Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மாஜி காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு அபலை கர்ப்பிணியின் கதை!
கர்ப்பம் என்பது பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்; இந்த பதிப்பில் மாஜி காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு அபலை கர்ப்பிணியின் கதையை பற்றி பார்க்கலாம்.
பெண்கள் என்பவர்கள் பலவீனமானவர்களா அல்லது பலவீனமாக்க படுகிறீர்களா என்பது ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம். உலகில் பிறந்த ஆணோ பெண்ணோ அனைவரும் ஏங்குவது ஒரே விஷயத்திற்காக, அது தான் அன்பு. அதை காதல் என்ற வேறு பெயரில் கொடுத்து, வாழ்க்கையை கெடுப்பது என்ன நியாயம். காதல் என்ற பெயரில் பெண்கள் சந்திக்கும் நடந்தேறும் விபரீத விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்பது யார்?

இந்த பதிப்பில் நாம் காதல் என்ற உணர்வால், தன் வாழ்க்கையை தொலைத்த அபலை கர்ப்பிணியின் கதையை தான் பார்க்க போகிறோம்.

அவள் ஒரு அழகி!
ரீனா ஒரு இளமை பருவத்தில் இருக்கும் அழகு ததும்பும் குறும்புக்கார பெண். அவள் வேலை செய்யும் இடத்தில ராஜேஷை சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறிமுகமான சில நாட்களிலேயே மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாற தொடங்கினார்கள். ரீனா 21 வயது மட்டுமே பூர்த்தியான ஒரு யுவதி. ராஜேஷோ 30 வயதை எட்டிக் கொண்டு இருக்கும் நடுத்தர வயதினன்.

காதல் பூத்தது!
இந்த இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு என்னும் மொட்டு, நாள்கள் செல்ல செல்ல உருவான நட்பு மொட்டு காதலாக மலரத் தொடங்கியது; இராஜேஷின் வயது அறிந்த ரீனா உண்மையான அன்பையே அவன் மீது வைத்தாள். இராஜேஷ் எப்படிப்பட்ட அன்பை மனதில் கொண்டு இருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
காதல் தலைக்கேறிய மோகத்தில் ரீனாவும் இராஜேஷும் எல்லை மீறும் அளவுக்கு தைரியம் பெற்று விட்டனர்.

உண்மையை உடைத்து விட்டான்!
ஒரு நாள், ரீனாவும் இராஜேஷும் தனிமையில் சந்தித்த பொழுது, அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் அவர்களை மோகத்தில் ஆழ்த்தி, மதியை மயக்க வைத்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் பஞ்சும் நெருப்பும் ஒன்றோடு ஒன்று சேரும் என்ற நிலையை படிப்படியாக எட்ட ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று ‘உன்னிடம் ஒன்று கூற வேண்டும்' என்று பேச தொடங்கி தான் திருமணம் ஆனவன் என்பதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் இராஜேஷ் கூறினான்.

விதியா? சதியா?
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்ற ரீனா, அதிர்ச்சியில் இருந்து மீளும் முன், ‘நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்; என் குழந்தையை மனைவி எடுத்துக் கொண்டு பொய்விட்டாள்; இப்பொழுது நான் தனி மரமாகி ட்டேன் என்று கதறி அழ தொடங்கினான் இராஜேஷ். தனது முழு காதலையும் வென்ற இராஜேஷ் மனம் உடைந்து அழுவதை சகிக்க முடியாமல் கட்டி அணைத்து கொண்டாள் ரீனா. எதுவாயினும் நான் இருக்கிறேன் என்று கூறி ஒருவருடன் ஒருவர் பின்னி பிணைய ஆரம்பித்து விட்டனர்.

விளைவு அறிந்து செய்தது!
உடலால் ஒன்றாய் சேர்வதினால் ஏற்படும் விளைவை அறிந்த ரீனா, கருத்தடை ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கினாள்; மாத்திரைகள் இருக்கும் தைரியத்தில் 12 மாதங்கள் தனது காதலனான இராஜேஷுடன் மாய உலகில், காதல் மயக்கத்தில் வாழ்ந்து வந்தாள். மனதில் முதன் முதலாக ஏற்பட்ட காதல் ரீனாவின் கண்ணை மட்டும் அல்ல, மூளையையும் மறைத்து, செயல்படாமல் ஆக்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.

எதிர்பாராத விளைவு?!
ஒரு நாள் எதிர்பாராத வகையில் ரீனா தன் உடலில் பல மாற்றங்களை உணர தொடங்கினாள்; அந்த சமயத்தில் மருத்துவரிடம் சோதித்து பார்த்ததில் தான் கர்ப்பம் அடைந்து விட்டதை தெரிந்து கொண்டாள். செய்தி அறிந்த அடுத்த நிமிடம் இராஜேஷிடம் சென்று தகவலை கூறி விட்டு, ‘நாம் திருமணம் செய்து கொள்ளலாம்' என்று கூறினாள். அதற்கு இராஜேஷ் கூறிய பதில் ரீனாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அப்படியென்ன பதில்!
‘குழந்தையை கலைத்து விட்டு வா, காதலை தொடரலாம்; கல்யாணம் எல்லாம் வேண்டாம். மேலும் எனக்கு மனைவி மற்றும் குழந்தை இருக்கிறார்கள்; என் மரியாதை என்ன ஆவது' என்று கூறினான், இராஜேஷ். பதிலை கேட்டு அதிர்ந்த ரீனா, மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டு மன்றாடினாள்; அப்பொழுதும் ராஜேஷ் ‘முதலில் குழந்தையை கலைத்து விட்டு வா, பிறகு பார்க்கலாம்' என்று கூறினான்.

அபலை கர்ப்பிணி!
இப்படி அயோக்கியனுக்கு தன் பரிசுத்த காதலை அளித்து, அபலை பெண்ணாக கைவிடப்பட்டு கர்ப்பம் ஆக்கப்பட்டு தனித்து விடப்பட்ட இந்த கர்ப்பிணி அடுத்து தனது வாழ்வில் என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் குழம்பி நிற்கிறாள்; அவளின் நிலையை பற்றி அறிந்த சிலர், பல யோசனைகளை கூறுகின்றனர்.
என்ன செய்ய போகிறாள் ரீனா? கருவை கலைப்பாளா அல்லது அயோக்கியனுக்காக தனது வாழ்க்கையை அழித்து கொள்வாளா இல்லை குழந்தையை பெற்று எடுத்து வளர்ப்பாளா? ரீனா என்ன முடிவு எடுக்க வேண்டும் அல்லது என்ன செய்திருப்பாள் என்பது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்!
குறிப்பு: இது உண்மையில் நடந்த ஒரு பெண்ணின் கதை! யார் மனதையும் புண்படுத்த வெளியிட படவில்லை; பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அனைத்தும் கற்பனையே!



Click it and Unblock the Notifications