Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
விந்தணுக்களின் ஆரோக்கியத்தை ஒரு டம்ளர் நீரை வெச்சே தெரிஞ்சுக்கலாம்... எப்படின்னு படிச்சு பாருங்க...
விந்தணு ஆரோக்கியம் என்பது அதன் அளவு, இயக்கம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்தது. வீட்டிலேயே எளிமையாக ஒரு டம்ளர் நீரின் மூலம் விந்தணுக்களின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்ளலாம் தெரியுமா?
ஆண்களுள் சிலர் நிச்சயம் தங்களின் விந்தணுக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். அதில் விந்தணுக்கள் எவ்வாறு நகர்கின்றன, எவ்வளவு விந்தணுக்கள் உள்ளன என்பன குறிப்பிடத்தக்கவை. உங்களுக்கு அத்தகைய அனுபவம் இல்லையென்றால், வீட்டிலேயே எளிமையாக ஒரு டம்ளர் நீரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான விந்து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். தற்போது ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் விந்தணுக்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை.
ஆனால், விந்தணு ஆரோக்கியம் என்பது அதன் அளவு, இயக்கம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்தது. இப்போது எப்படி வீட்டிலேயே விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அறிவது என்பதைக் காண்போம்.

விந்தணு சோதனைக்கு முன் பின்பற்ற வேண்டியவை:
* பொதுவாக விந்தணு சோதனையை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பாலியல் செயல்பாடுகளான உடலுறவு அல்லது சுயஇன்பம் காண்பதைத் தவிர்க்க வேண்டும்.
* இன்னும் சரியான தீர்வைப் பெற நினைத்தால், 7 நாட்களுக்கு எவ்வித பாலியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மருத்துவரும் விந்தணு சோதனைக்கு முன், இதைப் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் ஒருவேளை அவ்வாறு விந்தணுக்களை சோதனைக்கு முதல் நாள் வரை வெளியேற்றினால், உடலில் விந்தணுக்களின் அளவு குறைவாக இருக்கும். இந்நிலையில் சோதனையை மேற்கொள்வது தவறான முடிவையே காட்டும்.

விந்தணு பரிசோதனைக்கு தயாராவது எப்படி?
விந்தணுக்களை பரிசோதனை செய்வதற்கு, முதலில் சுயஇன்பத்தின் மூலம், விந்தணுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு நீங்கள் கைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் சுயஇன்ப கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

எவ்வளவு மணிநேரத்திற்குள் சோதிக்க வேண்டும்?
சோதனைக்கு பயன்படுத்தும் விந்தணு மாதிரிகள் பிரஷ்ஷாக இருப்பது நல்லது. வேண்டுமானால், விந்தணு மாதிரிகளை சேகரித்த பின், அதை அறை வெப்பநிலையில் வைத்து, 1 மணிநேரத்திற்குள் சோதித்துவிட வேண்டும். முக்கியமாக விந்தணு சோதனையை மேற்கொள்ளும் முன் மது அருந்தக்கூடாது.

நீரைக் கொண்டு சோதிப்பது எப்படி?
ஒரு டம்ளர் நீரைக் கொண்டே விந்தணு பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த நீர் பரிசோதனையில் விந்தணுக்கள் நல்ல தரமாக, ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மட்டுமே அறிய முடியும்.
இதற்கு தேவையானது ஒரு டம்ளர், தண்ணீர் மற்றும் விந்தணு. முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் சேகரித்த விந்தணு மாதிரிகளை உற்றுங்கள். 2-3 நிமிடம் காத்திருங்கள். ஆனால் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

முடிவு:
* நீரில் விந்தணுக்கள் மூழ்கி டம்ளரின் அடியே சென்றால், உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக உள்ளது என்று அர்த்தம்.
* ஒருவேளை விந்தணுக்கள் முழுமையாக மூழ்காமல் மையப்பகுதியில் இருந்தால், மிதமான தரத்தில் உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான முடிவைப் பெறுபவர்கள், விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்ண ஆரம்பிப்பது நல்லது.
* விந்தணுக்கள் மூழ்காமல் மேலே மிதந்து கொண்டிருந்தால், விந்தணுக்களின் தரம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உடனே வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.



Click it and Unblock the Notifications