For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு குழந்தை போதும்னு நினைக்கிறீங்களா? இரண்டாவது குழந்தை பெத்துக்க வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா?

சில சமயங்களில், ஒரு குழந்தையின் பிரச்சினைகளை சமாளிக்க அல்லது புரிந்துகொள்ள பெற்றோர்களுக்கு தெரியவில்லை. இது தலைமுறை வேறுபாடுகள் அல்லது மனம் திறந்து பேசாமல் இருப்பதானால் இருக்கலாம்.

|

கல்யாணம் ஆகவில்லை என்றால்? எப்ப கல்யாணம் என்று கேட்டு நச்சரிக்கும் உறவுகள் மற்றும் அக்கம்பக்கத்தினரை நாம் பார்த்திருப்போம். அதேபோல, கல்யாணமானவர்களிடம் இன்னும் குழந்தை இல்லையா? என்ற கேள்வியை கேட்பார்கள். முதல் குழந்தை பிறந்ததும், 'இரண்டாவது குழந்தை எப்போது?' என்ற கேள்வியை மீண்டும் ஆரம்பித்துவிடுவார்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள். அந்த அழுத்தத்தை பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பார்கள். இது உங்களுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, இதில் அடுத்தவர்களின் கருத்து தேவையில்லை.

compelling-reasons-you-should-plan-a-second-child-in-tamil

ஆனால், நீங்கள் ஏன் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட வேண்டும் என்பதற்கான உறுதியான காரணங்கள் சில உள்ளன. இது உங்களுக்கு மற்றொரு குழந்தை வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவும். அவை, என்னென்ன காரணங்கள் என்று இக்கட்டுரையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடன்பிறப்புகள் எப்பொழுதும் துணையாக இருப்பார்கள்

உடன்பிறப்புகள் எப்பொழுதும் துணையாக இருப்பார்கள்

நீங்கள் அருகில் இல்லாதபோதும் உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் போன பிறகு குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று கவலைப்படுகிறார்கள். இதனால், மற்றொரு குழந்தையைப் பெற்றெடுப்பது நல்லது. அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் உடன்பிறப்புகளுடன் நெருக்கமாக இருந்தால், உங்கள் குழந்தை வளரும்போது நீங்கள் கொண்டிருந்த அதே திடமான ஆதரவை அவர்களின் உடன்பிறந்தவர்களிடம் கொண்டிருப்பார்கள்.

கர்ப்பத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்

கர்ப்பத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்

நீங்கள் முதல்முறை கர்ப்பமாக இருந்தபோது, நல்லது, கெட்டது மற்றும் விளைவுகள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள். முதல் முறையாக பெற்றோராக ஆகும்போது, உங்களுக்கு பல விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். எல்லா தகவலையும் நீங்கள் சேகரித்து வைத்திருப்பீர்கள். அதனால், இரண்டாவது முறை கர்ப்பமாகும்போது, நீங்களே எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொள்வீர்கள்.

ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்

ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்

பிரசவத்தின் போது, நீங்கள் அடைந்த வலி மற்றும் சாவல்களை எவ்வாறு கையாள்வது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் முதல் கர்ப்பத்தின் போது உங்களுக்கு உதவிய அதே மகளிர் மருத்துவ நிபுணரை நீங்கள் சந்திக்கலாம். மருத்துவ ரீதியாக, இரண்டாவது பிரசவத்திற்கும் ஆலோசனை வழங்குவார்கள்.

கூடுதல் கவனிப்பு கிடைக்கும்

கூடுதல் கவனிப்பு கிடைக்கும்

சில சமயங்களில், ஒரு குழந்தையின் பிரச்சினைகளை சமாளிக்க அல்லது புரிந்துகொள்ள பெற்றோர்களுக்கு தெரியவில்லை. இது தலைமுறை வேறுபாடுகள் அல்லது மனம் திறந்து பேசாமல் இருப்பதானால் இருக்கலாம். உங்களின் கோபத்தால், உங்கள் ஒரு குழந்தை உங்களைவிட்டு விலகிச் செல்லும். ஆனால், உடன்பிறந்தவர்களுக்கு தங்கள் சிறிய உடன்பிறப்பை எவ்வாறு சிறப்பாகக் கையாள்வது என்பது தெரியும். உங்களுக்குத் தேவைப்படும்போது கூடுதல் கவனிப்பையும் பாதுகாப்பையும் உங்கள் குழந்தைகள் இருவரும் மாறிமாறி பெற்றுக்கொள்வார்கள். அவர்களின் வாழ்க்கை முழுக்க உடன்பிறந்தவர்கள் உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள்.

சிக்கல்களைத் தீர்க்கும் திறன்

சிக்கல்களைத் தீர்க்கும் திறன்

வீட்டில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால், அனைத்து பிரிக்கப்படாத அன்பு மற்றும் செல்லத்தை பெறுகிறது. இது பெரும்பாலும் அவர்கள் வளரும்போது அவர்களை தவறான நபராக மாற்றுவதற்கு காரணமாகலாம். நீங்கள் குடும்பத்தில் மற்றொரு குழந்தையை அறிமுகப்படுத்தினால், இருவரும் அன்பையும் போட்டியையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். அதைப் பற்றி பேசவும், மோதல்களைத் தீர்க்கவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இது அவர்களை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்துவதோடு, அவர்களின் தொடர்பு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் உருவாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

compelling reasons you should plan a second child in tamil

Here we are talking about the compelling reasons you should plan a second child in tamil.
Story first published: Monday, November 14, 2022, 19:38 [IST]
Desktop Bottom Promotion