Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள், ஆனா ஆண்களும் தெரிஞ்சுக்கனும்!
கர்ப்பிணி பெண்களை கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆம், உடலளவில் அவர்கள் ஏற்கனவே நிறைய கவலைகளை தாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள், அந்த பத்து மாதத்திலும். மேலும், கர்ப்பிணி பெண்கள் சந்தோசமாக இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக கர்ப்பிணி பெண்களிடம், கர்ப்பக் காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இது அவர்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் தெரியும். ஆனால், ஆண்களுக்கு, கணவன்மார்களுக்கு?? ஆண்களும், கர்ப்பிணி பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தகவல் # 1
கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி மூட் ஸ்விங் ஏற்படும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி பதட்டம், ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மாறி, மாறி வரும்.

தகவல் # 2
கர்ப்பிணி பெண்கள் காலை எழுந்ததும் மிகவும் சோர்வாகவும், உடல்நலம் குன்றியும் காணப்படுவார்கள். இது கர்ப்பக் காலத்தில் இயல்பு தான். சில சமயங்களில் இது பகல் நேரத்திலும் தொடரலாம்.

தகவல் # 3
கர்ப்பிணி பெண்களுக்கு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு. கர்ப்பக் காலத்தில் அவர்களது குடல் இயக்கும் குறைவாக இருப்பதால் தான் இந்த தொல்லைகள் ஏற்படுகின்றன.

தகவல் # 4
மேலும், கர்ப்பம் காரணமாக, கருவறையில் சிசு வளர வளர, அதன் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். சில சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் கூட இரவில் சிறுநீர் வெளிப்படலாம்.

தகவல் # 5
குழந்தை எட்டி உதைப்பது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக ஆச்சரியப்படும், வியக்கும் விஷயம் குழந்தை எட்டி உதைப்பது. இதை விட பெரிய மகிழ்ச்சி ஓர் பெண்ணின் வாழ்க்கையில் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகவல் # 6
சந்தோசங்கள் ஒரு பக்கம் இருப்பினும், அதே போல, அவர்களுக்கு பயமும் இருக்கும். முக்கியமாக பிரசவ வலி. குழந்தை பிறக்கும் போது ஏற்படும் வலி பற்றிய பயம் அவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தகவல் # 7
புதிய உடைகள்! பொதுவாகவே பெண்களுக்கு புதிய உடைகள் பிடிக்கும். கர்ப்ப காலத்தில், மற்றும் அதற்கு பிறகு இது இன்னும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதம் கடக்கும் போதும் உடைகள் புதியதாக வாங்க வேண்டி இருக்கும். மற்றும் பிரசவத்திற்கு பிறகு அவர்களுக்கான பிரத்தியோக உடைகளும் வாங்கி தர வேண்டும்.



Click it and Unblock the Notifications
