Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
இறுதி மாதவிடாய் வரப்போவதற்கான அறிகுறிகள்!!!
பெண்களுக்கு இறுதி மாதவிடாய் மிகவும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஏனெனில், அந்த அளவு இறுதி மாதவிடாயின் போது, பெண்கள் நிறைய அவஸ்தைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக இறுத மாதவிடாயானது 45-50 வயது காலங்களில் நிகழும். இந்த நிகழ்வு ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் நிலை, இனிமேல் இல்லை என்பதை உணர்த்துவதற்கான ஒரு அடையாளமாகும்.
மேலும் இறுதி மாதவிடாய், பெண்களின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஸ்ட்ரோஜென்னின் அளவானது குறைவதோடு, முட்டை உற்பத்தியானது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய அடையாளங்களை வெளிப்படுத்தும் இறுதி மாதவிடாய் சாதாரணமானது அல்லது. இது வரப்போகிறது என்றால், உடலில் சில மாற்றங்கள் தெரியும். ஒருசிலருக்கும் இறுதி மாதவிடாயானது சீக்கிரம் வந்துவிடும். அவ்வாறு விரைவில் வந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த மாற்றங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்துகொள்ளுங்கள்.

* இறுதி மாதவிடாய் காலமாக இருந்தால், உடலானது அனலாக இருக்கும். சொல்லப்போனால் வெப்பத்தின் நடுவே அமர்ந்திருப்பது போன்று இருக்கும். ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது. மேலும் என்னதான் ஜன்னலை திறந்து வைத்தோ அல்லது ஃபேன் போட்டு உட்கார்ந்தாலோ, அது தணியாமல் இருக்கும். இது ஒரு நாளைக்கு குறைந்தது, 3-4 முறை ஏற்படும்.
* இரவில் படுக்கும் போது அதிகப்படியான வியர்வை வெளியேறும். மேலும் படுக்கும் இடமே ஈரமாகிவிடும். பின் நிம்மதியாக தூங்கவே முடியாது.
* இறுதி மாதவிடாய் சுழற்சி வருவதற்கு முந்தைய மாதத்தில் ஏற்படும் சுழற்சியில், அதிகப்படியான இரத்தப்போக்கோ அல்லது லேசான இரத்தப்போக்கோ இருக்கும். இவ்வாறு முறையற்று இருந்தாலும், இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கு அறிகுறியாகும்.
* வயதாகிவிட்டால் சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருக்கும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜெனின் அளவானது குறைவதால், சருமத்தினால் சரியான ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாது என்பதாலேயே தான்.
* ஈஸ்ட்ரோஜெனின் அளவு குறைவதால், மூட்டு வலி, இடுப்பு வலி, தலை வலி, தசை வலி போன்ற வலிகள் கடுமையாக அடிக்கடி ஏற்படும்.
* தூக்கமின்மை ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜெனின் அளவு குறைவாக இருப்பதே ஆகும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாததால், ஒருவித டென்சன், மன இறுக்கம் போன்றவை ஏற்படும்.
* போதிய தூக்கம் இல்லாத காரணத்தினால், எந்நேரமும் உடலானது சோர்வுடன் இருக்கும். குறிப்பாக எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது.



Click it and Unblock the Notifications