பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை பலப்படுத்த, தூய்மைப்படுத்த குளவிக் கூட்டை பயன்படுத்துகிறார்களா?

மனிதர்கள் தங்கள் பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்; இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை பலப்படுத்த, தூய்மைப்படுத்த ஏன் குளவிக் கூட்டை பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம்!

பொதுவாகவே ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலருக்குமே ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடையும் பொழுது, அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், அவர்களுக்கு பாலின உணர்வுகளும், பாலியல் உணர்வுகளும் மேல் எலும்பும். அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே ஏதோ ஒரு நேரத்தில், ஏதேனும் ஒரு கலவி சம்பந்தப்பட்ட அல்லது உணர்வை தூண்டக்கூடிய காட்சியை பார்க்கும் பொழுது ஆண் மற்றும் பெண் இருபாலரின் உடலிலும் ஏற்படும்.

wasp nests for vaginal rejuvenation

ஏற்படும் உணர்வை எப்படி கட்டுப்படுத்துவது என்று அறியாமல், அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பாடுபட்டவர்கள் பலர்; அந்த நேரத்தில் தவறான நபர்களின் வழி காட்டுதலால், தவறான வழிக்கு சென்று வாழ்வை தொலைத்தவர்கள் பலர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறு வாழ்வின் பருவ கால கட்டத்தில் ஏற்படும் உணர்வுகளை கட்டுப்படுத்த சுய இன்பம் காணுதல் உதவுகிறது; ஆனால், இதை தொடர்ந்து செய்வது மன நோயாக மாறி வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகையால், இந்த உணர்வுகள் உடலில் ஏற்படும் பொழுது, அவற்றின் நினைவுகளில் இருந்து விடுபட்டு வேறு விஷயங்களை பற்றி சிந்திக்க அல்லது வேறு விஷயங்களை செய்ய ஆரம்பித்து விட வேண்டும்.

மாற்றி விடுங்கள்!

மாற்றி விடுங்கள்!

நீங்கள் இருக்கும் இடம் அவ்வித உணர்வுகளை உங்களுள் தூண்டுவதாய் தோன்றினால், அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுங்கள்; உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் நபர்கள், அந்த உணர்வுகளை உங்களுள் தூண்ட முயன்றால், வேறு நபர்களுடன் சேர்ந்து வேறு விஷயங்களை உரையாட தொடங்குங்கள்! இந்த மாதிரியான கட்டுப்பாடு எல்லாம், கல்யாணம் ஆகும் வரை மட்டுமே அல்லது உங்கள் வாழ்வில் சரியான நிலையை, வயதை எட்டும் வரை மட்டுமே!

திருமணமான நபர்கள்!

திருமணமான நபர்கள்!

ஆனால், சில சமயங்களில் துரதிர்ஷ்ட வசமாக, திருமணமான நபர்கள் கூட சுய இன்பம் காண்கிறார்கள்; அது நல்லது அல்ல. அம்மாதிரியான உணர்வுகள் எழுந்தால், உடனே உங்கள் துணையை நாடி சென்று ஆக வேண்டிய விஷயங்களை பாருங்கள்! வீணாக உங்கள் மன நிலை கெட நீங்களே காரணம் ஆக வேண்டாம்!

பலர் சுய இன்பம் காணுதல் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு கூட இந்த விஷயத்தில் ஈடுபடுவது உண்டு; சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் திருமணமான மற்றும் தாயான பெண்களை குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன.

சமீபத்திய ஆய்வு!

சமீபத்திய ஆய்வு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், திருமணமான மற்றும் குழந்தை பெற்று எடுத்த தாய்மார்கள் தங்களின் பிறப்புறுப்பில் குளவிக் கூட்டை, உடைந்த குளவி முட்டைகளை விட்டு சுய இன்பம் அல்லது ஒரு வித இன்பத்தை அனுபவிப்பதாகவும், சமீப காலமாக பல பெண்கள் இந்த செய்முறையை தங்கள் பிறப்புறுப்பில் நடத்தி வருவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

வெளியான தகவல்கள்!

