Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
பாதுகாப்பான உடலுறவு கொள்ள காண்டம் போதுமா? நீங்கள் சரி என்று நினைக்கும் தவறானவை!
இன்றைய காலத்தில் கல்யாணமான தம்பதிகளும் சரி, காதலிக்கும் இளசுகளும் சரி தங்களுக்குள் கலவி கொண்டு, உச்சகட்ட இன்பத்தை அடைய விரும்புகின்றனர்; அதற்கு அதிகளவு ஆர்வமும் காட்டுகின்றனர். ஆனால், அதன் விளைவாக கலவ
இன்றைய காலத்தில் கல்யாணமான தம்பதிகளும் சரி, காதலிக்கும் இளசுகளும் சரி தங்களுக்குள் கலவி கொண்டு, உச்சகட்ட இன்பத்தை அடைய விரும்புகின்றனர்; அதற்கு அதிகளவு ஆர்வமும் காட்டுகின்றனர். ஆனால், அதன் விளைவாக கலவியில் ஈடுபடும் பெண்கள் கர்ப்பம் அடைவதை சிலசமயம் மறந்து பாதுகாப்பின்றி கலவியில் ஈடுபட்டு, கடைசியில் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்பை நீக்கிட இக்காலத்தில் காண்டம் போன்ற பல கருத்தடை சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றையே உண்மை என்று பயன்படுத்தும் பலர் கர்ப்பம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, சரியான பாதுகாப்பான கருத்தடை சாதனம் எது மற்றும் பாதுகாப்பான கலவி கொள்ள செய்ய வேண்டியவை குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்.!

1. மிகச்சிறந்த கருத்தடை சாதனம்!
கருத்தடையை ஏற்படுத்த உதவும் மிகச்சிறந்த சாதனம் எது?
அ. ஆண் காண்டம்
ஆ . IUD
இ . அபிசிஸ்டென்ஸ்
ஈ. கருத்தடை மாத்திரைகள்
இக்கேள்விக்கான சரியான விடை: அபிசிஸ்டென்ஸ்
விளக்கம்: இந்த விடையை பார்த்து ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அபிசிஸ்டென்ஸ் என்பது தான் மிகச்சிறந்த கருத்தடை முறை; மிகவும் பாதுகாப்பானது கூட. இது கர்ப்பம் அடைவதை கண்டிப்பாக தடுத்து, எவ்வித பாலியல் நோய்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் உடலுக்கு எந்தவித பாதிப்புகளும் நேராது.
காண்டம் போன்றவற்றை பயன்படுத்துவது முழுமையான கருத்தடையை ஏற்படுத்தாது; மேலும் இவை உடல் உறுப்புகளில் மாட்டிக்கொள்ளும் அபாயம் கொண்டவை. கருத்தடை மாத்திரைகள் மற்றும் IUD முறைகள் போன்றவை ஹார்மோன் ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதால், இது உடலின் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்கும் அபாயம் கொண்டாவை.

2. பாலியல் நோய்களை தடுப்பது!
கலவியினால் ஏற்படும் பாலியல் நோய்களை தடுக்க சிறந்தது எது?
அ. ஆண் காண்டம்
ஆ . IUD
இ. கருத்தடை மாத்திரைகள்
ஈ. இவை அனைத்தும்
இக்கேள்விக்கான சரியான விடை: ஆண் காண்டம்.
விளக்கம்: latex காண்டம் பாலியல் பாதிப்புகளை முற்றிலுமாக முழுவதுமாக தடுத்து, பாதுகாப்பான கலவி கொள்ள உதவுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், உங்களின் உயிரை காக்க போகும் ஒரு முக்கிய காரணி என்றுணர்ந்து பாதுகாப்பு தரும் சரியான சாதனத்தை வாங்கி உபயோகித்து இன்பத்தை அடையுங்கள்.

3. வாய்வழி கலவியால் பாலியல் நோயா?
வாய்வழி கலவி உரையாடல் கொள்வதால் பாலியல் நோய் ஏற்படாது.
அ. உண்மை
ஆ. பொய்
இக்கேள்விக்கான சரியான விடை: பொய்
விளக்கம்: பதிலை பார்த்ததும் பதறிவிட்டீர்களா? பெரும்பாலான பாலியல் நோய்கள் வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் மூலமாக தான் பரவுகிறது; இவை உடல் திரவங்களான பிறப்புறுப்பு சளி, வெட்டுக்காய இரத்தம் போன்றவை மூலம் பரவுகின்றன. இந்த கலவி உரையாடலின் போது, இந்த நோய்கிருமிகள் பரப்பப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜாக்கிரதை நண்பர்களே!

