Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
உங்கள் குழந்தைகளை எப்போதும் ஆக்டிவ்வா வசுக்கனுமா ? இதை மட்டும் செய்யுங்க
குழந்தைகளை சமாளிப்பது என்பது எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தராத ஒரு கலையாகும். பத்து நிமிடம் அவர்களை இயக்குவது என்பதே சிரமமான விசயமாக ஆகிவிட்டது. பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள், இசையைக் கேட்க வை
குழந்தைகள் நடக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நிச்சயம் பெற்றோரை சோர்வடைய வைக்காமல் உறங்கமாட்டார்கள். பசியைத் தாண்டி பலநேரங்களில் அழ ஆரம்பித்துவிடும் குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

நாள்முழுக்க உங்களை இயந்திரம் போல் இயங்க வைக்கிறானா ? அதனால் சோர்வடைகிறீர்களா ? நீங்களும் சோர்வடையாமல் உங்கள் குழந்தையையும் இயங்க வைக்க வேண்டுமா அப்போ இந்தக் கட்டுரை உங்களுக்காகத் தான்.

பொம்மைகள்
தொட்டிலில் இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு வேண்டுமானால் பொம்மைகளை வைத்து பூச்சாண்டிக் காட்டலாம். ஆனால் தரையில் தவழ ஆரம்பித்தப் பிறகு எல்லாம் 5 நிமிடம் கூட பொம்மையை சீண்ட மாட்டான் உங்கள் குழந்தை.

வீடியோஸ்
குழந்தைகளுக்கு பிடித்தமான அனிமேஷன் வீடியோக்கள் அவர்களை கட்டி இழுத்திருக்கலாம். ஆனால் சாப்பாடு ஊட்டும் போது அல்லது அழுகிற போது வேண்டுமானால் தற்காலிகமாக குழந்தையின் கவனத்தை திருப்பலாம்.

நிரந்தரத்தீர்வா?
பொம்மைகளும், வீடியோக்களும் நிச்சயம் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் நீண்ட நேரம் குழந்தைகள் அதில் இருக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கும் போர் அடிக்கும் அல்லவா. எனவே அவர்களுக்கென்ற புதிய பொழுதுபோக்குகள் வேண்டாமா ? ஆம் மிக எழுமையான குழந்தைகளை ஆரவாரப்படுத்தும் 10 செயல்பாட்டு உக்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

#1 தெருச் சுற்றுலா
ஏழுகழுதை வயசாகி இருக்கிற நமக்கே சுற்றுலா என்பது அவசியமாகிற போது குழந்தைகளுக்கு தேவை இருக்காதா? நிச்சயம் இருக்கும். அதற்காக குழந்தைகளை தூக்கிக் கொண்டு பயணமெல்லாம் போயிடாதீங்க. பக்கத்தில் இருக்கிற பூங்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள்

பசுமையை ரசிக்க வையுங்கள்
பசுமையான காட்சிகளையும், சுத்தமான காற்றையும் அங்கு அவன் உணர்வான்.
உங்கள் குழந்தைகளால் விளையாடுகிறானோ இல்லையோ, விளையாடுபவர்களைப் பார்த்து கையை காலை அசைத்து ஆட்டமாவது போடுவான்.
அவனுக்கு மட்டுமல்ல வீட்டுக்குள் அடைஞ்சிருக்கும் உங்களுக்கும் இது பெரிய மாறுதலை அளிக்கும்.

#2 இசை
இந்த மண்ணில் பிறந்திருக்கும் சின்னஞ்சிறிய பூச்சிகளும் இசைக்கு அடிமையாகத் தான் இருப்பார்கள் அந்த வகையில் குழந்தைகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. குழந்தைகள் பாடல்களைக் கேட்கும் போது தன்னை அறியாமல் அதை மனதில் பதித்துக் கொள்கிறது.
குழந்தை எழுந்தவுடன் அவனுக்கு எல்லா வகையான இசையையும் இசைத்துக் காட்டுங்கள். சில இசைகள் அவனுக்குப் பிடித்திருக்கும். சில இசைகள் அவனுக்கு பிடிக்காமல் இருக்கும்.

நீங்களும் கூட பாடுங்க
இசையை அவன் கேட்கும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும். அந்த இசையோடு நீங்களும் சேர்ந்து பாடும் போது குழந்தையும் அதை பாட முயற்சிக்கும். அதுமட்டுமில்லாமல் உங்கள் குழந்தை முதன்முதலில் ஆட வைப்பதும் இந்த தருணத்தில் தான்.

