கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க விரும்புவோர் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

By: John
Subscribe to Boldsky

கருச்சிதைவு ஏற்படுவது என்பது மிகவும் வலி மிகுந்த, அதிர்ச்சியான விஷயம் ஆகும். ஆயிரம் கனவுகள் ஓர் நொடியில் சுக்குநூறாகும் தருணம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை எனும் ஸ்தானம் தான் பெண் என்ற முழுமையை தருகிறது. அது நடக்க போகிறது என்னும் சமயத்தில் கருச்சிதைவு ஏற்படுவது அவர்களை மனதளவிலும், உடலளவிலும் வெகுவாக பாதிக்கும்.

கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவுக் கொள்ள வேண்டிய நாட்கள்!!!

கருச்சிதைவு என்பது சில நேரங்களில் விபத்தாக ஏற்படுகிறது, சிலருக்கு உடல்நல குறைவால் ஏற்படுகிறது, சிலர் அவர்களாகவே சூழ்நிலை கருதி கருவினை கலைத்து விடுகின்றனர். எந்த காரணத்தால் கரு கலைந்தாலும், அதன் பிறகு கருத்தரிக்க விரும்புவோர் சில வழிகளை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

கருவறையில் இருக்கும் சிசுவைப் பற்றிய அபூர்வமான சில விஷயங்கள்!!!

தம்பதியர்கள் சிலர் கருச்சிதைவு ஏற்பட்டவுடனே மறுபடியும் கருத்தரிக்க விருபுவார்கள், சிலர் சிறிது காலம் கழித்து முயற்சிப்பார்கள். இவை இரண்டுமே தவறு என்கின்றனர் மருத்துவர்கள். கருச்சிதைவு ஏற்பட்ட சரியான நேர இடைவளியில் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இனி, கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க விரும்புவோர் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருச்சிதைவு, கருவுறுதலை பாதிக்காது

கருச்சிதைவு, கருவுறுதலை பாதிக்காது

கருச்சிதைவு ஏற்படுவதனால் மீண்டும் கருவுறுதல் பாதிக்கப்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முறையான மருத்துவரிடம் சென்று கருகலைப்பு செய்ய வேண்டும். ஒருவேளை கருகலைப்பு செய்யும் போது பிறப்புறுப்பில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

கருப்பை வாய் வலுவிழக்கும்...

கருப்பை வாய் வலுவிழக்கும்...

தொடர்ச்சியான கருகலைப்பினால் கருப்பை வாய் வலுவிழக்கும் என்றும், திறனற்று போகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். புதுமண தம்பதிகள் கருத்தரிப்பை தள்ளி வைக்க வேண்டுமெனில் முறையான கருத்தடை முறைகளை பின்பற்றவும். தொடர்ச்சியாக கருகலைப்பு செய்வதனால் கருப்பை வலுவிழந்து போகும். தொடர்ச்சியாக கருகலைப்பு செய்யும் போது கருப்பையை சுத்தம் செய்யும் முறையின் காரணமாகவே கருப்பை வாய் திறனற்று போக காரணமாகிறது.

உடனே கருத்தரிப்பு...

உடனே கருத்தரிப்பு...

கருகலைப்பு ஆனா உடனே மீண்டும் கருத்தரிக்க முனைவது ஆபத்தானது. கருகலைப்பு ஏற்பட்ட மூன்று மாதம் வரை இடைவேளை விட வேண்டும். கருக்கலைப்பின் போது கொடுக்கப்படும் மருந்து, மாத்திரைகள், கருப்பையை மிகவும் மென்மையாக ஆக்கியிருக்கும். மற்றும் நிறைய இரத்த போக்கினால் கருப்பை வலுவிழந்து இருக்கும். அந்த சமயங்களில் கருத்தரிக்க முயல்வது ஆபத்தானதாக முடிய வாய்ப்பிருக்கிறது.

கருகலைப்புக்கு பிறகு கருத்தடை

கருகலைப்புக்கு பிறகு கருத்தடை

ஒருமுறை கருகலைப்பு ஆனதற்கு பிறகு கட்டாயம் கருத்தடை முறைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், மேற்கூறியவாறு தொடர்ச்சியான கருகலைப்பினால்பெண்ணின் கர்பப்பை திறன் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. மற்றும் கருகலைப்பு ஏற்பட்ட உடனே கருத்தரிக்க முயன்றாலும், கருப்பையின் திறன் குறைவால் கரு நிலைக்காது

தகுந்த மருத்துவ ஆலோசனை

தகுந்த மருத்துவ ஆலோசனை

பெண்ணின் உடல்திறன் மற்றும் நிலைக்கு ஏற்ப, கருகலைப்பிற்கு பின் எப்போது கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்பது வேறுபடும். எனவே, கருகலைபிற்கு பின் கருத்தரிக்க முயற்சிப்பவர்கள் கட்டாயம் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

சீரான முறையில் உடலுறவு

சீரான முறையில் உடலுறவு

கருகலைப்பு நடந்த பிறகு கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதனால், மீண்டும் கருவுற முயற்சி செய்பவர்கள் கருத்தரிக்க சரியான நாட்களில் சீரான முறையில் உடலுறவுக் கொள்ள வேண்டும். ஏனெனில், கருத்தடை மாத்திரையின் வீரியம் முழுமையாக குறைந்திருக்காது என கூறப்படுகிறது. எனவே, கருகலைப்புக்கு பிறகு கருத்தரிக்க விரும்பவோர் பல முறை உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Facts About Getting Pregnant After Abortion

Do you know about the six facts about getting pregnant after abortion? read here.
Subscribe Newsletter