Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
முகநூலில் அறிமுகமான முகமே அறியாத நண்பன் மூலம் கருத்தரித்த பெண்ணின் கதை
தாய்மை என்பது மிகவும் அருமையான விஷயம்; இந்த பதிப்பில் திருமணம் ஆகாமல், முகநூலில் அறிமுகமான முகமே அறியாத நண்பன் மூலம் கருத்தரித்த பெண்ணின் கதை குறித்து இங்கு படிக்கலாம்.
தாய்மை என்பது மிகவும் அருமையான விஷயம்; ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கை இலட்சியம் என்பது தாய்மை என்னும் உணர்வை அடைவதே! சில பெண்கள் தாய்மை என்னும் உணர்வை அடைய விரும்பியும், திருமணம் மற்றும் கலவி என்ற உணர்வை வெறுப்பதும் உண்டு. அப்படிப்பட்ட பெண்கள் பலர் நம்மிடையே கன்னி கழியாமல் தவ வாழ்ந்து, உறவுகளுடன் தனித்து வாழ்ந்து விடுகின்றனர்.

பெண்கள் திருமணம் மற்றும் கலவி போன்ற விஷயங்களை வெறுத்தாலும், குழந்தை மற்றும் தாய்மை என்னும் விஷயத்தை வெறுக்க வாய்ப்பே இல்லை.

பெண் ஒருத்தி!
இவ்வாறு இருந்த பெண் ஒருத்தி, திடீரென குழந்தை மீது ஆசை கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல், முகம் அறியாத முகநூல் நண்பன் மூலம் கருத்தரித்து, குழந்தை பெற்று கொண்டால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நிஜமாகவே ஒரு பெண் இவ்வாறு முகநூல் மூலம் அறிமுகமான நண்பன் மூலம் கருத்தரிப்பு அடைந்து குழந்தை பெற்று இருக்கிறார். அவரின் கதை குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்.

அந்த பெண் யார்?
39 வயது பூர்த்தி அடைந்த பெண் ஒருத்தி, தனது வாழ்வில், எந்த ஒரு உறவின் உதவியும் இன்றி அநாதையாகவே பிறந்து யாருடைய ஆதரவும் இன்றி அநாதை போல் தனித்தே வாழ்ந்து வந்தார்; திடீரெனெ ஒரு நாள் அவர் தன் வாழ்க்கை எதை நோக்கி நகர்கிறது என்று யோசித்த பெண், அதிகம் மனம் உடைந்தார். அந்த தருணத்தில் கண்டிப்பாக தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும், இனி மேலும் அனாதையாக நாம் வாழக்கூடாது என்று முடிவு எடுத்தார்.

என்ன செய்வது?
அநாதையாக இருக்க கூடாது; உறவு வேண்டும் ஆனால் கல்யாணம் மற்றும் கலவி போன்றவற்றில் துளியும் விருப்பம் இல்லை. என்ன செய்வது? என்ன செய்தால் தனக்கு என்று ஓருவர் கிடைப்பார் என்று யோசித்தார். நண்பர்கள் என்னும் துணை இருப்பினும் அது தனக்கு வாழ்க்கையில் சொந்தமாக ஆகாது; நட்பு சொந்தத்திற்கும் மேலானது என்று உணர்ந்தார்.

கிடைத்தது வழி!
இதை குறித்து அவர் புத்தகங்களையும், இணையத்திலும் தேடி படித்து அறிந்து கொண்டு இருந்த சமயம், அவருக்கு ஒரு வழி கிடைத்தது. மையின் மூலம் மட்டும் தான் தனக்கு நீங்காத, வலுவான சொந்தம் ஒன்று கிடைக்கும் என்று அறிந்து கொண்டார். பின் கல்யாணம் மற்றும் கலவி கொள்ளாமல் எப்படி குழந்தையை பெறுவது என்று படித்த சமயத்தில் அவருக்கு கிடைத்த யோசனை தான் விந்து அணு கொடையாளி.

