Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
எத்தனை வயதுக்கு குறைவான பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது? ஏன்?
கருக்கலைப்பு செய்வதற்குத் தேவையான வயது எத்தனை என்பது பற்றி இந்த கட்டுரையில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய விவரமான தொகுப்பு தான் இது.
கருவில் இருக்கும் குழந்தையை அழிக்க தாய்மார்கள் சுயநினைவுடன் மருத்துவர் உதவியுடன் மேற்கொள்ளும் முறை கருக்கலைப்பு என்பதாகும். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கருவில் இருக்கும் குழந்தை இயற்கையாக அழிவது கருச்சிதைவு எனப்படும்.

கருக்கலைப்பு குறித்து குறிப்பிட்ட நாடுகள் மற்றும் மாநிலங்கள், தனிப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகின்றன. அந்த வழிகாட்டுதலில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு தகுதி வயது. கருக்கலைப்பிற்கான வழக்குகளில் தாயின் வயதுடன் கருவில் உள்ள குழந்தையின் வயதும் கணக்கிடப்படுகிறது.

வயது குறித்த முக்கியத்துவம்
ஐக்கிய மாகாணத்தில், எந்தவொரு பெண்ணும், திருமணம் ஆனாலும் இல்லாவிட்டாலும், சட்டப்படி தெளிவுபடுத்தப்பட்ட விதிமுறைகளின் படி அவளுடைய உடல்நிலைக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். அவளின் உடல் நிலை குறித்த விளக்கங்கள் இரண்டு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.
இருப்பினும், பதினாறு அல்லது பதினேழு வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு கருக்கலைப்பு செய்வதில் பெற்றோரின் தலையீடு அவசியம் இருத்தல் வேண்டும். அதே நேரத்தில், கருக்கலைப்பு செய்யும் நேரத்தில், கருவில் உள்ள குழந்தை 20 வாரங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்ய வயதின் முக்கியத்துவம் குறித்து விளக்க சில முக்கிய காரணிகள் உண்டு. அவற்றை இப்போது காணலாம்.

காரணிகள்
பதின் வயதுகளில் கர்ப்பம் தரிப்பது மிகவும் அதிகமாக இருக்கும் இந்நாட்களில், வயது குறித்த முக்கியத்துவம் பெரும் பங்காற்றுகிறது. இந்த இளம் வயதில், பெண் பிள்ளைகளின் இனப்பெருக்க அமைப்பு கர்ப்பத்தை தாங்கும் அளவிற்கு தயாராக இருப்பதில்லை. மேலும், திட்டமிடாத கருக்கலைப்பு இந்த நிலையில் மேலும் பாதிப்பை உண்டாக்கும். ஒரு வேளை இந்த இளம் வயதில் கருக்கலைப்பு அத்தியாவசியமாக இருந்தால், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் முன்னிலையில் கருக்கலைப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இப்படி செய்வதால் அபாயம் குறைக்கப்படும்.

தாய் - சேய் வயது
கருவுற்றிருக்கும் தாயின் வயது கருக்கலைப்பு செய்ய எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையின் வயதும் முக்கியம் ஆகும். பொதுவாக, 20 வாரத்திற்கு அதிகமாக உள்ள கருவைக் கலைக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. கர்ப்ப காலம் அதிகரிக்கும் அதே அளவிற்கு கருக்கலைப்பிற்கான அபாயமும் அதிகரிக்கிறது. இருப்பினும், தாயின் உடல்நிலையில் உள்ள சிக்கலின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவர்கள் 24 வாரம் வளர்ச்சிப் பெற்ற கரு வரையில் கருக்கலைப்பு செய்வதை பரிந்துரைக்கின்றனர்.

உளவியல் பிரச்சினைகள்
கருக்கலைப்பிற்கு பின்னான காலகட்டத்தில், பெண்களுக்கு மோசமான உளவியல் ரீதியான விளைவுகள் உண்டாவதால், கருக்கலைப்பில் வயது குறித்த முக்கியத்துவம் அதிகமாக உணரப்படுகிறது. மிக இளம் வயது பெண்கள் கருகலைப்பை கையாள முடியாமல் இருந்தால், பெற்றோர் அல்லது பெரியவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து இந்த கடினமான காலகட்டத்தைக் கடந்து வர அவர்களுக்கு உதவலாம்.

தவிர்த்தல் நலம்
கருக்கலைப்புத் தொடர்பான அபாயங்களைத் தவிர்த்திட முடிந்த அளவிற்கு இதனைத் தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பான உறவுக்கு ஏற்ற வகை கருத்தடை சாதனங்கள் பல உள்ளன. காலம் தவறிய கருக்கலைப்பு முயற்சியைத் தேர்வு செய்வதற்கு மாற்றாக இந்த வழிமுறைகளை பின்பற்றி கரு உண்டாகாமல் இருப்பது நன்மை தரும்.



Click it and Unblock the Notifications