For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது? விட்டா என்ன நடக்கும்?

குழந்தைக்கு அதிகமாக பாலோ உணவோ கொடுத்துவிட்டால் என்ன நடக்கும், என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

|

ஒரு குழந்தையின் ஆரோக்கியம் என்பது தாயின் பராமரிப்பை பொருத்தே உள்ளது. ஒரு தாயாக இதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கிறது.

signs you are overfeeding your baby

சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிடுவதில்லை சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பாடு ஊட்டுவதால் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதிலும் முதல் தடவை குழந்தைக்கு உணவளிக்கும் போது எந்தளவு கொடுக்க வேண்டும் என்பதும் நமக்கு தெரியாது. ஒரு வயது குழந்தை என்றால் அதற்கு போதும் என்றும் சொல்லத் தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை உணவு

குழந்தை உணவு

ஒரு குழந்தையை தூங்க வைப்பதும் சாப்பாடு கொடுப்பதும் எந்தளவு கொடுக்க வேண்டும் என்பது தாய்மார்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. குழந்தைக்கு டப்பாக்களில் பால் கொடுக்கும் போது நமக்கு தெரியாமல் அளவுக்கு அதிகமாக கொடுக்க நேரிடலாம். இந்த அளவுக்கு அதிகமாக உணவை திணிப்பதன் மூலம் குழந்தைகள் நிறைய உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே உங்கள் குழந்தைக்கு உணவின் அளவு போதுமானது என்பதை கண்டறிய உதவவே இக்கட்டுரை. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

MOST READ: அட! முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்... ஐஸ் கட்டி மட்டும் போதும்... மாற்றத்தை நீங்களே பாருங்க

உடல் எடை அதிகரித்தல்

உடல் எடை அதிகரித்தல்

நிறைய அம்மாக்களின் ஆசை என்னவென்றால் குழந்தை கொலு கொலுவென இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த எண்ணம் உங்கள் குழந்தையின் வயதை விட அதிக எடையை ஏற்படுத்தி விடும். குழந்தையின் ஒவ்வொரு மாத வளர்ச்சிக்கு ஏற்ப எடை அதிகரிப்பதே நல்லது. நீங்கள் அதிகமாக குழந்தைக்கு உணவளிக்கும் போது அதிக கலோரிகளை அவர்கள் பெறுவார்கள். இந்த கலோரிகள் எரிக்கப்படாமல் அவர்களின் உடல் எடையை கூட்டிவிட ஆரம்பித்து விடும். எனவே உங்கள் குழந்தையின் எடையை அடிக்கடி மருத்துவ உதவியுடன் பரிசோதித்து கொள்ளுங்கள். இது அவர்களின் எடையை வளர்ச்சிக்கு ஏற்ப பராமரிக்க உதவும்.

வயிற்று போக்கு - மலம் துர்நாற்றம் வீசுதல்

வயிற்று போக்கு - மலம் துர்நாற்றம் வீசுதல்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மலம் கழிப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பால் குடிக்கும் குழந்தைகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் மலம் கழிப்பார்கள்.

அதே நேரத்தில் உங்கள் குழந்தை நீர்மமாக கெட்ட துர்நாற்றத்துடன் மலம் கழித்தால் அதிகமாக உணவு கொடுக்கப்படுவதை புரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: வீட்ல எப்ப பார்த்தாலும் சண்டையா?... இந்த ராசிக்காரங்கதான் கொஞ்சம் அனுசரிச்சு போங்களேன்...

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை

அதிகமாக உணவு கொடுக்கும் போது குழந்தையின் வயிற்றில் வாயுத் தொல்லை ஏற்பட ஆரம்பித்து விடும். காரணம் அதிகமான உணவை குழந்தையின் சீரண மண்டலம் சீரணிக்க முடியாமல் கஷ்டப்படும். இந்த வாயுத் தொல்லையால் வயிற்று வலி போன்றவற்றால் குழந்தை அழ ஆரம்பித்து விடும்.

எதுக்களித்தல்

எதுக்களித்தல்

குழந்தைக்கு எதுக்களித்தலும் நீங்கள் அதிகமாக உணவு கொடுப்பதன் அறிகுறியாகும். உங்கள் குழந்தை ரெம்ப நேரம் பால் குடித்த பிறகு துப்ப ஆரம்பித்து விட்டால் குழந்தையின் வயிறு நிரம்பி விட்டது என்று அர்த்தம். அதற்கு பிறகு நீங்கள் வலுக்கட்டாயமாக பால் கொடுத்தால் குழந்தை எதுக்களிக்க ஆரம்பித்து விடும். எனவே இந்த மாதிரி குழந்தை செய்யும் போது அதிகமாக பால் புகட்டுவதை நிறுத்துங்கள்.

