Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க
Bangalore Idli Sambar Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி அல்லது செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் செய்தால், சட்னியை இனிமேல் கேட்கமாட்டார்கள். அதோடு இந்த சாம்பாரை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

கர்நாடகா ஸ்டைல் இட்லி சாம்பார் நம்மூர் சாம்பார் போல அல்லாமல் கொஞ்சம் புளிப்பு, இனிப்பு மற்றும் காரம் என அனைத்து சுவையும் கலந்திருக்கும். இந்த சாம்பாரை இட்லியுடன் தொட்டு சாப்பிடுவதை விட தாராளமாக ஊற்றி இட்லியை ஊற வைத்து சாப்பிட்டால் அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும். இது சற்று இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இந்த சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 1 கேரட்
- 1 சிறிய உருளைக்கிழங்கு
- நெல்லிக்காய் அளவு புளி
- நெல்லிக்காய் அளவு வெல்லம்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
அரைக்க தேவையான பொருட்கள்:
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 2-3 காய்ந்த மிளகாய்
- 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 2 டீஸ்பூன் மல்லி விதை
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1 இன்ச் பட்டை
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய தக்காளி
- 2 டீஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 1 வர மிளகாய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- கேரட், உருளைக்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயத்தை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- நறுக்கிய காய்கறிகளை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள் மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
- மசாலா தயார் செய்ய முதலில் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அரைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைக்கவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைக்க வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி வர மிளகாயைச் சேர்க்கவும்.
- மிளகாய் வதங்கியதும், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மல்லி விதைகளைச் சேர்க்கவும்.
- பருப்பு வகைகள் லேசாக பொன்னிறமாக மாறும்போது, வெந்தயம், மிளகு மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- இறுதியில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி அதனுடன் துருவிய தேங்காயை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- காய்கறிகள் வெந்ததும், அதே குக்கரில் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு மற்றும் வெல்லத்தைச் சேர்க்கவும்.
- பின்னர் புளிக் கரைசலைச் சேர்க்கவும். சாம்பார் உங்களுக்குத் தேவையான பதத்திற்கு வருவதற்குத் தகுந்தவாறு தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் வரமிளகாயை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டினால் சுவையான பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications