Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஒருமுறை பயன்படுத்திய காண்டமை அடுத்தமுறை பயன்படுத்தலாமா?
உடலுறவு சார்ந்து பொதுவாக நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகங்கள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
உடலுறவு சார்ந்த விஷயங்களில் யாருமே எல்லா தெரிந்தவர்களாக இருக்க முடியாது. எல்லோருக்குமே நிறைய சந்தேகங்கள் இந்த விஷயத்தில் இருக்கும். ஏன் மிக சாதாரண எளிய விஷயமாக இருக்கும்.

ஆனால் நமக்குத் தெரியாததாக இருக்கும். அப்படி மிக சாதாரண விஷயமாகவும் ஆனால் நமக்கு அடிக்கடி சந்தேகங்கள் வருகின்ற விஷயங்களாகவும் இருக்கும் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.

முதல்முறை கர்ப்பமாகுமா?
முதன் முதலாக ஒரு பெண் உடலுறவில் ஈடுபடுகின்ற பொழுது, கன்னித்திரை உடைந்து விடும் என்று நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் முதல் முறை உறவு கொள்கிற போது, கர்ப்பமாக மாட்டார்கள் என்று. ஆனால் முதல்முறையாக இருந்தாலும் ஈடுபாட்டுடன் உறவில் ஈடுபடுகின்ற பொழுது, கட்டாயம் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிலர் நினைக்கிறார்கள் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் நிச்சயம் கர்ப்பம் உணடாகாது என்று. ஆனால் பெண் உறவில் ஈடுபட்டாலே கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உறவில் பாதுகாப்பான முறையில் இருந்தால் தவிர கர்ப்பம் தள்ளிப் போவதற்கான வாய்ப்பில்லை. கருத்தடை மாத்திரைகள் உறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடுதல் வழி உறவு
விந்துவை உட்செலுத்தாமல் மற்ற பேச்சு, விரல்களின் வழியே உடலுறுப்புகளைத் தீண்டுதல் போன்ற முறையில் உறவு கொள்வதால் கட்டாயம் கர்ப்பமாக முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனென்றால் கரு முட்டை குழந்தையாகத் தரிப்பது என்பது விந்து கரு முட்டையை சந்தித்தால் மட்டுமே நடக்கும். உறவில் ஈடுபடுகின்ற ஆண் மற்றும் பெண்ணின் பிறப்புறுக்கள் சுத்தமாக இருக்காவிட்டால், பல தொற்றுகள் உண்டாகாமல் இருக்கலாம்.

காண்டம் எப்படி பாதுகாப்பானது?
காண்டம் பொதுவாகவே கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு மிகவும் பாதுகாப்பானது. அதனால் ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் கட்டாயம் ஆணுறையைப் பயன்படுத்துங்கள். பொதுவாக சிலருக்கு தவறான கருத்து உண்டு. ஆணுறை பயன்படுத்தி உறவு கொள்ளும் போது, உண்மையான இன்பம் கிடைப்பதில்லை. முழுமையாக அனுபவிக்க முடியாது என்று. அது ஒரு தவறான எண்ணம். ஆனால் இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இது பாலியல் நோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

விந்துவை செலுத்துவதற்கு முன்
விந்துவை உறவின்போது உட்செலுத்துவதற்கு முன்பாகவே ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட்டால் என்ன ஆகும்? அதனால் கர்ப்பமடைய முடியுமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. சிலர் அப்படி செய்தால் கர்ப்பம் அடைய முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிக தவறு. ஏனெனில் விந்து வெளியேறுவது போன்ற உணர்வு இருக்கின்ற பொழுது, வெளியே வேகமாக எடுத்துவிடுவதுண்டு. அப்படியே வேகமாக வெளியே எடுக்கிற பொழுது, சிறு துளி விந்து வெளியேறினாலும் கூட, கர்ப்பம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. எதற்கு இந்த சந்தேகமெல்லாம். அதற்கு பாதுகாப்பு நடவடிக்கையுடன் உறவு சொல்வது சிக்கல் அற்றது தானே.

பொசிஷன்கள்
வழக்கமாக எல்லோரும் உறவு கொள்வதைத் தவிர்த்து வேறு ஏதேனும் புதிதாக முயற்சிக்க பொசிஷன்கள் இருக்கின்றனவா என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உறவு கொண்டு இன்பம் காண்பதற்கு பல வழிகளும் முறைகளும் இருக்கின்றன. அது உறவுகொள்ளும் இந்த இரண்டு நபர்களைப் பொருத்தது. அவர்களுடைய சௌகர்யத்தைப் பொருத்தது. இதெல்லாவற்றையும் விட சூழலும் கூட இதற்கான மன நிலையையும் ஒத்துழைப்பையும் தரும்.

விதைப்பை விறைப்பு
விதைப்பை விறைப்பு ஏற்படாமல் விந்து வெளியேறாது. அது வந்துவை உற்பத்தி செய்யும் செயலில் இருப்பதால், இது மிக முக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு இந்த விதைப்பை சுருக்கம் என்ற பிரச்சினை இருக்கிறது. அதனால் இன்பம் குறையும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை.

காண்டத்தை மீண்டும் பயன்படுத்தலாமா?
நிறைய பேருக்கு இந்த சந்தேகம் உண்டு. நிறைய இடங்களில் இலவசமாகவும் மிகமிக மலிவான விலையிலும் ஆணுறை கிடைக்கின்றது. ஆனால் சிலர் தரமான நல்ல ஆணுறையே வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது விலை அதிகம் என்பதால் ஒரு முறை பயன்படுத்திய ஆணுறையை மீண்டும் பயன்படுத்தலாமா என்று சந்தேகம் வருவதுண்டு. இது அவ்வளவு நல்ல முறை இல்லை தான். ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறிந்துவிட வேண்டும். கழுவிவிட்டு பயன்படுத்துவதெல்லாம் கூடாது. ஏனெனில் இந்த ஆணுறை என்பது சில லூபிரிகண்ட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications