Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும்
Chana Dal Pan Cake Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகளும், குடும்பத்தினரும் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு ஆரோக்கியமானதாகவும், அதேசமயம் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் 1/2 கப் கடலைப்பருப்பு, கீரையும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பான் கேக் செய்யலாம்.

இந்த பான் கேக் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையில் காரசாரமாக இருக்கும். முக்கியமாக இதை மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் சாப்பிடலாம். உங்கள் குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறினால், இந்த பான் கேக்கை மதிய உணவிற்கு கூட செய்து கொடுக்கலாம்.
உங்களுக்கு இந்த கடலைப்பருப்பு பான் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள் வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு பான் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் கடலைப்பருப்பு (5 மணி நேரம் ஊறவைத்தது)
- 1/2 கப் பொடியாக நறுக்கிய கீரை
- 1/2 கப் துருவிய கேரட்
- 1கொத்து கறிவேப்பிலை(பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
- 2 ஸ்பூன் தயிர்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 3 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- கடலைப்பருப்பு பான் கேக் செய்ய, ஊறவைத்த கடலைப்பருப்புடன் சுமார் ¼ கப் தண்ணீர் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- கீரை, கேரட், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், தயிர், எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஒரு தோசைக்கல்லில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் ¼ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு சிறிய கரண்டி மாவை அதன் மீது ஊற்றி அதை சின்ன பான் கேக்காக சுற்றவும்.
- 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
- இதேபோல மீதமுள்ள மாவையும் ஒவ்வொன்றாக ஊற்றி சிறிய அளவிலான பான் கேக்காக ஊற்றவும்.
- அவ்வளவுதான் சூடான மற்றும் ஆரோக்கியமான கடலைப்பருப்பு பான் கேக் ரெடி. இதை உங்களுக்கு பிடித்த சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications