61 வயதில் தன் மகளின் குழந்தையை கருவில் சுமந்த பாட்டி..! - உருக்கமான கதை!

By Lakshmi
Subscribe to Boldsky

அவரது பெயர் கிறிஸ்டின் கேசி, வயது 61. தாயின் அன்பை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தலாம். ஆனால் இவர் எந்த ஒரு தாயும் இதுவரை செய்யாத ஒரு செயலை தன் மகளுக்காக செய்துள்ளார். அது என்னவென்றால், இவர் தன் மகளுக்காக தன் பேரக்குழந்தையை தன் வயிற்றில் சுமந்துள்ளார்...!

வாடகை தாய் முறையை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.. அதாவது, கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளிக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் 'வாடகைத் தாய்' என்று அழைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடினமான சூழ்நிலை

கடினமான சூழ்நிலை

தனது பெண்ணுக்கு தொடந்து பல தடவைகள் கர்ப்பம் தங்காமலேயே போனதால், தன் மகளுக்கு குழந்தை பெற்று தரும் பொருப்பை தாயே ஏற்றுக் கொண்டார். எத்தனை பேருக்கு வரும் இந்த மனம்..! கிறிஸ்டின் கேசிக்கு மெனோபாஸ் காலம் முடிந்து 10 வருடங்கள் ஆகியிருந்தது... பொதுவாக, வாடகை தாய் முறைக்கு 35 வயதிற்குள் இருக்கும் பெண்கள் தான் தேந்தெடுக்கப்படுகிறார்கள், எனவே முதலில் இவரால் எப்படி வலிகளை தாங்கி கொள்ள முடியும் என்று சந்தேகிக்கப்பட்டது..!

மகளால் இயலவில்லை

மகளால் இயலவில்லை

மருத்துவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு கிறிஸ்டினால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்கள். கிருஷ்டின் மகள் சாராவிற்கு வயது 35 ஆகிறது..! ஆனால் அவளுக்கு கருவை சுமக்க முடியாத ஒரு நிலை...! இந்த நிலையில் தான் கிருஷ்டினா இந்த பொருப்பை ஏற்றார்...!

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

இந்த கரித்தரிப்பிற்கு சாராவின் கருமுட்டையும் அவளது கணவனின் விந்தணுவும் பயன்படுத்தப்பட்டது...! கிருஷ்டினுக்கு அப்போது சர்க்கரை நோயும், சில உடல்நல பாதிப்புகளும் இருந்தது. மருத்துவர்கள் இவர் கருவை சுமத்தினால் ஏதேனும் மனநல மாற்றங்களுக்கு ஆளாவாரோ என்றும் பயந்தனர்...!

கண்ணீரை அடக்க முடியவில்லை

கண்ணீரை அடக்க முடியவில்லை

ஆனால் இதையெல்லாம் கடந்து தான் பேரக் குழந்தையை பெற்றெடுத்தார் கிறிஸ்டின்..! இவருக்கு 61 வயதானதால் சிசேரியன் முறையிலான பிரசவம் தான் நடந்தது..! இவரது பிரசவ அறையில் இருந்த ஒவ்வொருவர் கண்ணிலும் கண்ணீர் கொட்டியது...! இவர் பலவகையான இடையூருகளுக்கு மத்தியில் அவர் ஒரு அழகிய ஆண் பேரக்குழந்தையை பெற்றெடுத்தார்...!

பாசம் விடுமா?

பாசம் விடுமா?

ஒவ்வொரு பெண்ணுக்கும் என்ன தான் வாடகை தாயாக இருந்து ஒரு குழந்தையை பெற்றேடுத்தாலும் கூட, அந்த குழந்தையை பெற்று அந்த குழந்தைக்கு சொந்தமானவர்களிடம் கொடுக்கும் போது ஒரு மன வருத்தம் இருக்கும்...! இந்த வருத்தம் அக்கா, தங்கைகள் வாடகை தாயாக இருந்தால் கூட இருக்கும்..!

எனக்கு மகிழ்ச்சியே!

எனக்கு மகிழ்ச்சியே!

ஆனால் கிறிஸ்டின் தனது பேரக்குழந்தையை பெற்றெடுத்ததிலும், அவனை அவனது பெற்றோர்களிடம் ஒப்படைப்பதிலும் எனக்கு எந்த ஒரு மனவருத்தமும் இல்லை எனவும், மேலும் இது போன்று என் பெண்ணுக்காக நானே கருவை சுமப்பது எனக்கு மகிழ்ச்சியை தான் தருகிறது என்றும் அவர் கூறினார்...!

சீறுநீரக பிரச்சனை..!

சீறுநீரக பிரச்சனை..!

குழந்தை பிறப்பிற்கு பிறகு கிறிஸ்டினுக்கு சிறுநீர் கழிப்பத்தில் சற்று சிரமம் உண்டானது..! சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை உண்டானது. இதனால அவர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்க்கொண்டார். இதில் அவருக்கு சீறுநீரக பிரச்சனை உண்டாகியுள்ளதாக தெரியவந்தது...! சிகிச்சைகளை எடுக்க தொடங்கிய சில நாட்களில் அவருக்கு இந்த பிரச்சனை சரியானது...!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Sixty one Years Old Gives Birth to Her Own Grandson

    Sixteen Years Old Gives Birth to Her Own Grandson
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more