வெளியான தகவல்கள்!

அதாவது குளவிக் கூட்டை அல்லது குளவி முட்டைகளை பயன்படுத்தினால், பிறப்புறுப்பு தூய்மை அடையும் என்றும், பலமுறை கலவி உள்நுழைத்தல் நிகழ்வால் தளர்ந்து போன, பெண்ணின் பிறப்புறுப்பு இந்த குளவி கூட்டினால் மீண்டும் பழைய நிலையை அதாவது தளர்ந்து போன பிறப்புறுப்பு மீண்டும் சற்று இறுக்கம் ஆகும் என்றும், இந்த குளவி கூட்டை பிறப்புறுப்பில் பயன்படுத்துவது கர்ப்ப பையை திடமாக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை அறிந்த பெண்கள் இந்த செயல் முறையை தங்களின் பிறப்புறுப்பில் செய்து பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது உண்மையா?

இது உண்மையா?

இந்த தகவல்களில் பாதி உண்மை உள்ளது; நிறைய பொய் உள்ளது என்று கூறலாம். குளவியின் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் மற்றும் அந்த கூடு கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கூட்டில் இருக்கும் சத்துக்கள் ஒரு இடத்தையோ, ஒரு பொருளையோ தூய்மைப்படுத்த, பலப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை தூய்மைப்படுத்த பயன்படுத்துவது தூய்மை என்ற ஒரு நன்மையை வழங்கி, அவர்தம் உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடலாம்.

பொடியை பயன்படுத்தும் அவலம்!

பொடியை பயன்படுத்தும் அவலம்!

பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று வெளியான தகவலுக்கு பின், இந்த குளவி கூட்டை பொடி செய்து, குளவி முட்டைகளை பொடி செய்து அதை பெண்களுக்கு விற்கும் கூட்டமும், சந்தையும் உருவாகி வருகின்றன. உண்மை நிலையை உணராத பெண்களும், இந்த குளவி கூட்டினை பற்றிய தகவலை கண்மூடித் தனமாக உண்மை என்று நம்பிக் கொண்டு, இந்த பொடியை வாங்கி பயன்படுத்த முன் வந்துள்ளதாக கேள்வி படுகிறோம்.

எதற்காக செய்கின்றனர்?

எதற்காக செய்கின்றனர்?

பெண்கள் இந்த விஷயத்தை எதற்காக செய்கின்றனர் என்று சற்று யோசித்து பார்த்தால், தங்கள் பிறப்புறுப்பை தூய்மை படுத்துவதும், அதை பழைய நிலைக்கு கொண்டு வருவதும் தங்கள் கணவன்மார்களை சந்தோஷ படுத்த தான்; அவர்கள் அதிக இன்பம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக தான். தங்கள் உடல் நிலைக்கு நேர போகும் ஆபத்து அறியாமல் இதை செய்ய பெண்கள் முன் வருகின்றனர்.

கணவர்களின் கடமை!

கணவர்களின் கடமை!

எல்லா பெண்களும் தங்கள் கணவருக்காக என்று செய்து கொள்வது இல்லை; பெண்களில் சிலர் தங்கள் சுய லாபத்திற்காக கூட இதை செய்து கொள்வது உண்டு. ஆனால், உங்களுக்கு உங்கள் மனைவியை பற்றி தெரியும்; உங்கள் மனைவி இது போன்ற காரியங்களை செய்கிறார் என்றால், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தவும்.

"எப்படி இருந்தாலும் நீ எனக்கு அழகி தான்" என்று அவர்களை சமாதான படுத்தி, அவர்தம் மனதை மாற்ற முயல்வது நல்லது. மனைவிகள் அறியாமல் செய்யும் குற்றங்களை சரி செய்ய வேண்டியது, கணவர்களின் கடமை ஆகும்! உங்கள் கடமையை சரியாக ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் பதிப்பை முடிக்கிறோம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 15, 2018, 12:20 [IST]
Desktop Bottom Promotion