For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா?

கான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண் என்பது குழந்தைகளுக்கும் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் ஏற்படும் கண் பிரச்சனைகளில் ஒன்று. இது கண்களில் உள்ள வெண்படலத்தின் அழற்சியாகும்.

|

கான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண் என்பது குழந்தைகளுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் ஏற்படும் கண் பிரச்சனைகளில் ஒன்று. இது கண்களில் உள்ள வெண்படலத்தின் அழற்சியாகும். கான்ஜுன்டிவா என்பது ஒரு மெல்லிய மற்றும் வெளிப்படையான சவ்வு ஆகும். இது கண்களின் வெள்ளை மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் வீக்கமடையும் போது, ​​இரத்த நாளங்கள் அதிகரித்து கண்களில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.

Conjunctivitis

இது எரிச்சல், தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். பாக்டீரியா அல்லது வைரஸ் இதற்கு முக்கிய காரணமாகும். இது ஒரு தொற்றுநோய் என்பதால் மற்ற குழந்தைகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய்ப்பால்

தாய்ப்பால்

தாயின் பால் புண்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தாய்ப்பாலில் கொலஸ்ட்ரம் என்னும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா வியாதிகளை சரி செய்யவும் தாய்ப்பால் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் கண்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை தாய்ப்பாலைத் தடவுங்கள். மேலும் குழந்தையின் ஒரு கண் பாதித்தாலும் இரண்டு கண்களிலும் தாய்ப்பாலை அப்ளை செய்யுங்கள். இது மற்றொரு கண்ணையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

MOST READ: குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா? இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

தேன்

தேன்

தேன் என்பது ஆன்டிபயாடிக், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்வதில் பயன்படுகிறது. ¼ கப் தேனை எடுத்து அதில் சம அளவு காய்ச்சி வடிகட்டிய சற்று சூடான நீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் இட்டுச் சிவப்பு நிறம் மாறும் வரை வையுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு ஆன்டி பயாடிக் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கண்ணில் ஏற்படும் சிவப்பு நிற மாற்றத்தைக் குணப்படுத்த உதவுகிறது. இது ஒவ்வாமை செயல்பாட்டையும் சரி செய்யும். ஒரு டீஸ்பூன் மஞ்சளைத் தண்ணீரில் கலக்கி கண்களைக் கழுவலாம் அல்லது இந்த கலவையைச் சூடு செய்து பஞ்சு கொண்டு நனைத்து அதைக் கண்களில் அப்ளை செய்யுங்கள்.

காபி

காபி

காபி என்பது சிவப்பு நிற கண்களைச் சரி செய்ய உதவும். அரை கப் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு காபி பவுடர் போட்டுக் கொதிக்க வைத்து பின்பு ஆற வையுங்கள். இந்த நீரை வைத்து தினமும் 4 முறை கண்களைக் கழுவ வேண்டும்.

MOST READ: மது அருந்தும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா? கூடாதா?

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளதால் கண்களில் ஏற்பட்ட அழற்சினை சரி செய்ய உதவுகிறது. அத்துடன் கண்களில் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது சிறிதளவு நறுக்கிய உருளைக்கிழங்கு அல்லது அரைத்த உருளைக்கிழங்கினை கண்களில் அப்ளை செய்யலாம். உருளைக்கிழங்கைக் கழுவி ஒரு மெல்லிய துண்டாக வெட்டி கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் வையுங்கள். அல்லது அரைத்த உருளைக்கிழங்கை மூடிய கண்களின் மீது வையுங்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு புதிய உருளைக்கிழங்காக இருக்க வேண்டும்.

உப்பு நீர்

உப்பு நீர்

கண் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உப்பு கலந்த நீர் சிறந்த தீர்வாகும். இந்த முறை மிகவும் எளிமையான முறையாகும். உப்பு நீர் கண் தொற்றுக்களைச் சரி செய்து கண்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது. சிறிதளவு நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு போட்டு ஆற வையுங்கள். பின்னர் பஞ்சினை எடுத்து அந்த நீரில் நனைத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். ஒவ்வொரு முறை செய்யும் போதும் புதிய பஞ்சினை பயன்படுத்துங்கள்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி சாறுடன் கேரட் சாறு கலந்து கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். ஆனால் இந்த முறையை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும்.

தேநீர் பை

தேநீர் பை

தேநீர் பை ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் கண் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும் கண்களில் ஏற்படும் வலியினை சரி செய்ய உதவுகிறது. தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து பின்னர் ஆற வைத்து அந்த பைகளை கண்களின் மீது வைத்து எடுங்கள்.

கற்றாழை

கற்றாழை

கண்கள் சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக நீங்கள் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி அப்ளை செய்யுங்கள். கற்றாழை செடியிலிருந்து நேரடியாக ஜெல் எடுத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.

மருத்துவர்

மருத்துவர்

கண்களில் அதிக வலியோ அல்லது எரிச்சல் மற்றும் மிகுந்த சிவப்பு நிற மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. மருத்துவர் கண்களின் நிலையை அறிந்து விட்டு அதற்கு ஏற்ப மருந்துகளை வழங்குவார்.

MOST READ: குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா?

குறிப்புகள்

குறிப்புகள்

கண்களை இடைவெளி விட்டு அடிக்கடி கழுவுங்கள்

குழந்தைகளின் கண்களைத் தேய்க்க அனுமதிக்காதீர்கள்

குழந்தைகளின் கண்களில் துண்டுகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள்.

குழந்தைகளின் கண்களை நீங்கள் தொடுவதற்கு முன்பு உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள்

குழந்தைகளின் கைகளையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Conjunctivitis (Pink Eye) In Babies

Conjunctivitis, or pink eye as it is usually referred to, is not uncommon in babies and young children. It is the inflammation of the conjunctiva. The inflammation of the conjunctiva could be due to an irritant or caused by an infection or allergen. Pink eye infections caused due to bacteria or virus are contagious in nature and you might need to refrain your child from playing with other kids just to ensure the safety measure of not letting the infection spread to other children.
Story first published: Thursday, October 3, 2019, 12:31 [IST]
Desktop Bottom Promotion