Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?
குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சினைகளை ஒரு எளிய பொருளை கொண்டே குணப்படுத்தலாம். அது வேறு எதுவுமல்ல தேங்காய் எண்ணெய்தான்.
குழந்தைகளை குறிப்பிட்ட வயது வரை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருப்பதால் அவர்களுக்கு எளிதில் வீக்கம், சிவந்து போகுதல், எக்சிமா போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சினைகளை ஒரு எளிய பொருளை கொண்டே குணப்படுத்தலாம். அது வேறு எதுவுமல்ல தேங்காய் எண்ணெய்தான். தேங்காய் எண்ணெய் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும்?
குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலத்தின் காரணமாக அதில் அதிகளவு ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதுடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் ஈரப்பதமான சருமத்தை வழங்குகிறது.

முடிக்கான பயன்கள்
தேங்காய் எண்ணெய் அனைத்து முடி வகைகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக உபயோகிப்பவர்களுக்கு அடர்த்தியான, கருமையான, வலிமையான கூந்தல் இருக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்வது அவர்களுக்கு முடி வளர்ச்சியை தூண்டுவது, ஈரப்பதமான பளபளப்பான முடி, வறட்சியற்ற தலை போன்ற பலன்களை வழங்குகிறது. அதிகப்படியான பலன்களுக்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடு பண்ணி தேய்க்கவும்.

மென்மையான சருமம்
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை ஈரப்பதமூட்டிகளில் ஒன்றாகும். உங்கள் குழந்தையின் வறண்ட சருமத்தின் மீது இது பல அற்புதங்களை நிகழ்த்தும். உங்கள் குழந்தையின் லோஷன்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்த தொடங்குங்கள். அதன்பின் மாற்றத்தை கவனியுங்கள்.

தடிப்புகள்
டயபர்களால் ஏற்படும் தடிப்புகள் மற்றும் அலர்ஜிகளுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். தடிப்பு இருக்கும் இடத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை தொடர்ச்சியாக தடவுங்கள்.

பருக்கள்
குழந்தைகளுக்கு அடிக்கடி பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் கிருமிநாசினி குணங்களும், ஆன்டிபாக்டீரியா குணங்களும் குழந்தைகளின் பருக்களை குணப்படுத்துவதோடு அதனால் ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கும்.

தீக்காயங்களை குணப்படுத்தும்
தீக்காயங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். தொடர்ச்சியான பயன்பாடு தீக்காயத்தை குணப்படுத்தும் மற்றும் வடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

தோல் அழற்சி
சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்த தேங்காய் எண்ணெய்தான் சிறந்த வழியாகும். எக்சிமா நோயால் ஏற்படும் காயங்கள் வலி மற்றும் அரிப்பை உருவாக்கும். இதனை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள இயலாது. இது பெரும்பாலும் முழங்கை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் ஏற்படும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் குணப்படுத்தும் குணங்கள் எந்த பக்க விளைவுகளும் இன்றி இதனை குணப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்றவை குழந்தைகளுக்கு பொதுவாக அதிகம் ஏற்படும் நோய்களாகும். முன்கை மற்றும் மணிக்கட்டில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழதைகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கும்.



Click it and Unblock the Notifications