Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்பமாக கூடாது, ஆனா 'அது' பண்ணணும்.. எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க...
கொரோனா வைரஸ் பிறந்த குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தொற்றிக் கொள்கிறது. எனவே இந்நிலையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே சிறந்த வழி.
பல தம்பதிகளுக்கு குழந்தை வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போது கொடிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் வரை குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே சிறந்த வழி. கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தொற்றிக் கொள்வதோடு, அவர்களின் நிலைமையை மோசமாக்குவதால், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா வைரஸ் பிறந்த குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தொற்றிக் கொள்கிறது. எனவே இந்நிலையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே சிறந்த வழி. ஆனால் கொரோனா ஊரடங்கால் பல தம்பதிகள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இத்தனை நாட்களாக வேலை வேலை என்று ஒருவருக்கொருவர் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது ஊடரங்கால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடுகின்றனர். இப்படி தம்பதிகள் ஒன்றாக அதிக நேரத்தை செலவிடும் போது, இருவருக்கும் உள்ள அன்பு அதிகரித்து, உடலுறவில் ஈடுபட நேரிடுகிறது.
பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் எதிர்பாராத விதமாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டுவிட்டால், கருத்தரிக்காமல் தடுக்க ஒருசில வழிகள் உள்ளன. இங்கு கருத்தரிக்காமல் தடுக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பப்பாளி
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டால், அடுத்த 3-4 நாட்கள் பப்பாளி சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை பப்பாளியை சாப்பிட்டால், தேவையில்லாத கர்ப்பத்திற்கான வாய்ப்பு குறையும். ஆண்கள் பப்பாளியை தினமும் சாப்பிட்டால், அது விந்தணுக்களின் உற்பத்தி எண்ணிக்கையைக் குறைக்கும். அதே சமயம் பப்பாளி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், மீண்டும் பழையவாறு விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும்.

இஞ்சி
இஞ்சி மாதவிடாயைத் தூண்டும் மற்றும் தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது இஞ்சியைத் துருவி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை தினமும் இரண்டு கப் குடிக்க வேண்டும்.

ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் என்னும் பழம், இயற்கை முறையில் கரு தங்குவதைத் தடுக்கும். அதற்கு 100 கிராம் உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தை ஒரு கப் நீரில் போட்டு நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலுறவுக்கு பிறகு தினமும் 5-10 ஆப்ரிகாட் விதைகளை, மாதவிடாய் ஆரம்பிக்கும் வரை உட்கொள்ளலாம்.

உலர் அத்திப்பழம்
அத்திப்பழம் மிகச்சிறந்த பிறப்பு கட்டுப்பாட்டுப் பொருள் மற்றும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பொருளும் கூட. பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட பின், 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இல்லாவிட்டால் வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

பட்டை
பட்டை கருப்பையைத் தூண்டிவிடும் மற்றும் கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பை உண்டாக்கும். இருப்பினும், இது உடனடியாக வேலை செய்யாது. ஆகவே பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் தினமும் உட்கொள்ள வேண்டும். இருப்பினும் கருத்தரிக்காமல் இருக்க பட்டையை எடுக்கும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

வைட்டமின் சி
மற்றொரு பிறப்பு கட்டுப்பாட்டு முறை தான் வைட்டமின் சி. இது புரோஜெஸ்டிரோன் ஹார்மோனில் இடையூறை ஏற்படுத்தி, கருத்தரிப்பதைத் தடுக்கும். பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் 1500 மிகி வைட்டமின் சி மாத்திரையை தினமும் இரண்டு என 2-3 நாட்கள் உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி மாத்திரையை எடுத்தால், அது உடலில் பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதிலும் இரத்த சோகை இருப்பவர்கள் இதை எடுக்கக்கூடாது.

பெருங்காயம்
கருத்தரிக்காமல் இருக்க நினைப்பவர்கள், சுடுநீரில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் பாதுகாப்பற்ற உடலுறவால் கருத்தரிப்பதைத் தடுக்கலாம்.

வேப்பிலை
கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான இந்திய வீட்டு வைத்தியங்களில் வேம்பு ஒன்றாகும். இது இலைகள், எண்ணெய் மற்றும் இலை சாறு வடிவில் கிடைக்கிறது. வேப்ப எண்ணெய் கருப்பையில் செலுத்தப்பட்டால், 30 விநாடிகளுக்குள் விந்துவைக் கொல்லும். வேப்ப மாத்திரைகள் ஆண்களில் தற்காலிக மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.

அன்னாசிப்பழம்
அன்னாசியில் உள்ள பண்புகள், கர்ப்பப்பையில் கரு தங்குவதைத் தடுத்து, கருத்தரிக்காமல் தடுக்கும். அதற்கு பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின், கனியாத அன்னாசியை தொடர்ந்து 2-3 நாட்கள் தினமும் சாப்பிட வேண்டும்.

காட்டு சேனைக்கிழங்கு
தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கு வேறு எந்த இயற்கை வழியும் இல்லாத போது, ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் காட்டு சேனைக்கிழங்கை உட்கொள்ள முயற்சிக்கவும். இது பிறப்பு கட்டுப்பாட்டு தீர்வாக வேலை செய்ய ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். எனவே ஒரு நாளும் தவறாமல் இதை உட்கொள்ளுங்கள்.
குறிப்பு: கருத்தரித்து விட்டு அக்கருவைக் கலைக்க நினைப்பதற்கு முன், கரு உருவாகாமல் இருக்கும் கருத்தடை சாதனங்களை மறவாமல் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனால் ஒரு உயிரை அழிக்கும் பழியை வாழ்நாள் சுமக்க வேண்டியிருக்காது.



Click it and Unblock the Notifications