23 ஆண்டுகள் பழைய விந்து மூலம் கருத்தரித்து, குழந்தை பெற்ற அதிசய நிகழ்வு!

Posted By:
Subscribe to Boldsky

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன் பங்களிப்பு பெரிதும் இராணுவம், விண்வெளி மற்றும் மருத்துவ ஆராய்ச்சியிலும் காணப்படுகிறது. இதில் சிலவற்றில் தீமைகள் இருக்கிறது எனிலும், நன்மைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மருத்துவ துறையில் ஏற்பட்டு கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதோ அதற்கு ஒரு சான்று தான் இது. 23 ஆண்டுகள் பழைய விந்து கொண்டு பெண்ணை கருத்தரிக்க வைத்து சாதித்துள்ளனர் மருத்துவர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி நடந்தது?

எப்படி நடந்தது?

அலெக்ஸ் போவெல்- க்கு பதினைந்து வயது இருக்கும் போதே ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா (Hodgkin's Lymphoma) நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டானது.

இதற்காக கீமோதெரபி எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த உடனேயே அலெக்ஸின் விந்தணு சேமித்து வைக்க திட்டமிடப்பட்டது.

மாற்றாந்தாய்!

மாற்றாந்தாய்!

அலெக்ஸின் மாற்றந்தாய் பாட்ரிசியா தான் இந்த ஆலோசனை வழங்கிய நபர். அலெக்ஸ் பதின் வயதில் இருக்கும் போது அவரது விந்து சேமிப்பு வங்கியில் கொடுத்து வைக்கப்பட்டது.

இதனால், ஒருநாள் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் போது அலெக்ஸின் விந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டனர்.

உலகின் பழைய விந்து!

உலகின் பழைய விந்து!

அலெக்ஸ்-க்கு 15 வயது இருக்கும் போது அவரது விந்து சேமித்து வைக்கப்பட்டது. இது தான் உலகிலேயே பழைய விந்தாக இருந்தது. இந்த சேமிக்கப்பட்ட விந்தை ஐ.வி.எப் முறைப்படி பயன்படுத்தி கருத்தரிக்க வைக்க முடியும்.

பயன்படுத்தப்பட்டது!

பயன்படுத்தப்பட்டது!

23 ஆண்டுகள் கழித்து அலெக்ஸ் திருமணம் செய்துக் கொண்ட பிறகு அவரது மனைவி வி-க்கு அந்த சேமிக்கப்பட்ட விந்தை பயன்படுத்தி கருத்தரிக்க செய்தனர் மருத்துவர்கள்.

பெருமை கொண்ட பெற்றோர்!

பெருமை கொண்ட பெற்றோர்!

அலெக்ஸ் மற்றும் வி போவெல் அவர்களுடைய மகன் க்செவியர் போவெலை ஐ.வி.எப் சிகிச்சை முறையில் அலெக்ஸ் சேமித்து வைத்த 23 ஆண்டு பழைய விந்து மூலம் பெற்றேடுத்துனர்.

க்செவியர் இப்போது மருத்துவ அறிவியலின் உச்சத்தின் மாபெரும் பரிசாக திகழ்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

All Image Source

English summary

Baby Who Was Born Using The Oldest Sperm In The World!

Baby Who Was Born Using The Oldest Sperm In The World!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter