Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
கர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள், மருத்துவர்கள் கூறுவது என்ன?
கர்ப்ப காலம் என்பது ஒரு அழகான வசந்தகாலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்பகாலத்தில் சில தேவையற்ற கட்டு கதைகளை கேட்டு குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எல்லா மூட நம்பிக்கைகளும் உண்மையாகி விட முடியாது. கர்ப்பக
கர்ப்பகாலம் என்பது ஒரு அழகான வசந்தகாலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தனது கர்ப்பகாலத்தில் சில தேவையற்ற கட்டு கதைகளை கேட்டு குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எல்லா மூடநம்பிக்கைகளும் உண்மையாகி விட முடியாது. கர்ப்பகாலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது.

உங்கள் வயிற்றின் வடிவத்தை வைத்து பிறக்க போகும் குழந்தையை கணிப்பதும், நெஞ்சு எரிச்சல் ஏற்படும் போது குழந்தைக்கு நிறைய முடிகளுடன் பிறக்கும் என்றும் கூறும் கதைகள் போல பல உள்ளன. இதில் எது உண்மை எது உண்மை இல்லை என்று உங்கள் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை மட்டும் கேளுங்கள். தேவையற்ற விஷயங்ககளை யோசித்து உங்கள் மனதை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்.

குழந்தையை கண்டறிதல்
காலையில் பெண்கள் அதிகமான அளவில் சோர்வாக, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அந்த பெண் ஆண் குழந்தையை சுமக்கிறாள் என்றும், குறைவான அளவில் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அவள் பெண் குழந்தையை சுமக்கிறாள் என்றும் ஒரு மூடநம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறான விஷயம் எனவே தினமும் காலையில் நீங்கள் பிரச்சினைகளால் உள்ளானால் கண்டிப்பான முறையில் வீட்டு வைத்தியமோ அல்லது மருத்துவரிடமோ செல்ல வேண்டும்.

ஆல்கஹால் தவிர்த்தல்
கர்ப்ப காலத்தின் போது மது அருந்துவது மிக நல்லது என்பது பல பேரின் மூடநம்பிக்கையாக இருந்து வருகிறது. கர்ப்ப காலத்தின் போது சிறிதளவு கூட மது அருந்தக் கூடாது. மது அருந்துவது குறை பிரசவம் அல்லது குழந்தையின் எடையை குறைக்கவோ வழி வகுக்கும். அதாவது ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் ஒரு நொதி உள்ளது இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடும். எனவே மது எந்த அளவுக்கு எந்த பெண்கள் அருந்த வேண்டும் எந்த ஆராய்ச்சியும் குறிப்பிடவில்லை. இதனால் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பரந்த இடுப்பு
பரந்த இடுப்பு உள்ளவர்கள் எளிமையாக சுக பிரசவத்தில் குழந்தை பெற்று விடுவார்கள் என்று மூட நம்பிக்கை உள்ளது. அப்படியான எந்த விதமான உண்மையும் கிடையாது. குழந்தை பெற்று எடுப்பது அவர்களின் இடுப்பு எலும்பின் வலுவை பொறுத்தே அமையும்.

கைகளை உயர்த்துதல்
உங்கள் கைகளை உங்கள் தோள்பட்டைக்கு மேல் உயர்த்துவது குழந்தையின் கழுத்தை தொப்புள் கொடி நெறிக்கும் என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், பெண்ணின் கை அசைவுகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இதனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

இறைச்சி தவிர்த்தல்
பெண்கள் தனது கர்ப்ப காலத்தின் போது இறைச்சிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று மூட நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால் இறைச்சியில் இருக்கும் பாக்டீரியாக்கள் கருச்சிதைவுக்கு வழி வகுக்கும். எனவே எந்த உணவாக இருந்தாலும் முற்றிலுமாக நீராவி வரும் வரை கொதிக்க வைத்து சூடான உணவை உண்ணலாம்.

ஆண் அல்லது பெண்
கர்ப்ப காலத்தில் பெண்களின் வயிறை பார்த்து ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பலர் பரிந்துரைக்காரர்கள். வயிறு பெரிதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும், பரந்து இருந்தால் பெண் குழந்தை என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களின் உடல் அமைப்பு மற்றும் தசைகளை பொறுத்துதான் வயிறு விரிவடையும். இது எந்த விதத்திலும் குழந்தையின் பாலினத்தை கணிக்காது.

இரண்டு முறை உணவு
கர்ப்ப காலத்தின் போது இரண்டு முறை உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் உண்ணும் உணவு சிறிய அளவில் இருந்தாலும் ஆரோக்கியமானதாக இருந்தால் போதும். கர்ப்ப காலத்தில் அதிக அளவு கலோரிகள் உங்கள் உடலுக்குத் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

உடற்பயிற்சி
கர்ப்பகாலத்தின் போது பெண்கள் முன்னை விட மிக அதிக அளவில் உடல் சோர்வாக இருப்பார்கள். கர்ப்ப காலத்தின் போது உடற்பயிற்சி செய்ய கூடாது என்பது தவறான கருத்தாகும். கர்ப்ப காலத்தின் போது செய்யும் உடற்பயிற்சி உங்கள் பிரசவத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. கர்ப்ப காலத்தின் போது செய்ய கூடிய உடற்பயிற்சிகளை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கடைபிடியுங்கள்.



Click it and Unblock the Notifications