Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா?
உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் அன்பினால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணருவர்கள். உங்கள் குழந்தையை சரியாக பாதுகாக்கா விட்டால் அவர்கள் தூக்கமின்மை, எடைகுறைவு மற்றும் மனசோர்வுக்கு ஆளாவார்கள்.
உங்கள் குழந்தையின் அழகான முகம், கொழுகொழு கன்னங்கள், ஈர்க்கும் கண்கள், குறும்பு சிரிப்புகளை ரசித்து உள்ளீர்களா? அதற்கு ஆஸ்கர் விருதே இடு ஆகாது. நீங்கள் உங்கள் குழந்தையுடன் சரியான உறவுமுறையை வளர்த்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நீங்கள் நட்சத்திரமாக தான் இருப்பிர்கள். அதாவது ஒரு ஆராய்ச்சியில் எந்த குழந்தைகள் 12 மாதங்கள் வரை அம்மாவுடன் மிகுந்த ஈர்ப்பில் உள்ளார்களோ அவர்கள் வயதிலும் தனக்கு ஏற்படும் பிரச்சனைக்கு அமம்விடமே தீர்வுக்கு வருவார்களாம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது எல்லாம் அன்பு, நம்பிக்கை, மற்றும் ஆதரவு அதை நீங்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் அன்பினால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணருவர்கள். உங்கள் குழந்தையை சரியாக பாதுகாக்கா விட்டால் அவர்கள் தூக்கமின்மை, எடைகுறைவு மற்றும் மனசோர்வுக்கு ஆளாவார்கள். குழந்தைகளின் அன்பை பெறுவது சாதாரண விஷயமில்லை, ஆனால் அம்மாவுக்கு அது மிக பெரிய விஷயம் இல்லை. உங்கள் குழந்தைகளிடம் எப்படி அன்பை பெறுவது எப்படி அன்பை நிலைநிறுத்துவது பற்றி பார்ப்போம்.

தாய்ப்பால்
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வெறும் ஊட்டச்சத்துக்காக மட்டுமல்ல. அவர்கள் உங்கள் இதய துடிப்பை கேட்கிறார்கள். உங்களது வாசனையை உணருகிறார்கள். இது உங்களிடமே உங்கள் குழந்தைகள் இருப்பதற்காக உதவுகிறது. மேலும் நீங்கள் டப்பா பால் கொடுத்தால் அவர்கள் அதனை குடிக்கும் போது சிறியவர்களின் கண்களை பார்த்துக் கொண்டிருங்கள். இது அவர்களுக்கு நீங்கள் யார் என்பதை உணர்த்தும்.

மசாஜ்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் உடலுக்கு பல நன்மைகளை தரும். குழந்தைகள் ஒரு சூப்பர் ஹீரோவாகவும் உணருகிறார்கள். மேலும் அவர்களை நன்றாக போர்த்தி படுக்க வையுங்கள். இது நல்ல துக்கத்திற்கு வழிவகுக்கும்.

குழந்தையின் அழுகை
குழந்தைகள் அழுகும் போது அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதிலும் முதல் மூன்று மாதங்கள் நீங்கள் அவர்களின் மேல் முற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அழும் அடுத்த நிமிடமே அவர்களுடன் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தைகள் அழும் போது நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். எல்லா குழந்தைகளும் அழுக தான் செய்வர்கள். இதற்காக பதற்றம் அடைதல் உங்கள் குழந்தைகள் இன்னும் அதிகமாக அழுக ஆரமித்துவிடுவார்கள். நீங்கள் அவர்களின் அருகில் இருப்பது உங்கள் மேலான நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

தொலைபேசி தவிர்த்தல்
உங்கள் தொலைபேசியை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளுடன் இருப்பதக்கான நேரத்தை அதிகரித்து செலவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்கு புரியும் குறுச்செய்திக்கு பதில் அனுப்ப நேரம் எடுக்கும் என்று, எனவே அந்த நேரத்தை சிறியவருக்காக செலவிடுங்கள்.

இதயத்துடிப்பு
உங்கள் குழந்தைகளின் இதயத்துடிப்பை கேளுங்கள். அவர்கள் உங்கள் கருப்பையில் இருந்தபோது அந்த இதயத்துடிப்பை கேட்க ஆர்வமாக இருந்து இருப்பீர்கள். இப்போது அந்த துடிப்பை கேட்டு மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் அதனை ரசித்தீர்களானால் உங்களுக்கு இசையாக கேட்கும்.

தூக்கம் கொள்ளுதல்
உங்கள் குழந்தைகளை தூங்கவைத்த பிறகே நீங்கள் தூங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் பாதுகாப்பாக உணருகிறார்கள். அதிலும் தாய்மார்கள் பக்கத்தில் தூங்குவதால் குழந்தைகள் நிம்மதியான உறக்கத்தை பெறுகிறார்கள்.

குழந்தையை அணைத்தல்
குழந்தைகளை நீங்கள் ஒன்பது மாத காலங்கள் வயிற்றில் சுமந்துள்ளீர்கள். இப்போது நீங்களும் குழந்தையும் அந்த உடல் அளவிலான இணைப்பை இழந்துவிட்டீர்கள். ஆனால் குழந்தையை தூக்கும் போது கங்காருகளை போன்று தூக்குவதால் அவர்கள் சுவாசிப்பதற்கும் உங்கள் இதயத்துடிப்பைக் கேட்பதற்கும் உதவும்.

நினைவுகள் சேகரிப்பு
உங்கள் குழந்தைகளின் குறும்புகள், சேட்டைகள் மற்றும் முதல் பிறந்த நாட்கள் அவர்களின் பேஷன் ஷோ ஆகியவற்றை பத்திரமாக சேகரித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் டைரி ஆக போட்டு சரியான நேரத்தில் அவர்களுக்கே அன்பளிப்பாக கொடுங்கள். மேலும் அவர்களுக்கு ஒரு செல்ல பேரை வைத்துக் கொள்ளுங்கள், அந்த பேர் நீங்கள் இருவர் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் பெயராக இருக்க வேண்டும்.

அட்டவணை தயாரிப்பு
உங்கள் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் பற்றி நீங்கள் அறிந்து கொண்டதும் அதற்கான அட்டவணை ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். அவர்களின் தேவையை சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதால் அவர்களுக்கு எல்லா மந்திரங்களும் அம்மாவால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

குறும்பு விளையாட்டுகள்
உங்கள் குழந்தைகளுடன் பாடுங்கள். உங்களுக்கு பிடித்த சில பாடல்களை தேர்வு செய்து அடிக்கடி அவர்களுடன் பாடி விளையாடுங்கள். உங்கள் குரலை கேட்கும் போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணருவர்கள். மேலும் புருவங்களை உயர்த்துவது, நாக்கினை வெளியேற்றுவது போன்ற குறும்பு தனமான விஷயங்களை அவர்களிடம் செய்யுங்கள் இது அவர்களின் சிரிப்பிற்கு உதவும். அவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமே முத்தம் இடுவது. எனவே முத்தம் இட்டு அன்பை வெளிப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications











