Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
கருத்தடையும், கருத்தடை சாதனங்களும்…
அக்காலத்தில் எல்லாம் திருமணம் ஆன பின்னர், உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் தற்போதைய நவீனமயமான காலத்தில் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக திருமணமான பின்னர், தம்பதியர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டாம் என்று நினைத்தாலும், உடலில் உள்ள ஹார்மோன்களின் தூண்டுதலினால், தம்மை மறந்து உறவில் ஈடுபட நேரிடுகிறது.
இப்படி ஈடுபட்ட பின்னர் உருவான கருவை பலர் கலைக்கின்றனர். இன்னும் பலரோ கலைக்க மனமில்லாமல், குழந்தைப் பெற்றுக் கொண்டு கஷ்டப்படுகின்றனர். ஆகவே எதிர்பாராத கர்ப்பம், கருக்கலைப்பு என்றெல்லாம் கஷ்டப்படாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ, கருத்தடை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் மிகவும் அவசியமானதாக உள்ளது.
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!
எனவே இப்போது கருத்தடை சாதனங்கள் பற்றி முழுமையாக காண்போம். பொதுவாக கருத்தடை சாதனங்களில் ஆண்களுக்கான காண்டம் (Condoms), பெண்களுக்கான காண்டம் என்றெல்லாம் உள்ளது. இருப்பினும், நம் நாட்டில் பெண்களுக்கான காண்டம் நடைமுறையில் இல்லாததால், பெண்களுக்கான கருத்தடை சாதனங்களாக காப்பர்-டி, கருத்தடை மாத்திரை, லெவொநர்ஜெஸ்ட்ரல் (Levonorgestrel) என பல உள்ளன. இப்போது இவைகளைப் பற்றி பார்ப்போமா!!!

லெவொநர்ஜெஸ்ட்ரல் மற்றும் காப்பர்-டி
கருப்பையில் வைக்கக்கூடிய லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனமும் காப்பர்-டி போன்று தான் இருக்கும். ஆனால், இதில் காப்பருக்கு பதிலாக கருத்தடை மாத்திரையை வைத்திருப்பார்கள். ஏனெனில் காப்பர் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த காப்பர்-டியை பொருத்திக் கொள்வதால் மாதவிலக்கின்போது மட்டும் அதிக இரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
ஆனால், கருப்பையில் வைக்கக்கூடிய இந்த லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதனத்தில், காப்பருக்குப் பதில் லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை வைக்கப்பட்டிருப்பதால், இது போன்ற எந்த பக்க விளைவுகளையும் இந்த மாத்திரை ஏற்படுத்துவதில்லை. இந்த மாத்திரை, விந்தணு கருப்பைக்குள் நுழைவதையும் ஐந்து வருடம் வரை தடுக்கிறது.

பயன்படுத்தும் காலம்
காப்பர்-டி பொருத்திக் கொண்டவர்கள் மூன்று வருடங்களுக்குப் பிறகும், லெவொநர்ஜெஸ்ட்ரல் மாத்திரை பொருத்திக் கொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று மாற்று சாதனத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த சாதனத்தை கருப்பையில் இருந்து நீக்கி விட வேண்டும்.

பக்கவிளைவுகள்
ஒருவேளை அப்படி செய்யாமல் விட்டால், நீண்ட நாட்கள் சாதனம் ஒரே இடத்தில் இருந்து நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி, சாதனம் தன் சக்தியை இழந்துவிடுவதால் மீண்டும் கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக இந்தக் கருத்தரிப்பு கருப்பையில் நிகழாமல், கருப்பை குழாய் போன்ற இடங்களில் நிகழ்ந்து (Ectopic Pregnancy), இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவசியம் மருத்துவரிடம் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவசர கால கருத்தடை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது. காரணம், அந்த மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

ஸ்பெர்மிஸைட்ஸ்
ஸ்பெர்மிஸைட்ஸ் (Spermicides) எனப்படும் ஜெல் வகைகளும் உண்டு. இவற்றை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் உபயோகிக்கலாம். இவை, உள்ளே செல்லும் விந்தணுக்களின் உயிர்ப்புத் தன்மையை அழித்துவிடும் சக்தி படைத்தவை.

கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகளை (Oral Contraceptive Pills) உட்கொள்பவர்கள், அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இவை கர்ப்பவாயில் சுரக்கிற மியூக்கஸ் (Mucous) என்கிற திரவத்தின் சுரப்பை அடர்த்தியாக்குவதால், விந்துவினால் நீந்தி உள்ளே செல்ல இயலாது. எனவே கரு உருவாகாது.
எத்தனை வருடங்கள் கரு உருவாகக் கூடாது என்று நினைக்கிறார்களோ அத்தனை வருடங்கள் தினமும் தவறாமல் இந்தக் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் விந்தணுவை கருப்பைக்குள் நுழையவிடாமல் தடுப்பதோடு, சினைமுட்டை உருவாக்கத்தையும் தடுக்கிறது. எனவே இரண்டு விதங்களில் கரு உருவாவது தடுக்கப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதும் சிறந்த கருத்தடை
குழந்தை பிறந்து சில நாட்களே ஆன தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்த கருத்தடை முறைதான். தாய்ப்பால் கொடுக்கும் போது பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன், சினைப்பையில் (Ovary) கரு முட்டைகள் உருவாகாமல் தடுக்கிறது. கரு உருவாகக் காரணமாக இருக்கும் இந்த ஹார்மோன் தாய்ப்பாலை சுரக்கச் செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால், அந்த சமயத்தில் கரு முட்டை உருவாக மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது.

மாதவிடாய் காலங்கள்
இவை தவிர இயற்கையான கருத்தடை முறையும் உண்டு. மாதவிடாய் ஆரம்பித்த மூன்றாவது நாளில் இருந்து பத்தாவது நாளுக்குள்ளும், பிறகு இருபதாவது நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் வருகிற நாள் வரை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். இந்த சமயங்களில் கரு உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.



Click it and Unblock the Notifications