#3 குழந்தைகளின் தருணங்களை பதியுங்கள்
வீட்டு வேலைகள் எல்லாத்தையும் முடித்த பிறகு குழந்தையை குளிப்பாட்டி உக்கார்ந்தா... அவன்/ அவளுக்கு பொட்டு வைக்கிறது என்ன.. விதவிதமா தலை சீவி விடுறதென்ன... ஆம்பள பசங்களுக்கு கவுன் மாட்டி அழகு பாக்குறது என்ன? உங்களுக்கு புதுமையை அளிப்பது போல் குழந்தைகளுக்கும் இது புத்துணர்ச்சியை அளிக்கும்.

புகைப்படமெடுங்கள்
இந்த தருணங்கள் மீண்டும் கிடைக்காது. இப்படிப்பட்ட சந்தோசங்கள் உங்கள் முதுமைக் காலத்தில் பெரிதும் துணைக் கொடுக்கும். அதனால் ஒரு போதும் காட்சிப்படுத்துவதை நிறுத்தாதீர்கள்.

#4 அனிமேஷன் கதாபாத்திரமாக மாறுங்கள்
தலைசீவி அலங்காரம் எல்லாம் போட்டு முடித்துவிட்டு விளையாடும் எண்ணத்துக்கு உங்கள் குழந்தைகள் தயாராகி இருப்பார்கள். அப்போது அவர்களை உங்களுக்கு நெருக்கமாக அழையுங்கள். அவர்களுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுங்கள். உறவுகளை சொல்லிக் கொடுங்கள். அப்போது தான் அவன் உணர்வுகளைக் கற்றுக் கொள்வான்.

#5 கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி ஆட்டம் என்பது எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டாகும். முகத்தை மறைத்துக் கொண்டு அம்மாவைக் காணோம் கண்டுபிடி பாப்பானு சொல்லிட்டு பேன்னு சொல்லி திரும்பி வரும்போது குழந்தை சிரிக்கும் பாருங்க... அந்த ஒண்ணே எவ்ளோ பெரிய மன அழுத்தத்தையும் சுக்கு நூறாக்கி விடும். அப்படியே அவனை அள்ளி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து பாருங்கள் அதோட சுகம் தனித்துவமானது.

#6 சேர்ந்து விளையாடுங்கள்
முன்பெல்லாம் பெற்றோர்களே விளையாட்டு சாதனங்களாக மாறி யானையாகவோ சிங்கமாகவோ மாறி விளையாட்டை காண்பிப்பார்கள். ஆனால் இன்றைக்கு அந்த இடத்தை பொம்மைகள் ஆக்கிரமித்துவிட்டன. பொம்மைகளோடு விளையாடும் போது தான் குழந்தைகள் எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது எப்படி எனக் கற்றுக் கொள்கிறார்கள்.

#7 குழந்தையையும் உணரவிடுங்கள்
பிறந்ததிலிருந்து தாய் அல்லது உறவினர்களின் சருமத்தைத் தவிர பிறிதொன்றையும் குழந்தைகள் பெரிதாக உணர்ந்திருக்காது. அதனால் குளிக்கும் போது தண்ணீரை உணர விடுங்கள். இப்படி எல்லாவற்றையும் உணர அனுமதிப்பது தான் அவனுடைய வளர்ச்சிக்கு முக்கியமானது.

#8 புதுசா எதையாச்சும் பண்ணுங்க
உங்களுக்கு மட்டும் புதுசு புதுசா வேணுங்கறப்ப ரொம்ப நாளா வீட்டுக்குள்ளேயெ செய்றதையே திரும்பி திரும்பி செய்யுறத்துக்கு அவனுக்கு போர் அடிக்காதா. அதுனால கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்பறம் வீட்டுக்கு வெளியில் கூட்டிட்டு வாருங்கள். நல்லது கெட்டதை சொல்லிக் கொடுங்கள்.

#9 கதை சொல்லுங்க
பாட்டிகள் இருந்தால் குழந்தைகள் நிச்சயம் அழாது. அந்த வயசான காலத்திலையும் பொட்டிப்பாம்பா குழந்தைகளை தன்னோட கதையால அடக்கி வச்சிருப்பாங்க. ஆக்சனோட கதைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்க அதன் மூலமாக பண்புகளையும் சேர்த்து சொல்லிக்கொடுங்க.

#10 குழந்தைகளை ஆட வையுங்கள்
பாட்டைக் கேட்டா மட்டும் போதுமா. கண்டிப்பா உங்கள் குழந்தையால ஆட முடியாது. உங்களோட கையால் குழந்தையோட கையை காலை பிடித்துக் கொண்டு ஆட வைத்தால் அவர்களும் சந்தோசமடைவார்கள். மழலை சிரிப்பில் மயங்கி நீங்களும் சந்தோசமடைவீர்கள்.



Click it and Unblock the Notifications