கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துவதால் உண்டாகும் அபாயங்கள்!

Posted By: Hemalatha
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளீர்கள். "இப்படி சாப்பிடு, இப்படி நட, பிராயணம் அதிகம் பண்ணாதே" என உங்கள் பாட்டி, அம்மாக்கள் உங்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறியிருப்பார்கள்.

ஆனால் நாம் அசட்டையாக நினைக்கும் பொருட்களிலும் நீங்கள் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பது தெரியுமா? அவை என்னென்ன என்று பார்ப்போம்.

Stay away from cosmetics during Pregnancy

உங்கள் தோலிலுள்ள எண்ணற்ற துவாரங்களின் மூலம் உங்கள் தோலும் சுவாசிக்கின்றது .ஆகவே நீங்கள் போடும் மேக்கப், பயன்படுத்தும் சோப்புகள், உபயோகபடுத்தும் லோஷன்கள் ஆகியவை ஆழமாக ஊடுருவும். இப்படியிருக்க அவைகளை கர்ப்ப காலத்தில் எச்சரிக்கையாய் கையாளுவது அவசியம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உபயோகப்படுத்தும் சோப்பினால் பக்க விளைவுகள் உண்டாகி, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கக் கூடும் என சமீப ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

Stay away from cosmetics during Pregnancy

ஆய்வின் போது , சோப்பில் சேர்க்கும் ரசாயனங்களான ப்யூடைல் பேராபின், ப்ரொபைல் பேராபின் ஆகியவற்றின் காரணமாக , குழந்தை எடை குறைந்தோ அல்லது குறைப் பிரசவமாகவோ பிறக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது.

அதே போல் ட்ரைக்ளோகார்பன் என்ற கெமிக்கலும் சில வகை சோப்புகளில் உள்ளது என தெரியப்பட்டுள்ளது. அவைகளும் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

ஆய்வில் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது, இந்த ரசாயனங்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடிய நாளமில்லா சுரப்பியையே பாதிக்கும், இதனால் கர்ப்ப காலத்தில் பாதிப்பு வரும் என்று அச்சுறுத்துகின்றனர்.

எது எப்படியோ சோப்பினை பயன்படுத்தும்போது அதில் சேர்க்கப்பட்ட பொருட்களை பார்த்து பின் வாங்குவது நல்லது. அல்லது முடிந்த வரை கெமிக்கல் சோப் போடுவது தவிர்த்து, இயற்கையான கடலை மாவு, பயித்தம் மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மேலும் கர்ப்ப காலத்தில் உபயோகிக்கக் கூடாத காஸ்மெடிக்ஸ் :

ஃபார்மால்டிஹைட் :

இந்த கெமிக்கல் நெயில் பாலிஷ், கண்களுக்கு போடும் ஐ லேஷ், முடியை நேர்படுத்தும் ஸ்ட்ரெயிட்டனர் ஆகியவற்றில் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இதனை தவிருங்கள்.

Stay away from cosmetics during Pregnancy

டை எத்தனாலமைன் :

இது மிகவும் அபாயகரமான கெமிக்கலாகும். இது சருமத்திற்கு பூசும், லோஷன்களிலும், தலைக்கு பயன் படுத்தும் டை , கலரிங் ஆகியவற்றிலும் உள்ளது.

ஹைட்ரோ குயினோன் :

இது சருமத்தினை நிறத்தினை அதிகரிக்கச் செய்யும் ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ளது.

Stay away from cosmetics during Pregnancy

டொலுவின்:

இதுவும் நெயில் பாலிஷில் உள்ளது.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாகும். ஆகவே பெண்களே கர்ப்ப காலத்தில் உங்களையும் தவிர்த்து, உங்களினுள் வளரும் சிசுவிற்கும் எந்த வித தீங்கும் அண்ட விடாமல் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரும் பொறுப்பினை கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் விளைவுகள் தரும் இந்த பொருட்களை உபயோகிக்காமல், இயற்கையோடு உறவாடி நன்மைகளைப் பெறுங்கள்!

English summary

Stay away from cosmetics during Pregnancy

Ingredients to avoid during pregnancy, Read for further details.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter