Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பிறந்த குழந்தைகளுக்கு கூட ஒழுக்க முறைகள் இருக்கா? அது என்னது?
ஒழுக்கம் என்பது இளம் வயதில் இருந்தே பழக்க வேண்டிய ஒன்றாகும். குழந்தைகளை கவனித்து கொள்ளுவது பசி அடக்குவது டையப்பர் மாற்றுவது மட்டும் பெற்றோரின் கடமையாகாது. அவர்களுக்கு சரியான ஒழுக்கத்தை சிறுவயதில் இருந
ஒழுக்கம் என்பது இளம் வயதில் இருந்தே பழக்க வேண்டிய ஒன்றாகும். குழந்தைகளை கவனித்து கொள்ளுவது பசி அடக்குவது டையப்பர் மாற்றுவது மட்டும் பெற்றோரின் கடமையாகாது. அவர்களுக்கு சரியான ஒழுக்கத்தை சிறுவயதில் இருந்தே கற்று கொடுப்பதும் பெற்றோரின் கடமையாகும். ஒன்று அல்லது இரண்டு வயது என்பது ஒழுக்கத்திற்கு சிறந்த வயது இல்லை என்று கருத வேண்டாம். கொடுக்க வேண்டிய வயதில் தண்டனை கொடுத்தால் மாறி விடுவார்கள் என்று எண்ண வேண்டாம்.


பிறந்த குழந்தைகள்
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெரிய சிக்கலாக இருப்பது உணவு, தூக்கம் மற்றும் பூப்பிங் தான். பொதுவாக கைக்குழந்தைகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. மேலும் குழந்தைகளின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வது பின்னர் அவர்களை சுதந்திரமாக இருக்க வழி செய்கிறது. குழந்தைகள் அவர்களின் சொந்த சிறிய உலகில் பாதுகாப்பு உணர்வை வளர்த்துக் கொள்ளுவது மிக அவசியம். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் குழந்தைகளை உங்கள் பார்வையில் வைத்திருப்பது போதுமானதாக தோன்றலாம். ஆனால் கருப்பையில் 24/7 பிடிபட்ட ஒரு குழந்தைக்கு, இது இன்னும் 25 சதவிகிதம் ஏமாற்றத்தை தருகிறது.

4 முதல் 7 மாதம்
4 முதல் 7 மாதங்களில் குழந்தைகளின் ஒழுக்கம் பிடுங்குதல் மற்றும் இழுத்தல் நோக்கி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையில் உள்ள வேறுபடுவதைத் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க தொடங்கலாம். பொதுவாக உங்கள் குழந்தைகள் இந்த வயதில் உங்கள் தோளில் தூங்க விரும்பலாம், ஆனால் அவை தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளை உங்கள் அருகில் தூங்க வைப்பது நல்லது.

இழுத்தல்
இந்த வயதில் தான் குழந்தைகள் எல்லாவற்றையும் பிடித்து இழுக்க ஆரம்பிக்கிறார்கள். இது அவர்களின் கைகளால் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து கற்றுக்கொள்வதற்கான வழி. குழந்தைகள் உங்கள் காதணியைப் பிடித்து இழுத்தால் அது குழந்தைகளுக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். உடனே குழந்தைகளிடம் உங்கள் சோகமான முகத்தை காட்டுங்கள். அப்போது அவர்களுக்கு புரிதல் தன்மை ஏற்படும்.

7 முதல் 12 மாதம்
7 முதல் 12 மாதங்களில் குழந்தைகளின் நகருதல் மற்றும் சிக்கல்களில் தலையிடுவதாக இருக்கும். நீங்கள் குழந்தையை கவனிக்காமல் விட்டால் வீட்டையே சுற்றி துடைத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் பொருட்கள் மற்றும் செல்போன்களை வைக்க வேண்டும். கதவுகளை எப்போதும் மூடியே வையுங்கள், குழந்தைகள் சிக்கல்களில் மாட்டும் போது அவர்களை திசை திருப்புங்கள், குழந்தைகளிடம் அன்பாக பேசுங்கள், அவர்களுக்கு கூறிய விளையாட்டு ஜமான்களில் விளையாட கற்று கொடுங்கள். குழந்தைகள் எதையாவது இழுக்க செல்லும் போது அவர்களுக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகளை காட்டி கவருங்கள். குழந்தைகள் நற்செயலை செய்யும் போது பாராட்டுங்கள்.

சிறிய மாற்றம்
பெற்றோர்கள் இந்த சிறிய மாற்றங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக்குமா என்று எண்ணுகிறார்கள். குழந்தைகள் உங்களை பின்பற்றுவதன் மூலம் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள், எனவே நீங்கள் சரியான வழியில் சென்று அவர்களையும் அந்த வழியில் செல்ல பழக்குங்கள். அடித்தால் என்பது வெறுப்பைச் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகும். இறுதியாக, அடிப்பது உண்மையிலேயே எந்த நற்குணத்தையும் குழந்தைகளுக்கு கற்பிக்காது. எனவே குழந்தைகளுக்கு நல் வழியில் ஒழுக்கத்தை கற்பியுங்கள்.



Click it and Unblock the Notifications
