தாய்பால் அதிகரிக்க பாதாம் சாப்பிடலாமா?

By: Lakshmi
Subscribe to Boldsky

பாதாம் சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்மை அளிக்குமா? சில தவறான பாலூட்டல் முறை காரணமாக தாய்பால் கொடுப்பதையே நிறுத்திவிடுகின்றனர். பாதாம் சாப்பிடுவதன் மூலம் எவ்வாறு பால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பது பற்றி இப்பகுதியில் காண்போம்.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்லாமல் தாய்க்கும் நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்பட்டதை விட, அதிகமான ஊட்டசத்துக்கள் மற்றும் கலோரிகள் தேவைப்படுகிறன. எனவே சத்தான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நட்ஸ் சாப்பிட்டால், அது தாய்க்கு மட்டுமல்லாது, குழந்தைக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நட்ஸ் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகச்சிறந்த உணவுப்பழக்கம் அவசியம்!

மிகச்சிறந்த உணவுப்பழக்கம் அவசியம்!

நிறைய ஊட்டச்சத்துள்ள உணவுகளை பாலூட்டும் பெண்கள் சாப்பிட்டால், குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் இது பால் உற்பத்தியை பெருக்குகிறது.

எனவே அதிக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். கால்சியம் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகள் பால் உற்பத்திக்கு உதவுகிறது.

குழந்தைகளின் ஆரோக்கியம்!

குழந்தைகளின் ஆரோக்கியம்!

வழக்கத்திற்கு அதிகமாக 500 கலோரிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது, குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

குழந்தை பாலின் மூலம் தான் தனக்கு தேவையான சத்துக்களை பெறுகிறது. எனவே அதிக பால் உற்பத்திக்கு சத்துள்ள உணவு அவசியமாகிறது, அதே சமயம் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே அது போன்ற உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.

பாலூட்டும் தாய்களுக்கு பாதாம்!

பாலூட்டும் தாய்களுக்கு பாதாம்!

பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.

தாயின் ஆரோக்கியம்!

தாயின் ஆரோக்கியம்!

அனைத்து வகையான நட்ஸ்களையும் சாப்பிடுவது, தாயின் ஆரோக்கியத்தையும், பால் உற்பத்தியையும் அதிகப்படுத்தும். பால் உற்பத்தியில் குறைபாடு உள்ள பெண்கள் கட்டாயமாக இவற்றை சாப்பிட வேண்டியது அவசியம்.

ஒரு கைப்பிடி அளவு!

ஒரு கைப்பிடி அளவு!

நட்ஸ் கடைகளில் எளிதாக கிடைக்கிறது. தினமும் காலை உணவுக்கு முன்னர் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுங்கள். ஊட்டச்சத்திற்காக சில உணவு வகைகளை சிரமப்பட்டு சமைத்து உண்பதைக்காட்டிலும், பாதம் உண்பது சிறந்தது.

குழந்தையின் ஐ.கியூ!

குழந்தையின் ஐ.கியூ!

சரியான அளவு புரோட்டின் குழந்தையின் ஐ.கியூ(IQ) அளவை அதிகரிக்கிறது. மேலும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவுகிறது.

பாதாம் மட்டுமல்லாது மற்ற நட்ஸ்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது தாய்க்கும் சேய்க்கும் சிறந்த ஆரோக்கியத்தையும், நோய்கள் வரமால் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி!

நோய் எதிர்ப்பு சக்தி!

பாதம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது பாதம் சாப்பிடுவதால், குழந்தை பேறுக்கு பிறகு முடி உதிறும் பிரச்சனை இல்லாமல் போகிறது.

மேலும் இது உங்கள் ஹார்மோன்கள் சீராக்குகிறது. எனவே இத்தகைய நன்மைகள் நிறைந்த நட்ஸ்களை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Breast Feeding Benefits of Almonds!

breast feeding benefits of almonds
Story first published: Sunday, May 7, 2017, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter