For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்தும் வைட்டமின்கள்!!!

By Boopathi Lakshmanan
|

இன்றைய நாட்களில் தம்பதியர்கள் பலரும் தாங்கள் கருத்தரிக்கும் பொருட்டாக அதிக அளவு முயற்சிகளை மேற்கொள்வது பரவலாகவே அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், துணைவரின் உடல் நிலை, செய்முறைகள், மருந்துகள், உடலிலுள்ள குறைபாடுகள் போன்ற பல காரணங்களும் கருவுறுதலை தொடர்புடைய காரணிகளாக உள்ளன. கருவுறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடையும் தம்பதியர்கள் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து அறிவுரை பெறுவது மிக அவசியமாக அமைகின்றது. இந்த அறிவுரை வழியாக அவர்கள் கருவுறும் முயற்சியில் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்று அறிவதும் மற்றும் பின் நாட்களில் அந்த தவறுகளை களைவதும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

ஆண்களின் மலட்டுத் தன்மையை சரிசெய்யும் காய்கறிகள்!!!

சில சமயங்களில் வைட்டமின் குறைபாட்டு போன்ற சாதாரண பிரச்னையாகவும் கூட இருக்கலாம். ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலமாக கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். ஆண்களின் விந்துக்களின் தன்மை மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், கருவுறும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிடும். சில வைட்டமின் குறைபாடுகள் ஆண்களின் ஆசையையும் மற்றும் செயல்பாட்டையும் குறைத்து விடுவதால் கருத்தரிக்கும் முறையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆகையால் ஆண்களின் கருவுறும் திறனை அதிகரிக்க வைட்டமின்கள் அதிக அளவில் தேவைபடுகின்றன.

நீரிழிவினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கும் சில வழிகள்!!!

இன்றைய நவீன காலத்தில் ஆண்களின் கருவுறும் திறனை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாக்கிடும் முக்கியமான விஷயமாக ஆண்களின் மன அழுத்தம் உள்ளது. குறைந்த அளவு வைட்டமின உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை ஆகியவை குறைகின்றன. அது மட்டுமல்லாமல் 90% ஆண்களின் கருத்தரிப்பு தன்மை குறையக் காரணம், அவர்களிடம் குறைந்த எண்ணிக்கையிலான விந்து உற்பத்தி அல்லது ஆரோக்கியமற்ற விந்துதன்மை அல்லது இரண்டு பிரச்னைகளாலுமே ஏற்படுகின்றன. மீதம் உள்ள ஆண்கள் குறைபாடுகள், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும மரபணு கோளாறுகள் போன்றவை உள்ளன.

ஆண்களின் கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும் வைட்டமின்கள் பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின்கள்

வைட்டமின்கள்

வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பல வைட்டமின்கள் ஆண்களின் விந்துகளை அதிகப்படுத்துகின்றன. குறிப்பாக ஃபோலிக் அமிலத்தின் குறைபாடு குறைந்த விந்துகளையும் அல்லது ஆரோக்கியமற்ற விந்துக்கள் உற்பத்தியாகவும் காரணமாக உள்ளது. நீங்கள் ஃபோலிக் அமிலத்தை உட்கொண்டால் விந்துகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை, பட்டாணி, அஸ்பாரகஸ் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஜிங்க்

ஜிங்க்

செலினியம் மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிமங்கள் விந்துக்களை அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகின்றன. கடல் சிப்பி, பிரேசில் நட்ஸ், பட்டாணி, டூனா மீன்கள் ஆகியவற்றில் இத்தகைய கனிமங்கள் அத்கம் இருப்பதால் இவை நிச்சயமாக விந்துகளை அதிகரித்து கருவுறும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன.

ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள 14 உணவுகள்!!!

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ குறிப்பாக விந்தணுக்களை அதிக அளவில் உருவாக்க வகை செய்கின்றது. இதனால் ஆண்களின் கருத்தரிக்கும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. சில சமயங்களில், விந்துக்கள் அதிக அளவில் உருவானாலும் அதன் வீரியம் குறைவாக உள்ளது. வைட்டமின் ஈ ஏறத்தாழ 10 சதவிகிதம் விந்தின் தன்மையை சரி செய்து, அதை வீரியமான நிலைக்கு கொண்டு வருகிறது. இத்தகைய வைட்டமின் ஈ நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயா போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!!!

கார்னைட்டின்

கார்னைட்டின்

கார்னைட்டின் ஆண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. விந்துக்கள் பெண் முட்டையை தேடி வெகு தூரம் சென்றடைய அதிக அளவு சக்தி தேவைப்படுகின்றது. கார்னைட்டின் விந்திற்கு தேவையான சக்தியை தந்து அது பயணம் செய்யும் போது எரிந்து சக்தியை செயல்படுத்துகிறது. இத்தகைய கார்னைட்டின் மாட்டிறைச்சி, சிக்கன், பால் பொருட்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தின் தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. வைட்டமின் சி மற்றும் இ, கோ-என்சைம் Q10 (CoQ10), செலினியம், N-அசிடைல்சிஸ்டைன் (NAC) ஆகியவை விந்துக்களின் வீரியத்தை அதிகரிக்க உதவுவதை உறுதிப்படுத்தியுள்ளன. நல்ல செல்களின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளில் விந்துக்களின் எண்ணிக்கை அதிகளவிலும் மற்றும் நகரும் தன்மையுடனும் உள்ளன. இதன் மூலம் விந்தணுவின் வீரியம் அதிகரிக்கின்றன. ஆகவே பெர்ரிப் பழங்கள், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை உணவில் சேர்த்தக் கொள்ள வேண்டும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் 15 உணவுகள்!!!

லைக்கோபீன்

லைக்கோபீன்

தக்காளி, தர்பூசணி மற்றும் பல பழங்களுக்கு சிவப்பு நிறத்தை தரும் லைக்கோபீன் என்ற கரோடினாய்டு நிறமி இயற்கையாகவே கிடைத்து வருகிறது. குறைந்த அளவு லைக்கோபீனை உணவில் சேர்த்துக் கொண்டால், அது குறைந்த அளவு வீரியமுள்ள விந்துக்களை உற்பத்தி செய்து ஆண்களிடம் மலட்டு தன்மையை உண்டாக்குகிறது. இத்தகைய குறைகளுடன் ஆண்கள் இருந்தால் லைக்கோபீன் உட்கொள்வதன் மூலம் விந்துக்களை அதிகப்படுத்தவும், நல்ல ஆரோக்கியத்துடன் பெருக்கவும் முடியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் விந்தின் குறிப்பிட்ட மெல்லிய தோலை பலப்படுத்தி முட்டையுடன் சேர்ந்து உயிருள்ள கருவை உருவாக்க உதவுகிறது. ஒமேகா-3 குறைபாடின் காரணமாக விந்துக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்துக்களின் செயல் திறன் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே கடல் உணவுகளான மீன்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைவாக இருந்தாலும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படும். வைட்டமின் டி-யை ஆய்வு கூடங்களில் வைத்து பரிசோதிக்கும் பொருட்டாக விந்தணுக்களில் சேர்த்த போது, அவை அதிக அளவு விந்தியக்கத்தை ஏற்படுத்துவதை தெளிவாக காண முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் விந்தணு முட்டையை வேகமாக வந்தடைய உதவும் 'அக்ரோசம் ரியாக்ஷன்' புரியவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamins To Improve Fertility In Men

In modern times stress too plays a major role in affecting fertility among men. Lack of vitamins in diet results in lot of health issues thereby affecting quality and quantity of sperm. Here are vitamins that you are essential to improve fertility among men.
Desktop Bottom Promotion