Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க
வெறும் ஒன்பது நிமிடத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அபூாவ பெண் பற்றி தான் இந்த பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
பிரசவம் என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரு குழந்தைக்கு மேல் பிரசவிக்கும்போது, பிரசவ செயல்பாடுகளில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம். 4.7 மில்லியன் வழக்குகளில் ஒரு அரிய வழக்காக உங்கள் பிரசவம் அமைந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பிரசவம் பற்றி தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ஆம், ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்திருக்கிறார், அதுவும் 9 நிமிடங்களில் ! ஆச்சர்யமாக இருக்கிறதா?

வாருங்கள் இந்த அரிய பிரசவம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்..

வலிமையான பெண்
இந்த பெண் உண்மையிலேயே வலிமையானவர். அந்தத் தாயின் பெயர் தெல்மா சியாகா. தற்போது 6 குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் இவர், பிரசவத்திற்கு பின்னான ஓய்வில் இருந்து வருகிறார். வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை இவர் பிரசவித்திருக்கிறார்.

குழந்தைகள் பற்றி
தெல்மா, இரண்டு ஜோடி ஆண் இரட்டையர்களையும், ஒரு ஜோடி பெண் இரட்டையரையும் பெற்றெடுத்திருக்கிறார். இந்த பிரசவம் அதிகாலை 4.50-4.59 க்குள் நிகழ்ந்திருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்
எல்லாக் குழந்தைகளும் 1 பவுண்ட் 12 அவுன்ஸ் முதல் 2 பவுண்ட் 14 அவுன்ஸ் க்குள் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 6 குழந்தைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆரம்ப கால மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்பதால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அரிய பிரசவம்
தெல்மாவின் பிரசவம் அரியதாக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பிரசவித்தவர் என்ற சாதனை இவருக்கு சொந்தமாகவில்லை. ஏனெனில் , 2009ம் ஆண்டு, நாதியா சுலைமான் என்பவர் ஒரு நேரத்தில் 8 குழந்தைகளைப் பிரசவித்து இந்த சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அவர் தனது 33ம் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.



Click it and Unblock the Notifications