நொடியில் விறைப்படைய புதிய ஸ்ப்ரே - வயாகரா கண்டுபிடிப்பாளர்!

Posted By:
Subscribe to Boldsky

விறைப்பு, இதில் கோளாறு உண்டானால் ஆண்கள் மொத்தமாக தங்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்ந்து விடுவார்கள். இது உடல் மற்றும் மன ரீதியாக தீய மாற்றங்கள் உண்டாக செய்யும். இதற்கான தீர்வாக தான் வயாகரா வந்தது.

The Man Who Invented Viagra, Now Introduces A Spray

வயாகரா விறைப்பை மட்டுமின்றி பல பக்க விளைவுகளையும் அளித்தது. ஆயினும், மனிதர்கள் அதை பயன்படுத்த தயக்கம் காட்டுவது இல்லை. இப்போது, இதற்கு அடுத்து சில நொடிகளில் விறைப்பு ஏற்பட உதவும் என புதியதாக ஒரு ஸ்ப்ரே சந்தையில் அறிமுகமாக இருக்கிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற மாத்திரை!

நீல நிற மாத்திரை!

நீல நிற மாதிரியான வயாகரா விறைப்பு உண்டாகவும், தாம்பத்தியத்தில் சிறந்த ஈடுபடவும் உதவுகிறது. இதன் வீரியம் அல்லது தாக்கத்தை உணர ஒரு மணி நேரமாவது ஆகும். இதை கண்டுபிடித்த அதே நபர், இப்போது, சில நொடிகளில் விறைப்பை உணர உதவும் புதிய ஸ்ப்ரேவை கண்டுபிடித்துள்ளார்.

மூன்று வருடம்!

மூன்று வருடம்!

கண்டுபிடிக்கபட்டுவிட்டாலும் கூட, இது இன்னும் சில ஆய்வுகளில் உட்படுத்த வேண்டும் என்பதால், எப்படியும் இந்த ஸ்ப்ரே சந்தையில் விற்பனைக்கு வர மூன்று ஆண்டுகளாவது ஆகும் என கருதப்படுகிறது.

மூலப் பொருட்கள்!

மூலப் பொருட்கள்!

இந்த ஸ்ப்ரேவின் தயாரிப்பு மிகவும் எளிமையானது. நீர்மமான வயாகராவை ஃபுட் கிரேட் புரோப்பிலீனில் கிளைகோல் உடன் சேர்த்து கலந்து, மீடியமாக பயன்படுத்த வேண்டும்.

டாக்டர் டக் சாவேஜ்

டாக்டர் டக் சாவேஜ்

டாக்டர் டக் சாவேஜ், " இந்த ஸ்ப்ரேவை எல்லா ஆண்களும் மிகவும் வரவேற்பார்கள் என்றும். இது விறைப்பு தன்மை சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும் என்றும். முக்கியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடும் நாட்கள், மற்றும் டேட்டிங் நாட்களில் இது முக்கிய பங்காற்றும் எனவும் கூறியுள்ளார்.

பக்க விளைவுகள்!

பக்க விளைவுகள்!

ஒரு மணி நேரத்தில் விறைப்பு உண்டாக உதவும் வயாகரா உட்கொண்டாலே, மாரடைப்பு, கண்பார்வை மங்குதல் போன்ற பல பக்க விளைவுகள் உண்டாகும் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஒரு விஷயமாகும்.

சில நொடிகளில் விறைப்பை உண்டாக்கும் என கூறப்படும் இது என்னென்ன பக்க விளைவுகள் உண்டாக்குமோ தெரியவில்லை. இருமுகன் படம் தான் கண்ணுக்கு முன் வந்து செல்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Man Who Invented Viagra, Now Introduces A Spray

ஒரு மணி நேரத்தில் விறைப்பு உண்டாக உதவும் வயாகரா உட்கொண்டாலே, மாரடைப்பு, கண்பார்வை மங்குதல் போன்ற பல பக்க விளைவுகள் உண்டாகும் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஒரு விஷயமாகும். சில நொடிகளில் விறைப்பை உண்டாக்கும் என கூறப்படும் இது என்னென்ன பக்க விளைவுகள் உண்டாக்குமோ தெரியவில்லை. இருமுகன் படம் தான் கண்ணுக்கு முன் வந்து செல்கிறது...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter