For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் கர்ப்பகாலத்தை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

மனைவியின் கர்ப்பகாலத்தில் ஆண்கள் அவர்களை எவ்வாறு கவனித்து கொள்ளவேண்டும்

By Saranraj
|

ஆணும் பெண்ணும் சமம் என்று வாய்வலிக்க கூறினாலும் கர்ப்பகாலம் என்று வரும்போது பெண்கள் ஒருபடி மேலே சென்றுவிடுகின்றனர். கர்ப்பகாலத்தில் பெண்கள் குழந்தையை வயிற்றில் சுமந்தால் ஆண்கள் அவர்களை மனதில் சுமக்க வேண்டும். தான் அப்பாவாகி விட்டோம், இன்னும் சில மாதத்தில் நம் குழந்தை நம் கையில் வந்துவிடும் என கனவில் மிதக்காமல் தங்களுடைய குழந்தையை பத்திரமாக பெற்றெடுக்க மனைவி படும் கஷ்டத்தை உணர முயற்சிக்க வேண்டும்.

Pregnancy

கர்ப்பகாலத்தை பெண்கள் மனதளவில் மகிழ்ச்சியாக கருதினாலும் உடலளவில் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்களால் குழந்தையை சுமப்பதில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும் அவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்களின் வலிகளை புரிந்து கொண்டு அதை குறைக்கவும் முயற்சி செய்ய வேண்டியது அனைத்து ஆண்களின் கடமையாகும். நினைவில் கொள்ளுங்கள் பிரசவம் என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்புடையதல்ல. மனைவியின் கர்ப்பகாலம் குறித்து ஆண்கள் தெரிந்து கொள்ளவேண்டியவற்றை இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வலி

1. வலி

கர்ப்பகால மற்றும் பிரசவ வலி குறித்து நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம் ஆனால் அது நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடுமையானது. எந்நேரமும் முதுகு வலி, தலைவலி, கால் வலி என அவர்கள் புலம்புவது உங்களை எரிச்சலடைய செய்யலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் உங்கள் மனைவி இப்பொழுது ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர். உங்கள் குழந்தைக்கும் சேர்த்து அவர் அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். எனவே இதுபோன்ற வலிகள் ஏற்படுவது சகஜம்தான். உங்களால் அவர் வலியை அனுபவிக்க முடியாது ஆனால் உணர முடியும். எனவே அதனை உணர்ந்து அவர்கள் மேல் கோபப்படாமல் பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் அவர்களின் பலமாக நீங்கள்தான் இருக்க வேண்டும். வீட்டு வேலைகளில் உதவுதல், காலை அமுக்கி விடுதல் போன்ற சிறு சிறு வேலைகள் கூட உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக்கும் மேலும் தைரியத்தை தரும்.

2. உணவு

2. உணவு

முன்னேரே கூறியது போல அவர் இப்போது ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர். எனவே உங்கள் குழந்தைக்கும் சேர்த்து அவர் சாப்பிட வேண்டும். அவருக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுக்காமல் சத்தான உணவுகளையும் கொடுப்பதில் உறுதியாய் இருங்கள். இந்த காலகட்டத்தில் வாந்தி, மயக்கம் போன்றவற்றால் அவரால் சரியாக சாப்பிட இயலாது, இருந்தாலும் அவர்கள் விருப்பம் என சாப்பிடாமல் இருக்க அனுமதிக்கக்கூடாது. ஒரே நேரத்தில் சாப்பிட சிரமப்பட்டால் உணவுகளை சிறிது சிறிதாக பிரித்து பல வேளைகளாக கொடுக்கவும்.

3. மனநிலை

3. மனநிலை

கர்ப்பகாலத்தில் உடலில் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும் எனவே அச்சமயத்தில் அவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். சிறிய விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவார்கள் அல்லது அழுவார்கள். இதை சமாளிப்பது சற்று கடினம்தான் ஆனால் அவர்கள் எதையும் தன்னிச்சையாக செய்யவில்லை என்பதை உணர்ந்து பொறுமையாக செயல்பட வேண்டும்.

4. குழந்தையை பார்த்துக்கொள்ளுதல்

4. குழந்தையை பார்த்துக்கொள்ளுதல்

ஒருவேளை உங்கள் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தால் உங்கள் வேலை இருமடங்காகிவிடும். ஏனெனில் நீங்கள் உங்கள் மனைவி மற்றும் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை மட்டுமில்லாது வீட்டில் ஏற்கனவே இருக்கும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை சாப்பிட வைப்பது, பள்ளிக்கு அனுப்ப வேண்டியது, வீட்டுப்பாடங்களில் உதவுவது என உங்கள் வேலைகள் நீண்டு கொண்டே செல்லும். உங்கள் மனைவி இவற்றில் உங்களுக்கு உதவி புரிந்தாலும் உங்களுடைய பொறுப்புகள் இப்பொழுது அதிகரித்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய காலமிது.

5. கவலை மற்றும் பயம்

5. கவலை மற்றும் பயம்

உங்கள் மனைவி எவ்வளவுதான் தைரியமானவராக இருந்தாலும் பிரசவகால பயம் என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானது. "நாம் சிறந்த தாயாக இருக்க முடியுமா?", " குழந்தை பிறந்த பின் மீண்டும் தான் பழைய உடலமைப்பை அடைய முடியுமா?" போன்ற கவலைகள் அவர்களை வாட்டும். அவர்களின் பயம் மற்றும் கவலைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 things men should aware of the pregnancy

5 things men should aware of the pregnancy
Story first published: Saturday, July 7, 2018, 15:19 [IST]
Desktop Bottom Promotion