Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க?
கர்ப்ப காலத்தில் பெண்கள் தொப்புளில் கம்மல் குத்திக்கொள்ளலாமா? கூடாதா?
இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலில் எந்த பக்கத்திலும் கம்மல் போன்றவற்றை குத்திக் கொள்ளலாமா? அதிலும் குறிப்பாக தொப்புளில் கம்மல் குத்திக் கொள்ளலாமா என்று இங்கு பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் நிலையை மற்றும் தங்களுக்குள் வளரும் குழந்தையின் உடல் நிலையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியமானது; அவர்கள் அந்த சமயத்தில் மிகவும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலில் எந்த பக்கத்திலும் கம்மல் போன்றவற்றை குத்திக் கொள்ளலாமா? அதிலும் குறிப்பாக தொப்புளில் கம்மல் குத்திக் கொள்ளலாமா என்று இங்கு பார்க்கலாம்.

கம்மல் குத்திக் கொள்ளலாமா?
உடலின் எந்த பாகத்திலும், தொப்புளில் கூட சாதாரண நாட்களில் கம்மல் குத்திக் கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை; ஆனால், அதுவே கர்ப்ப காலம் எனும் பொழுது சற்று சிந்தித்து தீவிர ஆலோசனை செய்து பின் செயலில் இறங்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கம்மல் குத்திக் கொள்ளலாமா கூடாதா என்றால் குத்திக் கொள்ளலாம்; ஆனால் அது உங்களையும் உங்களுள் வளரும் குழந்தையையும் அதிகம் பாதிக்க பெரும்பான்மையான வாய்ப்புகள் உள்ளன.
இந்த விஷயத்தில் கம்மல் குத்தும் முன் பின்னர் நடக்க போகும் விஷயங்களை முன்னரே கூற முடியாது. எனவே கொஞ்சம் யோசித்து தான் இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பானதா?
கர்ப்ப காலத்தில் தொப்புளில் அல்லது உடலின் எந்த பாகத்திலேனும் கம்மல் குத்திக் கொண்டால் பாதுகாப்பானதா என்றால் கண்டிப்பாக இல்லை. கர்ப்ப காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அந்த சமயத்தில் போய் தொப்புளில் கம்மல் குத்திக் கொண்டால், என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்!

பாதிப்பு - இடையூறு!
நீங்கள் தொப்புளில் என்று குத்திய கம்மல் வயிற்றின் உள்ளிருக்கும் குழந்தையையோ அல்லது குழந்தையை இணைத்து வைத்திருக்கும் தொப்புள் கொடி, நஞ்சுக்கொடி, இரத்தக் குழாய்கள் இதில் எதையேனும் குத்தி விட்டால் அல்லது கம்மல் குத்தும் பொழுது பயன்படுத்தப்படும் அந்த துளை போடும் ஊசி குத்திவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்..! கண்டிப்பாக அது குழந்தையின் வளர்ச்சியில் ஒரு பாதிப்பை, ஒரு இடையூறை ஏற்படுத்தும்.

இரு முறைகள்!
இந்த அத்தனை விஷயங்களையும் படித்து தெரிந்த பின்னரும் கூட சிலருக்கு கம்மல் குத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், அவர்களுக்கு சற்று வழிகாட்டி உதவ தான் இந்த பத்தி. கம்மலை ஒரு கூறிய ஊசி கொண்டு துளையிட்டு குத்தலாம் அல்லது இந்தக் காலத்து துளையிடும் துப்பாக்கி கொண்டு துளையிட்டு கம்மலை குத்திக் கொள்ளலாம்.

எது சிறந்தது?
இந்த இரண்டு முறைகளில் எது சிறந்தது என்று பார்த்தால், ஊசி தான் சிறந்தது. ஏனெனில் துளையிடும் துப்பாக்கி வேறு ஏதேனும் உறுப்புகளை காயப்படுத்தி விடக்கூடும்; மேலும் அதன் மருந்தில் சில வேதிப்பொருட்கள் கலந்து இருக்கும் அபாயமும் உண்டு. எனவே கம்மலை குத்திக் கொள்ள துளையிடும் ஊசியை பயன்படுத்துவது நல்லது.

என்னென்ன பாதிப்புகள்!
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த மாதிரி கம்மல் குத்திக் கொள்வதால், அவர்களுக்கு இரத்த இழப்பு, கம்மல் குத்திய இடத்தில அரிப்பு மற்றும் எரிச்சல், கம்மல் குத்திய இடத்தில பாக்டீரியா நோய்த்தொற்றுகள், வேறு ஏதேனும் நோய்த்தொற்றுகள் உருவாகி உடல் உறுப்புகள் மற்றும் உள் இருக்கும் குழந்தைக்கு பரவும் வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் கம்மல் குத்திக் கொண்டால், இது போன்ற பாதிப்புகள் கண்டிப்பாக நேரலாம்.

எந்தெந்த பாகங்கள் கூடாது!
பெண்கள் தங்கள் உடலில் எங்கு வேண்டுமானாலும் கம்மல், தோடு போன்றவற்றை குத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர்; ஆனால், அவர்தம் உடலின் மார்பகங்கள், வயிறு, தொப்புள், நாக்கு, உதடு போன்ற உடல் பாகங்களில் கம்மல் போன்றவற்றை குத்திக் கொள்வதை நிறுத்துதல் நல்லது.
ஏனெனில் இந்த ஒவ்வொரு உறுப்பும் தனக்கான முக்கிய பணியை உடலில் ஆற்றி வருகிறது; அதனை நீங்கள் இது போன்ற கம்மல் போன்றவற்றை குத்தி. காயப்படுத்தி உடற்செயலிய மாற்றத்திற்கு இடையூறு புரிகிறீர், ஆகையால், இது போன்ற விஷயங்களை சாதாரண நாட்களிலும், கர்ப்ப காலத்திலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

நிதானம்!?
ஏதோ மனதில் ஏற்பட்ட ஆசையால், மோகத்தால் உடலில் கம்மல் போன்றவற்றை குத்திக் கொண்டுவிட்டால், அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கம்மல் குத்திய உடனேயே இத்தனை நாட்கள் காலியாக இருந்த இடத்தில, ஒரு புது மாற்றம் உண்டாகி இருப்பதால், அது சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் கூட, கொஞ்சம் நிதானித்து உடலின் பிரச்சனையை புரிந்து செயல்பட முயலல் வேண்டும்.

எப்பொழுது அகற்ற வேண்டும்?
கம்மல் குத்திய உடல் பாகத்தில் ஏதேனும் தடிப்புகள், தோல் சிவந்து போதல், எரிச்சல், அரிப்பு, பொரிப்பொரியாக வருதல், இரத்தக்கசிவு போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக போட்ட கம்மலை அகற்றி விட்டு, தகுந்த மருந்துகளை போடுதல் வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலில் எந்தவொரு விஷயத்தையும் செய்யும் முன், மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதன்பின் எந்த ஒரு செயலிலும் இறங்கி செயல்பட தொடங்குவது நல்லது.



Click it and Unblock the Notifications