For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க

குழந்தைகளின் சருமம் ரெம்பவே சென்ஸ்டிவ் ஆக இருக்கும். அவர்களின் சருமம் பட்டு போல் மென்மையாக இருப்பதால் சீக்கிரம் அலற்சியை ஏற்படுத்தி விடும். நாம் போடும் டயப்பர், சுற்றுப்புற மாசுக்கள், அழுக்கு, சோப்பு

|

குழந்தைகளின் சருமம் ரெம்பவே சென்ஸ்டிவ் ஆக இருக்கும். அவர்களின் சருமம் பட்டு போல் மென்மையாக இருப்பதால் சீக்கிரம் அலற்சியை ஏற்படுத்தி விடும். நாம் போடும் டயப்பர், சுற்றுப்புற மாசுக்கள், அழுக்கு, சோப்பு போன்றவைகள் அவர்களின் சருமத்தில் எளிதில் ரேசஸை உண்டாக்கக் கூடும். குழந்தைகள் என்பதால் கண்ட கண்ட கெமிக்கல் க்ரீம்களை போடவும் நமக்கு பயமாக இருக்கும். எனவே இந்த சரும அலற்சியை சில இயற்கை பொருட்களைக் கொண்டே விரட்டலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை வழிகள்

இயற்கை வழிகள்

குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் ரேசஸை (சரும வடுக்கள்) கீழ்க்காணும் பொருட்களைக் கொண்டு சரி செய்யலாம். இந்த சரும அலற்சியை சில இயற்கை பொருட்களைக் கொண்டே விரட்டலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

MOST READ: நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

ஓட்ஸ்மீல்

ஓட்ஸ்மீல்

ஓட்ஸ் சருமத்தில் ஏற்படும் அரிப்பை போக்க கூடியது. இதில் ஏவென்ட்ரமைட்ஸ் என்ற அலற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது.

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். இதை குழந்தையின் சருமத்தில் தடவி காய விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும்

முன் பரிசோதனை

உங்கள் குழந்தைக்கு ஓட்ஸ் ஒத்துக் கொள்கிறதா என்பதை முகத்திற்கு அப்ளே செய்வதற்கு முன் சிறுதளவு அக்குள் பகுதியில் தடவி சோதித்து கொள்ளுங்கள்.

கெகோமில் டீ

கெகோமில் டீ

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும அலற்சியை குணப்படுத்துகிறது. உங்களுடைய சரும வடுக்களின் அளவை பொருத்து இந்த டீ யின் அளவை எடுத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

டீ பேக்கை எடுத்து சுடுநீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு ஆறியதும் அந்த டீ பேக்கை குழந்தையின் சருமத்தில் ஒத்தி எடுக்கலாம். ஏற்பட்ட அலற்சி சரியாகி விடும்.

யோகார்ட்

யோகார்ட்

எக்ஸிமா போன்ற சரும அழற்சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒழுங்கற்ற செயலால் ஏற்படுகிறது. இதற்கு யோகார்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியா நோயெதிர்ப்பு சக்தியை தூண்டி சரும வடுக்களை மறையச் செய்கிறது.

MOST READ: நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோல் சரும அழற்சியை போக்க பெரிதும் உதவுகிறது. வாழைப்பழ தோலை ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து சரும வடுக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். குழந்தைகளின் சருமத்தை ஈரப்பதமாக்கி சரும வடுக்களையும் நீக்கி விடும்.

வேப்பிலை

வேப்பிலை

இதில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ள அற்புத மருந்து. எக்ஸிமா போன்ற சரும அலற்சியை போக்க இது சிறந்த ஒன்று

பயன்படுத்தும் முறை

வேப்பிலைகளை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் இதை அப்ளே செய்து வாருங்கள். குழந்தைக்கு நல்ல ரிலீவ் கொடுக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதன் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் தன்மையால் சரும க்ரீம்களாக கூட பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து சரும வடுக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். குழந்தைகளுக்குள்ள சரும வடுக்கள் மாயமாய் மறைந்து விடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

இது ஒரு இயற்கையான சரும சுத்திகரிப்பு எண்ணெய் என்று சொல்லலாம். காரணம் இது சருமத்தின் மீதுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதிலுள்ள ஓலியோகேந்தல் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ சரும பாதிப்பை குணப்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் சருமத்தில் இதை அப்ளே செய்து பலன் பெறலாம்.

MOST READ: வீட்ல மூட்டைப்பூச்சி தொல்லையா?... இத செஞ்சா போதும் மொத்தமா காலி பண்ணிடலாம்...

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் ரேசஸை சரி செய்கிறது. சென்ஸ்டிவ் ஆன சருமத்திற்கு இது சிறந்தது.

பயன்படுத்தும் முறை

வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சரும வடுக்கள் பகுதியில் தடவி வந்தால் மறைந்து விடும்.

மேற்கண்ட இயற்கை முறைகள் உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அலற்சியின் தீவிரம் அதிகமாக இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Treating Rash on Baby's Face

Babies are prone to getting rashes, and obviously, you will worry if your baby has rashes. But, you don’t have to worry as rashes can be treated. As a parent, we know, you wouldn’t want to use chemical-based creams or lotions on your baby’s face to address the rashes, which is why we bring some home remedies for you to take care of your baby’s skin.
Desktop Bottom Promotion