வாயை எடுத்து விடுதல்

வாயை எடுத்து விடுதல்

குழந்தையின் வயிறு மிகவும் சிறியது. நாம் சாப்பிடும் அளவிற்கு குழந்தை சாப்பிடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது வயிறு நிரம்பி விட்டால் அவர்களாகவே பாட்டிலில் இருந்து வாயை எடுத்து விடுவார்கள். அதையும் மீறி நீங்கள் பால் கொடுக்கும் போது அது அதிகமாக உணவை திணிப்பது போல் ஆகி விடும்.

MOST READ: இத பாத்திருக்கீங்களா? காயா இருக்கும்போது விஷமாவும் பழுத்தா மருந்தாகவும் மாறும் அதிசய பழம்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

நீங்கள் உங்கள் குழந்தைக்கு சரியான அளவு உணவு கொடுக்கிறீர்கள் என்றால் ஓரு நாளைக்கு 4-5 டயப்பர் மாற்ற வேண்டியிருக்கும். அதே நேரத்தில் உங்கள் குழந்தை வளர்வதை பொருத்து சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை மாறலாம். சரியாக சிறுநீர் கழிப்பது உங்கள் குழந்தைக்கு பால் மற்றும் தண்ணீர் சரியான அளவு கிடைத்திருப்பதை காட்டுகிறது.

குழந்தை பிறந்து ஆறு வாரங்களே ஆகியிருந்தால் எட்டு டயப்பர் வரை நனையலாம். இதில் எதாவது மாற்றம் இருந்தால் நீங்கள் மருத்துவரை நாடுவது நல்லது. அது உங்கள் குழந்தைக்கு அதிகமாக உணவு கொடுப்பதை காட்டுகிறது.

ஏப்பம் விடுதல்

ஏப்பம் விடுதல்

குழந்தைகள் சாப்பிட்ட பிறகு ஏப்பம் விடுவார்கள். இதுவே அளவுக்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அதை கவனிக்க வேண்டும். ஏனெனில் இந்த அறிகுறி அளவுக்கு அதிகமாக உணவு கொடுப்பதால் ஏற்படலாம். இந்த அதிகமான ஏப்பம் குழந்தை பால் அருந்தும் போது அதிகமான காற்றை உள்ளே இழுப்பதால் ஏற்படுகிறது. அதிகமாக சாப்பிடும் போது இந்த மாதிரியான பிரச்சினை ஏற்படலாம். பால் புட்டியை சரியாக வைத்து குடிக்காத போதும் இது ஏற்படலாம்.

தூங்குவதில் பிரச்சினை

தூங்குவதில் பிரச்சினை

அதிகமாக பால் அருந்தி விட்டால் குழந்தை தூங்கும் போது சிரமத்தை சந்திக்கும். தூங்கும் போது மலம் கழித்தல், தூக்கத்தில் பாதிலயே எழுந்திருத்தல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும். எனவே உங்கள் குழந்தை சரியாக தூங்கவில்லை என்றால் அதிகமாக உணவு கொடுப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அழுதல்

அழுதல்

இயற்கையாகவே குழந்தை உணவு உண்ட பின் வயிறு வீங்கிய ஒரு உணர்வு இருக்கும். இதில் நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவு கொடுக்கும் போது குழந்தைக்கு அசெளகரியத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். இதனால் வயிற்று வலி, எதுக்களித்தல், வாந்தி போன்ற பிரச்சினைகளை சந்தித்து அழ ஆரம்பித்து விடும்.

MOST READ: இந்த ஆறு பொருள் ரூம்ல இருக்கறதுதான் புற்றுநோய் வர காரணமாம்... மொதல்ல அத மாத்துங்க...

அசெளகரியம்

அசெளகரியம்

குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று பிரச்சினை வருவது சாதாரண விஷயம் தான். ஆனால் நீங்கள் அதிகமாக உணவு கொடுக்கும் போது வயிற்று பிடிப்பு, வயிற்று போக்கு, மந்தம் போன்ற தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் குழந்தை விடாமல் அழ ஆரம்பித்து விடும்.

எனவே இந்த மாதிரியான பிரச்சினைகள் தென்பட்டால் நீங்கள் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அது உங்களுக்கு ஒரு நல்ல தீர்வளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

signs you are overfeeding your baby

here we are talking about the signs you are overfeeding your baby.
Story first published: Saturday, December 1, 2018, 12:42 [IST]
Desktop Bottom Promotion