Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மஞ்சள் கருவுறுதல் நிகழ உதவுகிறதா? உண்மை விவரம் என்ன?
கருவுறுதல் எனது தான் கர்ப்ப காலத்திற்கு அடிப்படை; மஞ்சளை பயன்படுத்தி கருவுறுதலை ஏற்படுத்த முடியுமா என்று இங்கு படித்து அறியலாம்.
நம் தமிழ் கலாச்சாரத்தில் எந்த ஒரு செயலை புதிதாய் தொடங்கினாலும், ஒரு புது சட்டையை போடுவதில் இருந்து, புதுமனைக்கு நிலைக்கதவு வைப்பது என சின்ன சின்ன விஷயங்களில் இருந்து, பெரிய விஷயங்கள் வரை மஞ்சள் வைத்து ஆரம்பிப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது. மஞ்சள் பற்பல மருத்துவ பயன்களையும், அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளையும் அளித்து, மனித சமுகத்திற்கு பெரும் உதவி புரிந்து வருகிறது.

மஞ்சளை பயன்படுத்தி பல நல்ல விஷயங்கள் செய்யப்பட்டு வந்தாலும், மக்கள் பலர் அறியாத ஒரு சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஒரு சில அறியப்படாத நன்மைகளையும் கூட எடுத்து இயம்ப தான் இந்த பதிப்பு!

அறியப்படாத நன்மை!
மஞ்சள் குறித்த மக்களால் அறியப்படாத அந்த நன்மையை பற்றி இந்த பத்தியில் முதலில் நாம் பார்த்து, படித்து தெரிந்து கொள்ளலாம். மஞ்சளை பயன்படுத்தி பல வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் சரி செய்வது போல, உடலின் உட்புறத்தில் ஏற்படும் காயங்களையும், பிரச்சனைகளையும் கூட சரி செய்ய இயலும்.
மஞ்சளை பயன்படுத்தினால், பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட குழந்தை பாக்கியம் கிட்டும்; அதாவது மஞ்சள் கருவுதல் நிகழ்வில் பெரிதும் உதவுகிறது என்பது மக்கள் அறியாத மஞ்சளின் மற்ற ஒரு பயன்பாடு!

மருத்துவர் வேண்டாம்!
உங்கள் உடலின் இருக்கும் பிரச்சனைகளால் தான் பெரும்பாலும் கருவுறுதல் தடை படும். அப்படி கருவுறுதல் தடை படும் பொழுது, நாம் உடனே நாடுவது கோயில் குளத்தை, ஜோசியரை, பின் மருத்துவனையை. இந்த மாதிரியான செயல்பாடுகளில் இருந்து நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தை பிறப்பு தள்ளிப்போனால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து என்ன பிரச்சனை என்றும், அதன் தீவிரம் என்ன என்றும் தெரிந்து கொள்ளுங்கள்!

அடுத்து செய்ய வேண்டியது!
பின்னர், உடலுள் ஏற்பட்ட பிரச்சனை மிகவும் தீவிரமானதாக இருந்தால், மருத்துவ ஆலோசனைப்படி செல்வது நல்லது; அதுவே பிரச்சனை மிகவும் சாதாரணமானதாக, தீவிரம் குறைந்து காணப்பட்டால், அந்த சமயத்தில் நீங்கள் வீட்டு வைத்திய முறையை ஓரிரு முறை முயற்சித்து பார்க்கலாம்; உங்களுக்கு வீட்டு வைத்தியத்தின் மீது நம்பிக்கை இருந்தால்!
ஆனால் அதிக தீவிரம் கொண்ட வீட்டு வைத்திய முறையை நீங்கள் கடைபிடிப்பதாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை செய்து பின் மேற்கொள்ளவும்.!

ஆணில் கருவுறுதல்!
ஆண்களின் உடலில் குறைவான குழந்தை பிறப்புக்கு காரணமான ஹார்மோன் செயல்பாடுகள், தைராயிடு பிரச்னை மற்றும் மன அழுத்தம், வருத்தம், வெரிகோஸ் வெய்ன் என்னும் பிரச்சனை போன்றவை காணப்பட்டால், அச்சமயம் கருவுறுதல் தடைபட நேரிடும். அந்த சமயத்தில் ஆண்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள இந்த எல்லா வித பிரச்சனைகளையும் மஞ்சளின் உதவியை கொண்டு சரி செய்து விடலாம்.

பெண்ணில் கருவுறுதல்!
பெண்களின் உடலிலும் ஆண்களைப் போலவே, குழந்தை பிரபுக்கள் ஹார்மோன் உறைவு, தைராயிடு பிரச்சனை, மன வருத்தம், அழுத்தம் மற்றும் பெலோப்பியன் குழாய் பிரச்சனை போன்றவை இருந்தால், பெண்களின் உடலில் கருவுறுதல் தடை படலாம். எனவே, பெண்கள் தங்களின் இந்த குறைபாட்டினை நிறையாக்க மஞ்சளின் உதவியை நாடினால் போதுமானது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்ணுக்கோ ஆணுக்கோ மேற்கூறிய பிரச்சனைகளால் குழந்தை பிறப்பு நிகழவில்லை எனில் மட்டுமே மஞ்சள் உதவும்.

எப்படி உதவும்?
,மஞ்சளில் குர்குமின் எனும் பொருள் உள்ளது. இது உடலின் தைராயிடு அளவை சரி செய்வது, வருத்தத்தை போக்குவது போன்ற விஷயங்களில் பெரிதும் உதவும். இந்த பொருள் குழந்தை பிறப்பு தொடர்பான மேற்கூறிய பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக நிவாரணம் தரும். மஞ்சளில் இது தவிர பல சத்துக்கள் உள்ளன; அதனால், தான் மஞ்சள் அழகு, ஆரோக்கியம், கிருமிநாசினி ,மற்றும் சமையல் என பல வகைகளில் பயன் படுகிறது; பயன்படுத்தப்படுகிறது.

எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
பெண்களும் சரி, ஆண்களும் சரி தங்கள் உடலின் பிரச்சனையை சரி செய்து, தங்களுக்கு என ஒரு குழந்தையை பெற்று எடுக்க, மஞ்சள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியாகி விட்டது; அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது மஞ்சளை எப்படி பயன்படுத்துவது, எப்படி எடுத்துக் கொள்வது என்றால், மஞ்சளை பாலில் கலந்து மஞ்சள் பாலாக, மஞ்சள் சேர்த்த மசாலா சாதம், மஞ்சள் சேர்த்த ஸ்மூத்தி வகை என்று உணவு மூலமாக உடலுக்கு தேவையான அளவு, உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்டிப்பாக இந்த முறையை சரியாக, தொடர்ந்து பின்பற்றி வந்தால், கட்டாயம் ஆண்களாலும் பெண்கலாளும் கருவுறுதல் பிரச்சனையை வெல்ல முடியும்!



Click it and Unblock the Notifications











