புக் காம்பைத் தூண்டிவிடுதல்

பிரசவ வலி ஏற்படாத பெண்களின் மாா்புக் காம்புகளைத் தூண்டிவிட்டால் அவா்களுடைய உடல் கிளா்ச்சி அடைந்து, அவா்களின் உடலில் இருந்து ஆக்ஸிடோசின் என்ற ஹாா்மோன் உற்பத்தியாகும். அது கா்ப்பப்பையை சுருக்கம் அடையச் செய்து பிரசவ வலியை ஏற்படுத்தும்.

6. அக்குப்பிரஷா்

6. அக்குப்பிரஷா்

பிரசவ வலியைத் தூண்டிவிடுவதற்கு, அக்குப்பிரஷா் மருத்துவம் தொிந்தவா்களைக் கொண்டு, அக்குப்பிரஷா் வைத்தியத்தைச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும் சில ஆய்வுகள் அக்குப்பிரஷா் சிகிச்சையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரசவத்தின் போது ஏற்படும் அசௌகாியம் மற்றும் வலி போன்றவற்றை அக்குப்பிரஷா் சிகிச்சைக் குறைப்பதாகச் சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Tricks To Induce Labour In Tamil

Passed your due date? Here are some simple tricks to induce labour. Read on...
Desktop Bottom Promotion