சிறந்த முறை!
குழந்தை பெற வாடகைத்தாய், குழாய் குழந்தை என்று பல முறைகள் இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஒரு குறைபாடு இருந்தது; ஒரு இடைஞ்சல் இருந்தது. தத்து எடுத்தால் கூட யாரேனும் பாதியில் குழந்தையை வாங்கி கொண்டு சென்று விடுவாரோ என்றும், தாய்மை உணர்வின் உணர்வு எப்படி இருக்கும் என்று அறிய வேண்டும் என்பதால் ஏற்பட்ட எண்ணமும் அவருக்கு வேறு ஒரு புது வழியினை தேர்ந்து எடுக்க சொன்னது.
எனவே விந்து அணுவை கொடையாக பெற்றால், அதிலும் ஊர் பேர் அறியாத நபரிடம் இருந்து பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று முடிவு எடுத்தார். இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டார், அந்த பெண்மணி!

கிடைத்தார் கொடையாளி!
கடைசியாக முகநூலில் தனது அடையாளத்தை வெளியிடாத வகையில் தனக்கு யாரேனும் விந்து தானம் செய்ய முடியுமா என்று தனக்கு என்று இருக்கும் விதி முறைகளை மற்றும் எதிர்பார்ப்புகள் அடங்கிய ஒரு பதிப்பை வெளியிட்டார்; அதில் தனது வாழ்க்கை எப்படி தொடங்கி எப்படி போய் கொண்டு இருக்கிறது என்பதை உருக்கமாக வெளியிட்டு இருந்தார். அவரின் பதிப்பை படித்த நபர் ஒருவர், அவருக்கு விந்து அணு தானம் அளிக்க ஒப்புக் கொண்டார்.

முகநூல் மூலமாகவே!
பதிப்பு வெளியிட்ட பெண்மணியை அந்த நபர் முகநூல் செய்தி அனுப்பும் செயலி மூலம் தொடர்பு கொண்டு, தான் விந்து தான் அளிக்க தயார் என்றும், ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில், இன்ன மாதிரி பெயரில் தனது விந்து அணுவை கொடுத்து வைக்கிறேன்; நீங்கள் அங்கு சென்றால் எந்தவித தகவலும் கூறாமல் உங்களால் விந்து அணுவை பெற்று கொள்ள முடியும்.
இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நான் அனைத்தையும் செய்து முடித்து வைக்கிறேன், உங்களுக்கு விருப்பம் எனில் நீங்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

யோசனைக்கு பின்!
தீவிரமாக இதை பற்றி யோசித்த அந்த பெண்மணியும், இது தான் சரியான வழி என்று முடிவு செய்த பின் சில தினங்களுக்கு பின், அந்த மருத்துவமனைக்கு சென்று, அந்த நபர் குறிப்பிட்ட பெயரை கூறி விந்து தானம் பெறுவதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டார். மருத்துவர் அந்த பெண்மணியை சிகிச்சை வெற்றி அடைந்த பின் இங்கு இருந்து நீங்கள் புறப்படலாம் என்று கூறி சில நாட்கள் அங்கு தங்குமாறு கேட்டுக் கொண்டார்.

3 முறைகள்!
மருத்துவர் எதிர்பார்த்தது போலவே முயற்சி செய்த முதல் இரண்டு முறைகள் வெற்றி அளிக்கவில்லை; மூன்றாம் முறையாக முயற்சித்த பொழுது தான் கரு வளர தொடங்கி, முழுமையான கருத்தரிப்பு நிகழ்ந்தது. கரு நிகழாமல் போன போதும், கரு உருவாகி கலைந்த போதும், அந்த பெண்மணி அடைந்த வலிக்கும் வேதனைக்கும் அளவே இல்லை. சொந்தமே கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் அவரின் மனதில் குடி கொண்டது.

சொந்தம் கிடைத்தது!
கடைசியில் மூன்றாம் முறை சரியாக பலன் அளித்து விட்டது. உருவான கரு நல்ல முறையில் வளர தொடங்கியது. உறவு என்றால் என்ன என்றே அறியாத பெண்மணிக்கு புதிதாய் ஒரு உறவு கிடைத்தது; உகிடைத்த உறவு நல்ல படியாக உருவாகி தனது கையில் கொடுக்கப்பட்ட போது, அந்த பெண்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிடைத்த புது சொந்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார், அந்த பெண்மணி!



Click it and Unblock the Notifications











