Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது? என்ன செஞ்சா பிரச்னை தீரும்?
ஆண்களுக்குப் பாலியல் உறவில் திருப்தி இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய மிக விரிவான தொகுப்பு தான் இது.
வயதாகி விட்டால் தாம்பத்ய உறவுமேல் ஆண்களுக்கு விருப்பம் குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. வயதான ஆண்களால் உடலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாதென்றும் இணையை திருப்திப்படுத்த இயலாதென்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல.

உடலுறவு திருப்திகரமாக இல்லாததற்கு காரணமாகும் பல விஷயங்களும் வயது கூடுவது ஒரு காரணம் மட்டுமே. வயது அதிகரிப்பதால்தான் செக்ஸில் வெற்றிகரமாக ஈடுபட இயலவில்லை என்று கூற இயலாது.

குறையும் பாலியல் நாட்டம்
பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு பாலுறவில் நாட்டம் குறைவது அரிதான ஒன்று. பெண்களுக்கான பல்வேறு பாலுறவு தொடர்புடைய பிரச்னைகளோடு ஒப்பிடும்போது விறைப்புத் தன்மை குறைபாடு ஆண்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்னை ஆகும். பாலியல் நாட்டத்தில் குறைபாடு இருப்பதால் உடலுறவில் ஈடுபட இயலாத நிலையை ஓர் ஆண் அடைந்துவிட்டார் என்று கூற இயலாது. உறவின்மேல் விருப்பம் எழுவதற்கே வாய்ப்பு இல்லை என்று புரிந்து கொள்ளலாம். பாலியல் நாட்டம் குறைவதற்கு உடல்ரீதியான, உணர்ச்சிரீதியான மற்றும் மனோரீதியான பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

என்ன காரணம்?
மது பழக்கம், போதை மருந்து, உடல் பருமன், இரத்த சோகை, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவு மற்றும் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு ஆகியவையும் ஆண்களின் பாலியல் நாட்டம் குறைவதற்கு காரணமாகலாம். இதில் உடல் பருமன் அதிக பங்கு வகிக்கும் வேளையில் டெஸ்டோஸ்டீரான் குறைவு குறைந்த பங்கு வகிக்கிறது. மனச்சோர்வு, மனஅழுத்தம், வேலைப்பளு, குழந்தை பருவ முழுமையற்ற நினைவுகள், உறவுகளுக்கிடையேயான பிரச்னை மற்றும் பாலுறவு முறைகளில் பிரச்னை ஆகியவை பாலியல் நாட்டம் குறைவதற்கான சில உணர்ச்சி மற்றும் மனோரீதியான பிரச்னைகளாகும்.

விறைப்புத் தன்மை குறைபாடு
வயதான ஆண்கள் மத்தியில் ஆண்மை குறைவு என்று கூறப்படும் விறைப்புத்தன்மை குறைபாடு பொதுவாக காணப்படுவதாகும். ஆண்மை குறைவு என்பது, ஆண்குறி விறைப்படையாத நிலை மற்றும் உடலுறவுத் தேவையான நேரம் வரை விறைப்பை தக்க வைத்துக் கொள்ள இயலாத நிலையை குறிக்கும். ஆண்மைக் குறைவினால், குறி விறைப்பாவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் பிடிக்கும். ஆண் குறியின் விறைத்த நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்பதோ, தேவையானதை காட்டிலும் அதிக நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதோ இல்லை.

விறைப்புப் பிரச்சினை
உடலுறவில் உச்சநிலையை எட்டிய பிறகு குறி விறைப்பு நிலையிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்கு மாறிடக் கூடும். மீண்டும் விறைப்படைய முன்பை காட்டிலும் அதிக நேரம் பிடிக்கக்கூடும். மேலும், நவீன மருத்துவ அறிவியலில் விறைப்புத் தன்மை குறைபாடு என்ற ஒன்றே இல்லை. விறைப்புத் தன்மையில் குறைபாடு என்ற அனுபவம் அடிக்கடி ஏற்படுவதாக உணர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

உணர்ச்சி சமநிலையின்மை
இணை மற்றும் குடும்பத்தினருடனான உறவில் பிரச்னை இருப்பதும் பாலுறவில் முழு மகிழ்ச்சியை அடைய முடியாமைக்கு காரணமாக இருக்கலாம். இணையுடனான உறவு சரியாக, திருப்திகரமாக இல்லையென்றால் மனஅழுத்தம், முறையற்ற உறவு, சலிப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
அவை உடலுறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப பிரச்னை, அன்பானோரின் மறைவு போன்ற உணர்ச்சிகர நிகழ்வுகளும் தாம்பத்ய உறவை பாதிக்கக்கூடியவை. உணர்ச்சிகரமான சூழ்நிலை வழியே ஆண் கடந்து செல்லும்போது அவனால் முழு மனதுடன் உடலுறவில் ஈடுபட இயலாது.

நோய்கள்
சில வியாதிகள், உடற்குறைபாடுகள் மற்றும் அறுவை சிகிச்சைகள், ஆண்களின் பாலுறவு வேட்கையை, ஈடுபாட்டை பாதிக்கும். நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் ஆண்களின் தாம்பத்யச் செயல்பாட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்குறி விறைப்புத் தன்மை குறைபாட்டுக்கும் நீரிழிவு காரணமாகும்.
சிறுநீர்ப்பை பெலவீனத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்த இயலாததால் உடலுறவு கொள்வதில் சிரமம் இருக்கும். ஆகவே செக்ஸ் வைத்துக் கொள்ள தயங்குவர். உறவு கொள்ளும் நிலையை மாற்றுவதால் இப்பிரச்னையை தவிர்க்கலாம். சிறுநீர் பை பெலவீனத்தை மருத்துவ சிகிச்சை மூலம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
