Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கருச்சிதைவிற்கு பின் தொடர்ந்து வரும் பிரச்சனைகள்!!!
ஒரு பெண் என்பவள் தாய்மை அடைவதன் மூலமாகவே முழுமை அடைகிறாள். தான் கருவுற்றிருப்பதை கண்டறிந்த உடன் தன்னை மட்டுமல்லாது தனது வயற்றில் வளரும் குழந்தையையும் பேணி பாதுகாக்க தொடங்குவாள். இப்படி கற்பனை செய்து கொண்டிருக்கும் வேளையில் கருச்சிதைவு ஏற்பட்டால் அது அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரிதும் பாதிக்கும்.
கருச்சிதைவு என்பது வலிமிகுந்த வெளிப்பாடு. அதிலும், கருச்சிதைவிற்கு பின்னர் வரும் பிரச்சனைகள் மேலும் வலி மிகுந்தவை. நீங்கள் கருச்சிதைவை விரும்பாதவராக இருந்தாலும் கருச்சிதைவின் பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். கருச்சிதைவை சட்டரீதியாக கொண்டுவர பல பேர் குரல் கொடுத்தாலும் கூட, இது பாதுகாப்பானது அல்ல. கருச்சிதைவிற்கு பின் ஒரு பெண் சந்திக்கும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான பிரச்சனைகள் பல இருக்கின்றன. பெண்கள் இந்த கருச்சிதைவினால் பெரிய மற்றும் சிறிய பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாந்தி, காய்ச்சல், இரத்தப்போக்கு, வயிற்று வலி போன்ற சிறிய பிரச்சனைகளையும் இரத்த சோகை, எண்டோடாக்சிக் அதிர்ச்சி, வலிப்பு, கர்ப்பப்பை வாய் சேதம் போன்ற பெரிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். எனினும், சிலருக்கு மெல்லிய இரத்த போக்கு மற்றும் லேசானா வலியோடு நின்று விடும். இருப்பினும் கீழே சொல்லப்பட்ட இந்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

* கெட்ட வாடையுடன் பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் கழிவு
* காய்ச்சல்
* அடிவயிற்று வலி
* அதிகப்படியான இரத்தப்போக்கு தொடர்ச்சியாக ஏற்படுதல்
* நீடிக்கும் வலி
கருச்சிதைவிற்கு பின் வரும் பிரச்சனைகளை கவனமாக கையாளாவிட்டால் அது மரணத்தை கூட ஏற்படுத்தி விடும். கருச்சிதைவினால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது உங்கள் மருத்துவரை அணுகி உதவி பெற்றுக் கொள்ளுங்கள்.
மிகவும் கடினமான காலம்:
* கருச்சிதைவினால் உண்டாகும் மனரீதியான காயத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். நீங்கள் ஒரு தாயாக உங்களை கற்பனை செய்து வைத்திருக்கும் நேரத்தில் நிகழும் இந்த கருச்சிதைவு உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.
* ஒரு குழந்தையை இழப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. கருச்சிதைவிற்கு பின் நீங்கள் தனிமையாக்கப்பட்டதாக உணர்வு ஏற்பட்டு தனிமை நிலைக்கு தள்ளப்படுவீர்கள். தனியாக இருப்பதை தவிர்த்து, உங்கள் உறவினருடனோ நண்பருடனோ கணவருடனோ இருப்பது நல்லது.
* இதில் இருந்து மீண்டு வருவதற்கு, ஒரு பேப்பரிலோ அல்லது டைரியிலோ உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். இதன் மூலம் கருச்சிதைவினால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து சற்று விடுபடலாம்.
முக்கியமான சிகப்பு அபாயம்:
அதிக இரத்த போக்கு என்பது கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் மிகப் பெரிய பிரச்சனை ஆகும். இப்படி இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் சானிடரி துணியை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய அவஸ்தைகளும் கூட ஏற்படும். சில பெண்களுக்கு கருச்சிதைவிற்கு பின்னர் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.
டி & சி:
கருச்சிதைவு முழுமையாக ஏற்படாவிட்டால் உங்கள் கருப்பறையில் சில திசுக்கள் தங்கிவிடும் ஆபாயம் ஏற்படும். அவ்வாறு நிகழ்ந்தால், கண்டிப்பாக டி & சி செய்ய வேண்டி வரும்.. எனினும், டி & சி செய்வதனால் ஆஷெர்மேன் சிண்ட்ரோம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். பின்னாளில் மீண்டும் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் நிலைமையை இது உண்டாக்கும். கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்.
மீண்டும் கருச்சிதைவு:
கருச்சிதைவினால் ஏற்படும் மோசமான பிரச்சனை என்ன தெரியுமா? ஒரு முறை ஏற்பட்டால் தொடர்ச்சியாக பல முறை கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு சில பெண்களுக்கு, முதல் கருச்சிதைவை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை கூட கருச்சிதைவு ஏற்படுகிறது.
கவனம் தேவை:
கருச்சிதைவிற்கு பின் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். கருச்சிதைவிற்கு பின் ஏற்படும் தொற்றுக்கள் அபாயகரமானவை. அப்படி ஏற்படும் வேளையில் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
ஒழுங்கின்மை:
கருச்சிதைவு உங்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கும். அது உங்கள் கவலைகளை அதிகரிக்கச் செய்யும். ஒரு சில பெண்களுக்கு PTSD எனப்படும் போஸ்ட் ட்ரௌமாடிக் ஸ்ட்ரெஸ் டிசாடர் என்னும் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இடம்மாறிய கரு:
கருச்சிதைவின் காரணமாக எக்டோபிக் கருவுற்றல் ஏற்படலாம். எக்டோபிக் கருவுற்றல் என்பது கருமுட்டைகள் தவறான இடத்தில் வளருவதாகும். சுருக்கமாக, கருமுட்டைகள் கருமுட்டை குழாயில் வளருவதாகும்.
மலட்டுத்தன்மை:
சில கருச்சிதைவினால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், நீங்கள் மறுமுறை கருவுறும் வாய்ப்பை தடுக்கும்.
கருச்சிதைவை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இது உங்களை மட்டுமால்லாது உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கும். இதில் இருந்து மீண்டு வருவதற்கு உளவியல்ரீதியான அறிவுரைகளை பெறுவது நல்லது. வரும் முன் காப்பது நல்லது என்பதால் கவனமாக இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
