Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தம்பதியரின் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள்!
பிறப்பு கட்டுப்பாடு என்பது கர்ப்பத்தை தடுக்க உதவும்; இந்த பதிப்பில், தம்பதியரின் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் பற்றி படித்து அறியுங்கள்.
பிறப்பு கட்டுப்பாடு என்பது கர்ப்பத்தை தடுக்க உதவும்; ஆண் - பெண் இருவருமே பெற்றோராவதில் மிக்க மகிழ்ச்சி கொண்டவர்கள் தான்; ஆனாலும் சில சமயங்களில் குழந்தை உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியமானதாக விளங்குகிறது. இவ்வாறு குழந்தை உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தடை என்று குறிப்பிடுகிறோம்.
பிறப்புக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மாத்திரைகள் உட்கொள்ளல், ஊசிகள் போட்டுக்கொள்ளுதல் என பல்வேறு மருத்துவ முறைகள் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவி வந்தாலும், பிறப்புக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஏதேனும் இயற்கை வழிமுறைகள் உள்ளனவா என்று நம் மனம் ஒரு தேடலை மேற்கொள்ளத்தான் செய்கிறது.

இந்த தேடலுக்கு ஒரு விடையை அளிக்கும் விதத்தில் தான் இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம். இதில் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவும் சில ஆயுர்வேத இயற்கை மூலிகைகள் என்னென்ன என்று படித்தறியலாம் வாருங்கள்!

செம்பருத்தி
பிறப்பு கட்டுப்பாட்டை அடைய விரும்பும் தம்பதியர் காண்டம், ஊசி, மருந்துகள் போன்ற செயற்கை முறைகளுக்கு பதிலாக இயற்கை முறையில் கர்ப்பத்தை தடுக்க முயற்சி செய்யலாம். தம்பதியர் செம்பருத்தி இலைகளை ஸ்டார்ச் சேர்த்து அரைத்து உட்கொண்டால் கருத்தடை ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இயற்கை முறையில் கருத்தடையை அடைய விரும்பும் தம்பதியர் இந்த முறையை முயற்சித்து பார்க்கலாம்.

காய்ந்த புதினா
காய்ந்த புதினா இலைகளை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். கருத்தடை ஏற்படுத்த வேண்டும் என்ற சமயத்தில் மிதமான சூட்டில் கொதிக்க வாய்த்த கொதிநீரில் இந்த பொடியை சேர்த்து பருக வேண்டும். இது இயற்கையான முறையில், விரைவாக கருத்தடையை ஏற்படுத்த உதவும். இதை ஆணும் பெண்ணும் பருகலாம்; உடலுக்கும் நல்லது தான்.

ஆமணக்கு விதைகள்!
தம்பதியர் பிறப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்ள விரும்பும் சமயத்தில் ஆமணக்கு விதைகளை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும். ஆமணக்கு விதைகளை உடைத்தால் உள்ளே ஒரு சிறிய வெள்ளை நிற பருப்பு இருக்கும் அதை தம்பதியர் உண்டு வந்தால் அது கண்டிப்பாக கருத்தடையை ஏற்படுத்த உதவும். இது மிகவும் எளிதான முறை மற்றும் இயற்கையானதும் கூட.

வேம்பு - வேப்பிலைகள்..!
வேப்பமரத்தின் பல பாகங்கள் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டு இருக்கின்றன; இந்த வேப்பமர பாகங்கள் கருத்தடையையும் ஏற்படுத்த உதவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ வேப்ப எண்ணெயை கருப்பை மற்றும் பெலோப்பியன் குழாய் இணையுமிடத்தில் செலுத்தினால், அது எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல், ஒரு வருட காலத்திற்கு கருத்தடையை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருவை உண்டாக்கும் கருமுட்டைகளை வேம்பு 30 நொடிகளில் கொன்று உடனடி கருத்தடையை ஏற்படுத்துகிறது. இது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதில்லை.

காட்டு கேரட்
wild carrot அதாவது காட்டு கேரட் அழைக்கப்படுகிறது. இந்த காட்டு கேரட் விதைகளை உட்கொள்வது கருத்தடையை ஏற்படுத்த உதவும்; மேலும் புரோஜெஸ்டெரோனை தடை செய்து, கருத்தடையை ஊக்குவிக்கிறது. இது ஒரு மிகச்சிறந்த இயற்கை கருத்தடை சாதனம் என்று பல ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படலாம்; மேலும் சிறுநீரக மற்றும் பித்தப்பைக்கல் கோளாறு கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல.

பென்னிராயல்
இது புதினா வகையை சேர்ந்த ஒருவகை மூலிகை. இதனை உட்கொள்வதால் எளிதில் கருவினைக் கலைத்துவிடலாம். இந்த செடி மாதவிடாய் ஹார்மோன்களை தூண்டி, மாதவிடாயை ஏற்படுத்தி கருவினை கலைத்துவிடுகிறது. இச்செடியின் புதிய மற்றும் காய்ந்த இலைகளை உட்கொள்வது கருத்தடை ஏற்பட உதவும்; இதில் தேநீர் தயாரித்தும் பருகலாம்.

ப்ளூ கோஹோஸ்
இந்த தாவரத்தின் வேரினை உட்கொள்வதன் மூலம் பிறப்புக் கட்டுப்பாட்டு நிலையை அடைய முடியும். இது இரண்டு வித ஹார்மோன்களை வெளிவிட்டு கருப்பையை சுருங்கச் செய்து, கருத்தடையை ஏற்படுத்த உதவுகிறது; இந்த ஹார்மோன்களில் ஒன்று ஆக்சிடோசின், மற்றொன்று காலோசபோனின். இது உடனடி கருத்தடையை ஏற்படுத்த பெரிதும் உதவும்.

கவனம் வேண்டும்!
மேற்கூறிய அனைத்து மூலிகை வகைகளையும் மாதவிடாய் நாட்களின் முதல் நாளன்று உட்கொண்டால், அடுத்த ஒரு மாதத்திற்கு கருத்தரிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது; ஒரு முறை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும். கருத்தடை அல்லது பிறப்புக் கட்டுப்பாடு மேற்கொள்ள இயற்கை மூலிகைகளை சரியாக பயன்படுத்தல் அவசியம்; மேலும் வெற்றிகரமான கருத்தடையை மேற்கொள்ள காண்டம் போன்ற அடிப்படை கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதும் மிக முக்கியம்.

மருத்துவ ஆலோசனை!
எந்த ஒரு அக்கருத்தடை சாதனம் அல்லது இயற்கை மூலிகையையும் உட்கொள்ளும் முன்னர் ஒரு முறை மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது; உங்கள் உடல் தன்மைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளப்போகும் மூலிகையோ அல்லது மருந்தோ ஒத்துக் கொள்ளுமா என்று பரிசோதனை செய்த பின் உட்கொள்ளல் நலல்து.



Click it and Unblock the Notifications