Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்க குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்களா? இத பாலோவ் பண்ணுங்க.
குழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எரிச்சல் தான் ஏற்படும். அவர்களின் அழுகைக்கு பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கும் குழந்தை எதற்காக அழுகிறார்கள் என்பதைத் தாய் உணர முடியும். இருந்தும் உங்கள்
குழந்தைகள் எப்போதும் அழுது கொண்டே இருந்தால் எரிச்சல் தான் ஏற்படும். அவர்களின் அழுகைக்கு பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கும். குழந்தை எதற்காக அழுகிறார்கள் என்பதைத் தாய் உணர முடியும். இருந்தும் உங்கள் குழந்தைகள் எப்போதும் அழாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள் உள்ளன.

பிறந்த குழந்தைகளின் தேவைகள் முதல் ஆறு மாதங்களில் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்பதை அறிந்து தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டாலே அவர்களின் அழுகை பாதி நின்றுவிடும். மேலும் குழந்தையை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ளுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தொடுதல்
குழந்தைகள் பிறந்து 6 மாத காலங்களுக்குத் தாயின் தொடுதல் மிகவும் அவசியம். அவர்கள் அம்மாவிடம் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணருவார்கள். நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் உடல் உங்களின் வயிற்றில் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளைக் குளிக்க வைக்கும் போது அவர்களின் கை, கால் மற்றும் உடலினை நன்றாக மசாஜ் செய்து குளிக்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நிம்மதியான நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் நீங்கள் கொடுக்கும் இனிமையான முத்தம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தூங்குதல்
குழந்தைகள் சரியாகத் தூக்கம் இல்லாத காரணத்தினாலும் அழுவார்கள். எனவே குழந்தைகள் நிம்மதியாக மற்றும் வசதியாகத் தூங்குவதற்கு ஏற்றவாறு அவர்களைப் படுக்க வையுங்கள். மென்மையான துணியை மேலே போட்டு, போர்த்தியபடி படுக்க வைத்தால், கருப்பையில் இருக்கும் உணர்வை அடைவார்கள். எனவே குழந்தைகள் உறங்கும் போது ஒரு நல்ல மெத்தை போன்ற துணிகளில் சுற்றி அவர்களை உறங்க வையுங்கள். குழந்தைகள் பிறந்து 4 மாதங்கள் வரை இந்த முறையைப் பின்பற்றலாம். மேலும் குழந்தைகள் எந்த முறையில் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்று கவனித்து அதனை பின்பற்றுங்கள்.

கட்டை விரல்
குழந்தைகள் எதற்காக அழுகிறார்கள் என்று கண்டுபிடித்தது சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் உண்மை என்னவென்றால் சில குழந்தைகள் தங்களின் கட்டை விரலைச் சப்பும்போது அழுகையை நிறுத்தி விடுகிறார்களாம். எனவே குழந்தைகள் விரல்களைச் சப்பும்போது அது அவர்களுக்கு நிம்மதியைத் தருகிறதாம் எனவே அவற்றை வாயிலிருந்து எடுக்க வேண்டாம். பின்னர் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெளி இடங்கள்
குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதினாலும் எரிச்சல் அடைவார்கள். எனவே அவர்களைச் சற்று வெளியே தூக்கிச் சென்று இயற்கையை ரசிக்க வையுங்கள். பூங்கா போன்ற இடங்களுக்குத் தூக்கிச் செல்லுங்கள் அல்லது 6 மாத குழந்தையாக இருந்தால் அவர்களுக்குச் சூரியன், மரம், செடி, கொடிகள் போன்றவற்றைக் காட்டுங்கள். 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட வையுங்கள்.

பேசுதல்
குழந்தைகளிடம் பேசுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகள் வயிற்றில் இருக்கும் ஐந்தாவது மாதத்திலேயே நாம் என்ன பேசுகிறோம் என்ற புரிதலை உணர ஆரம்பித்து விடுவார்களாம். எனவே குழந்தைகளிடம் நீங்கள் பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளிடம் பேசுவதில் மிக முக்கியம் அமைதியாக மற்றும் உணர்ச்சியுடன் பேச வேண்டும். நீங்கள் குழந்தைகளிடம் பேசும்போது அவர்களின் கண்களை பார்த்து பேசுங்கள் குழந்தைகளை சிரிக்க வையுங்கள் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பாடுங்கள். இவற்றை எல்லாம் பின்பற்றி குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக உணர வையுங்கள்.



Click it and Unblock the Notifications