4. பாலியல் நோய்கள் இதனால் ஏற்படுமா?
பாலியல் நோய்கள் ஏற்படக் காரணம்?
அ. பெண்ணின் மலவாய் உள்நுழைத்தல்
ஆ . பெண்ணின் பிறப்புறுப்பு உள்நுழைத்தல்
இ. இரண்டும் உண்டு
ஈ. இரண்டும் அல்ல
இக்கேள்விக்கான சரியான விடை: இரண்டும்.
விளக்கம்: இந்த இரண்டு உள்நுழைப்பு முறைகளுமே பாலியல் நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 மில்லியன் புதிய நோய்க்கிருமிகள் இந்த இரண்டு உள்நுழைப்பு முறைகளின் மூலமாக பல உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், 14-19 வயதுள்ள ஆண்கள் முதல் 21 வயது வரையிலான ஆண்களை இக்கிருமிகள் தாக்கலாம் என்றும் அறியப்படுகிறது; இந்த வயது ஆண்களுக்கு HPV ஊசி அவசியம் போடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

5. இதை பேச வேண்டும்!
இளசுகள் தங்கள் காதலி அல்லது உடலுறவு துணையிடம் எதைக்குறித்து பேச வேண்டும்.?
அ. பிறப்புறுப்புகளை குறித்து
ஆ . முந்தைய கலவி அனுபவங்கள்
இ. பாலியல் பரிசோதனை குறித்து
ஈ. இவை அனைத்தும்
இக்கேள்விக்கான சரியான விடை: இவை அனைத்தும்.
விளக்கம்: உங்கள் மனைவியானாலும் சரி, காதலியானாலும் சரி - இதேபோல் கணவனானாலும் சரி, காதலனானாலும் சரி முதல் முறையாக அவர்களுடன் கலவியில் ஈடுபடும் முன் மேற்கூறிய அனைத்து விஷயங்களை பற்றியும் தீர விசாரித்து, உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இது பாதுகாப்பான மற்றும் பாலியல் நோயற்ற கலவிக்கு வழிவகுக்கும்.

6. அனுமதி வேண்டுமா?
18 வயதிற்கு கீழுள்ளவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்றபின் தான் காண்டம் போன்றவற்றை வாங்க வேண்டுமா?
அ. உண்மை
ஆ. பொய்
இக்கேள்விக்கான சரியான விடை: பொய்
விளக்கம்: ஆம் கலவி குறித்த அறிவு மற்றும் விவரம் சரியாக தெரிந்திருந்தால் போதும்; யாருடைய அனுமதியும் அறிவுரையும் காண்டம் வாங்க தேவையில்லை. இது அவரவரின் உள்ளம் மற்றும் மன ஓட்டங்களை பொறுத்தது.

7. எத்தனை சதவீதம்?
Latex காண்டம் பயன்படுத்துவது கர்ப்பத்தை தடுக்க எத்தனை சதவீதம் தவறலாம்?
அ. 1%
ஆ . 3%
இ. 11% - 16%
ஈ. 21% - 25%
இக்கேள்விக்கான சரியான விடை: 3%
விளக்கம்: முன்னரே கூறிப்படி letex காண்டம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் முழுமையாக கர்ப்பத்தை தடுத்து, கர்ப்பம் ஏற்படாமல் காக்க வல்லது. ஆனால், யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல், இந்த காண்டமும் கர்ப்பத்தை தடுக்க 3 சதவீதம் தவறிப் போக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

8. இவர்களுக்கு கூட அவசியமா?
இந்த கருத்தடை சாதனங்கள் ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் கலவியில் கூட அவசியமா?
அ. உண்மை
ஆ. பொய்
இக்கேள்விக்கான சரியான விடை: பொய்
விளக்கம்: ஆம்! இவர்கள் கொள்ளும் கலவியில் கர்ப்பம் என்பதே ஏற்படப்போவதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் கருத்தடை பயன்படுத்த வேண்டும். ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் கலவிக்கு இந்த கருத்தடை முறைகள் அவசியமற்றவை.

9. பெற்றோர் மற்றும் கலவி துணைகளுடன் அதிகமாக இளசுகள் கலந்துரையாடும் விஷயம்?
அ. தாமதமாக உடலுறவு கொள்ளுதல்
ஆ . கலவி
இ. எத்தனை பேருடன் கலவலாம்
ஈ. ஆ மற்றும் இ
இக்கேள்விக்கான சரியான விடை: தாமதமாக உடலுறவு கொள்ளுதல்
விளக்கம்: இளசுகள் அல்லது முதன் முறையாக கலவி கொள்ள எத்தனிப்பவர்கள், உடலுறவு கொள்ளும் முன் தங்களது பெற்றோர்கள் அல்லது நண்பர்களிடம் அவர்தம் உதவுறவு அனுபவங்கள் மற்றும் தாமதமாக உடலுறவு நடவடிக்கைகள் புரிந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் போன்ற விஷயங்களை குறித்து கலந்துரையாடி அறிதல் நல்லது.

10. தோல்வி விகிதம்!
கருத்தடை மாத்திரைகள் கர்ப்பத்தை தடுப்பதில் அடையும் தோல்வி வீதம் என்ன?
அ. 1%ஐ விட குறைவு
ஆ .5%
இ. 10%
ஈ. 15%
இக்கேள்விக்கான சரியான விடை: 1%ஐ விட குறைவு
விளக்கம்: கருத்தடை மாத்திரைகளை கர்ப்பத்தை தடுக்க பயன்படுத்துவது நல்ல பலனை தரும்; உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் சில உடல் பாதிப்புகள் நிகழலாம்; ஆனால், இவை கர்ப்பத்தை கண்டிப்பாக தடுக்கக் கூடியவை.



Click it and Unblock the Notifications











