Latest Updates
-
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க
வாக்கும் டியூப் பிரசவ முறை குறித்த முழுத்தகவல்கள்: நாம் அறியாதவை!
பிரசவம் என்பது மிகவும் கடினமான விஷயம் மற்றும் அது பெண்களின் மறுபிறப்பு என்று கூறப்படுகிறது; வாக்கும் டியூப் பிரசவ முறை குறித்த முழுத்தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்ற ஒரு கடினமான செயல்; பெண்கள் தங்கள் குழந்தைகளை பிரசவிக்க தங்கள் உயிரை இழந்து, திரும்ப பெறுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். பெண்களின் பிரசவம் பொதுவாக சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் என்ற இரண்டு முறைகளில் நடந்து வருகிறது.

நண்பன் மற்றும் எந்திரன் படங்கள் வெளிவந்த பொழுது தான் இரண்டு வித்தியாசமான பிரசவ முறைகளை மக்கள் பார்த்து அறிந்திருப்பர்.

வித்தியாசமான பிரசவ முறைகள்
அவற்றில் ஒன்று குழந்தையின் தலையில் கொடி சுற்றிக் கொண்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது; மற்றொன்று குழந்தையை தாயால் வெளியே தள்ள முடியாத நிலை அல்லது குழந்தை வெளிவருவதில் குழந்தையின் தரப்பில் இருந்து ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அந்த சமயத்தில் குழந்தையை எப்படி வெளியே எடுப்பது என்பது.
இந்த இரண்டு முறைகளில் முதல் முறையின் பெயர் பிரீச் குழந்தை என்பதாகும்; மற்றொன்றின் பெயர் வாக்கும் டியூப் பிரசவ முறை என்பதாகும். இந்த பதிப்பில் நாம் வாக்கும் டியூப் முறையை பற்றி பார்த்து படித்தறிய இருக்கிறோம், வாருங்கள் பதிப்பிற்குள் செல்லலாம்.

வாக்கும் பிரசவம் என்றால் என்ன?
வாக்கும் பிரசவம் என்பது ஒரு அழுத்தம் கொடுக்கும் கருவியில் ஒரு குழாயை மாட்டி வைத்திருப்பர்; கருவி கொடுக்கும் அழுத்தத்தின் அளவை பொறுத்து குழாய் எந்த பொருளை எடுக்க வேண்டுமோ, அதனை உறிஞ்சி எடுக்கும். இந்த முறையை பிரசவத்தில் தாய் குழந்தையை அழுத்தம் அளித்து வெளியேற்ற முடியவில்லை எனில், அல்லது குழந்தையின் உடலில் ஏற்பட்டு இருக்கும் வேறு பிரச்சனைகளால் குழந்தையால் வெளிவர முடியவில்லை எனில், இந்த வாக்கும் டியூபை தாயின் பிறப்புறுப்பில் செலுத்தி, அழுத்தம் கொடுத்து குழந்தையின் தலையை வெளியே இழுக்க முயற்சிப்பர்.
குழந்தையின் தலை வெளி வந்து விட்டால் மற்ற அனைத்தும் பாகங்களும் எளிதாக வந்து விடும். இந்த முறையில் சரியாக குழாய் குழந்தையின் தலையை பற்றி வெளியே எந்த வித சலம்பலும் இன்றி வெளியே எடுத்து விடும். இந்த முறையை கிவி பிரசவம் என்றும் அழைப்பர்.

எப்பொழுது கையாளப்படும்?
இந்த பிரசவ முறையை எப்பொழுது கையாள்வார்கள் என்றால், பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு பல மணி நேரங்களாக அழுத்தம் கொடுத்தும் குழந்தை வெளி வரவில்லை எனில் இந்த முறையை கையாள்வர்; மேலும் குழந்தையின் உடலில் அதன் இதயத்துடிப்பு குறைதல், குழந்தையின் நிலை மாறி இருத்தல், குழந்தையால் தாயின் பிறப்புறுப்பை அடைய முடியாத நிலையில் இந்த முறையை கையாள்வர்.

தாயின் நிலை.!
தாய் பிரசவத்தின் பொழுது அழுத்தம் கொடுக்க முடியாமல் மயங்கி விட்டால், அவரின் சக்தி குறைந்து விட்டால், தாயின் பிறப்புறுப்பு துளை மிகவும் சிறிதாக இருந்தால், பெண்ணின் கர்ப்ப காலம் 34 வாரங்களை பூர்த்தி செய்யாத நிலையில் இருந்தால் கண்டிப்பாக வாக்கும் டியூப் பிரசவ முறை கையாளப்படும். இந்த வாக்கும் டியூப் பிரசவ முறை சுகப்பிரவம் நிகழும் பெண்களில் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டால் மட்டுமே கண்டறியப்படும்.

எப்படி நடத்தப்படும்?
இந்த வாக்கும் டியூப் பிரசவ முறையில் தாயின் கால்கள் நன்றாக அகன்று ஒரு சிறு மேஜை மேல் வைக்கப்பட்டு, வாக்கும் குழாய் தாயின் பிறப்புறுப்புக்குள் செலுத்தப்படும்; அது சரியாக குழந்தையின் தலையை பற்றும் வண்ணம், மற்ற எந்தவொரு திசுக்களையும் பாதித்து விடாமல், பற்றி விடமால் இருக்க மருத்துவர் தன் கையை உள்ளே விட்டு ஒரு முறை சோதித்து கொள்வார்.
மருத்துவர் சோதனை செய்து முடித்த பின், குழந்தையை வெளியே எடுப்பதற்கு தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படும். கொடுக்கப்படும் அழுத்தம் குழந்தையின் நிலைக்கு ஏற்ப, குழந்தை வெளி வருவதற்கு ஏற்ப அதிகம் ஆகலாம் அல்லது குறையலாம். இவ்வாறு அழுத்தம் அளிக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

தாய்க்கு ஏற்படும் விளைவுகள்!
இவ்வாறு வாக்கும் டியூப் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதால், தாய்க்கு பிறப்புறுப்பில் அதீத வலி மற்றும் காயங்கள் ஏற்படலாம். சதை கிழிதல் பெரிதாகலாம்; மேலும் தாயின் சிறுநீரக உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம். பிறப்புறுப்பு தசைகள் பலவீனமாதல், தசைகள் கிழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்!
வாக்கும் டியூப் முறை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தைகளுக்கு பேச முடியாத நிலை அல்லது நியாபகங்கள் அழிந்த ஒரு நிலை உருவாகலாம் அதாவது மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். தலையின் எலும்புகள் மற்றும் உட்புற அடுக்குகளில் பாதிப்புகள் ஏற்படலாம், இதனால் குழந்தைக்கு மூளையிலும் அதிக பாதிப்புகள் உண்டாகலாம்.

நரம்பு பாதிப்புகள்
ரெட்டினா பாதிப்பு ஏற்பட்டு கண் பார்வையில் பாதிப்பு நேரலாம்; மற்றும் தலையில் வீக்கம் போன்றவையும் உருவாகலாம். குழந்தையின் முடிகள் வளராமல் போகும் ன் இல்லை கூட ஏற்படலாம்.குழந்தையின் தலையில் காணப்படும் இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளில் உடைதல் அல்லது பிற பாதிப்புகள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications