Just In
- 2 hrs ago
உடலுறவு மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 3 hrs ago
சர்க்கரை நோயாளிகளே! உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
- 5 hrs ago
எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்க?உங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா?
- 6 hrs ago
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
Don't Miss
- Movies
தடவி.. தடவி.. என்னா எக்ஸ்ப்ரஷன்.. எல்லை மீறும் இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
- News
சென்னையில் 4,000-த்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு- 37 பேர் உயிரிழப்பு- மாவட்டங்கள் நிலவரம்!
- Finance
எல்ஐசியின் ஜீவன் லாப்.. குழந்தைகளின் கல்வி திருமணத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்..!
- Automobiles
ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...
- Sports
எனக்குகூட கிடைக்கல...மோரீசுக்கு அதிகமா கிடைச்சுருக்கு... என்ன இப்படி கிளம்பிட்டாரு பீட்டர்சன்!
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் MCL நிறுவனம்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க குழந்தைக்கு தினமும் நீங்க கட்டிப்பிடி வைத்தியம் செய்றீங்களா?
குழந்தைகளைக் கட்டிப்பிடிப்பதில் அறிவியல் ரீதியாக பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நீங்கள் சோகமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ உணரும் போது உங்களுக்கு பிடித்தமானவர்களைக் கட்டி அணைக்கும் போது கிடைக்கும் வெப்பம் உங்களின் மனவலியை குறைக்கும். நாம் சந்தோசமாக இருக்கும் போது எவ்வாறு மற்றவர்களைக் கட்டியணைத்து சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்கிறோமோ அதே போலச் சோகமான நேரங்களிலும் மற்றவர்களை அணைக்கும் போது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இதனைத் தவிரக் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் வேறு சில நன்மைகளும் உள்ளன. குறைந்தது குழந்தைகளை 20 நிமிடங்களாவது கட்டி அணைப்பது அவர்களைச் சிறந்தவர்களாக, ஆரோக்கியமானவர்களாக, மகிழ்ச்சியானவர்களாக, அதிக நெகிழ் திறன் கொண்டவர்களாக மற்றும் பெற்றோர்களுடன் மிக நெருக்கமானவர்களாக மாற்றும்.

ஸ்மார்ட் கிட்ஸ்
குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தோல் தொடர்பு அல்லது கட்டிப்பிடி வைத்தியம் தேவைப்படுகிறது. அதாவது கிழக்கு ஐரோப்பிய அனாதை இல்லங்களில் கைக்குழந்தைகளை அவர்களுடைய தொட்டில்களில் போட்டுத் உணவுகள் பாட்டில்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டன. எந்த விதமான தொடுதல் மற்றும் கட்டிப் பிடித்தல் போன்றவை அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட வில்லை. இதனால் இந்த குழந்தைகள் உடல் பலவீனமானவர்களாகவும், அறிவுவளர்ச்சி குறைந்தவர்களாகவும் இருந்து பல சிக்கல்களை எதிர்கொண்டனர். பின்னர் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி அரவணைப்பும் மற்றும் 20 நிமிட கட்டிப் பிடித்தலும் கொடுத்த பின்பு அவர்களின் அறிவுவளர்ச்சியில் மாற்றத்தினை கண்டறிந்துள்ளனர். எனவே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க கட்டிப்பிடி வைத்தியம் மிகவும் முக்கியம்.
MOST READ: குழந்தைகள் விளையாட பேட்டரி கார் வாங்கி கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகளின் வளர்ச்சி
குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு உடல்ரீதியான தொடர்பு இல்லையெனில் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே குழந்தைகளைத் தொடுதல் அல்லது கட்டி அணைக்கும் போது அவர்களின் இந்த வளர்ச்சி குறைபாட்டினை சரி செய்ய முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளைக் கட்டி அணைக்கும் போது காதல் ஹார்மோன் எனப்படும் ஆக்ஸிடாஸின் தூண்டப்படும், மேலும் இன்சுலின் வளர்ச்சி காரணி மற்றும் நரம்பு வளர்ச்சி காரணி போன்ற பல வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, நல்ல உணர்வுகளைத் தரும் ஹார்மோன்களை உடலில் வெளியிட்டு முக்கியமான மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைத் தூண்டுவது

ஆரோக்கியமான குழந்தைகள்
கட்டி அணைக்கும் போது ஆக்ஸிடாஸின் அதிகரிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலங்கள் வலுப்படுத்தப்பட்டு தைராய்டு ஹார்மோன்களின் பிளாஸ்மா அளவினை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

கோபம்
கோபத்தில் இருக்கும் குழந்தைகளைக் கட்டி அணைப்பது சரியா இல்லையா என்று சில பெற்றோர்கள் சந்தேகத்தில் இருப்பார்கள். உங்கள் குழந்தை அதிக கோபம் கொண்டு அழுபவர்களாக இருக்கலாம் அல்லது கத்துபவர்களாக இருக்கலாம். அம்மாவின் அரவணைப்பைத் தவிரக் குழந்தையின் கோபத்தைக் கட்டுப்படுத்த வேறு எதுவும் தேவையில்லை.

நெகிழ் திறன்
குழந்தைகள் பிறக்கும் போது அவர்களின் நரம்பு மண்டலங்கள் அவர்களின் உணர்ச்சிகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு முதிர்ச்சி அடைந்து இருக்காது. எனவே குழந்தைகளைக் கட்டி அணைக்கும் போது ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் மனஅழுத்த ஹார்மோனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகள் தங்களின் சொந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள முடியும்.

சந்தோஷமான குழந்தைகள்
குழந்தைகளைக் கட்டி அணைப்பது அவர்களின் நம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அரவணைக்கும் போது நீங்கள் அவர்களை நேசிப்பதைக் குழந்தைகள் உணருகிறார்கள்.
MOST READ: குழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க

நம்பிக்கை
குழந்தைகளைக் கட்டி அணைப்பதினால் அவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து பயத்தினை போக்கச் செய்கிறது. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவினை மேம்படுத்துகிறது. எனவே இனி தினமும் உங்கள் குழந்தைகளுக்கு கட்டிப்பிடி வைத்தியத்தினை செய்து அவர்களை ஸ்மார்ட் கிட்ஸ் ஆகவும் ஆரோக்கியமான குழந்தைகளாகவும் மாற்றுங்கள்.