For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பிறக்கும் பொழுது தொப்புள் கொடியை வெட்டாமல் விடலாமா?

தொப்புள் கொடி என்பது தாயையும் குழந்தையையும் சேர்த்து வைத்திருக்கும் முக்கிய விஷயம்; குழந்தை பிறக்கும் பொழுது தொப்புள் கொடியை வெட்டாமல் விட்டால் என்ன ஆகும் என்று இங்கு படித்து அறியலாம்.

|

குழந்தைகள் வயிற்றில் வளரும் பொழுது, அவர்களை கருவறை வீட்டில் தனித்து விடாமல், தாயோடு சேர்த்து பிணைத்து வைப்பது தொப்புள் கொடி தான். இந்த தொப்புள் கொடியின் மூலமாக தான் கருவில் வளரும் சிசு உணவையும், உயிர் வாழ தேவையான ஆக்சிஜனையும் பெறுகிறது. இப்படிப்பட்ட தொப்புள் கொடியை குழந்தை தாயின் வயிறில் இருந்து வெளியேறும் பொழுது, வெட்டி விடுவர்.

not cutting umbilical cord

அப்படி தொப்புள் கொடியை அறுத்து விட்டால், தான் குழந்தையை வெளியே எடுத்து, அறுக்கப்பட்ட தாயின் வயிற்றை அல்லது கிழிபட்ட பெண்ணின் பிறப்புறுப்பை மூடி விட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொப்புள் கொடி அறுத்தல்!

தொப்புள் கொடி அறுத்தல்!

பிரசவத்தின் இறுதி கட்டம் தான், தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்த குழந்தையை தாயிடம் இருந்து தனித்து பிரிப்பது. இப்படி பிரிக்க கட்டாயம் தாயையும் சேயையும் சேர்த்து வைத்து இருக்கும் தொப்புள் கொடியை அறுத்து தான் ஆக வேண்டும். தாய் மற்றும் குழந்தையை இணைத்து வைத்து இருக்கும் தொப்புள் கொடியை அறுத்து விட மருத்துவர்கள் அதிக கவனம் கொண்டு இருக்க வேண்டும்.

எப்படி அறுத்து விடுவர்?

எப்படி அறுத்து விடுவர்?

தொப்புள் கொடியை அறுக்கும் பொழுது, இரண்டு கிளிப்களை எடுத்துக் கொண்டு, அவற்றை தொப்புள் கொடியில் சற்று இடைவெளி விட்டு மாட்டி, பின்பு அவ்வாறு விட்ட இடைவெளியில் அறுக்க வேண்டும். குழந்தையின் தொப்புளில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு ஒரு கிளிப்பையும், மாட்டிய கிளிப்பில் இருந்து இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு மற்ற கிளிப்பையும் மாட்டி விட வேண்டும்.

பின் இந்த கிளிப்புகளுக்கு இடையே வெட்டி தொப்புள் கொடியை அறுக்க வேண்டும்.

நஞ்சுக்கொடி!

நஞ்சுக்கொடி!

குழந்தைகள் கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் உருவாகி வளர தொடங்கும் பொழுது உருவாகும் ஒரு விஷயம் தான் நஞ்சுக்கொடி. இது வயிற்றினுள் குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் உதவுகிறது; இதுவும் குழந்தையின் வயிற்றில் தான் இணைந்து இருக்கும். தொப்புள் கொடியை அறுக்கும் பொழுது, இதுவும் குழந்தையின் உடலில் இருந்து நீக்கப்படும்.

அப்படியே விடலாமா?

அப்படியே விடலாமா?

தொப்புள் கொடியை அப்படியே விட முடியாது; அது தாயின் குடல் பகுதியை சேர்ந்த ஒன்று; ஆகையால், அதனை நன்கு அதிக நீளத்திற்கு குழந்தையின் உடலில் இருக்கும் வண்ணம் வேண்டுமானால், அதிக தூரம் விட்டு வெட்டி விடலாம். ஆனால், நஞ்சுக்கொடி குழந்தை உருவாகும் பொழுது உருவாவது தான். அதனை வெட்டாமல் கூட விட்டு விடலாம்.

மேலும் படிக்க: எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிக தீய குணங்கள் இருக்கும் தெரியுமா?

தாமரை குழந்தை - Lotus Birth

தாமரை குழந்தை - Lotus Birth

குழந்தைகள் பிறந்த பின்னும் நஞ்சுக்கொடியுடன் இருக்க, தாய்மார்கள் ஒத்துக் கொண்டால், குழந்தை மற்றும் தாயின் உடல் நிலை சரியானதாக இருந்தால், மருத்துவரும் ஒத்துக் கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படும். ஏனெனில் நஞ்சுக்கொடியுடன் குழந்தை பிறந்த பின் அதை பராமரித்து வளர்ப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்; அதனால், தான் அனுமதி பெறப்படுகிறது.

சிரமம் மட்டுமா? ஆபத்து இல்லையா?

சிரமம் மட்டுமா? ஆபத்து இல்லையா?

தொப்புள் கொடியை அதிக தூரம் குழந்தையின் வயிற்றில் விட்டு வைப்பது கொஞ்சம் சிரமம் தான்; ஆனால், ஆபத்து அல்ல. ஆபத்திற்கு மாறாக அது குழந்தைகளுக்கு அதிக நன்மையை தான் தரும். நஞ்சுக்கொடியும் அதே போல் தான், அதை குழந்தையுடன் அப்படியே விட்டு விட்டால் அது சற்று சிரமம் கொடுக்குமே தவிர, ஆபத்தை தராது. நன்மைகளை தான் நஞ்சுக்கொடியும் வாரி வழங்கும்.

என்னென்ன நன்மைகள்!?

என்னென்ன நன்மைகள்!?

தொப்புள் கொடி குழந்தைக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரத்தம் அதிகம் சுரப்பதற்கு தேவையான சக்தியை குழந்தைக்கு அளிக்கிறது. நஞ்சுக்கொடியும் இது போன்ற நிறைய நன்மைகளை குழந்தைக்கு அளிக்கிறது. இந்த இரண்டு கொடிகளையும் கிருமிகள் தாக்கி விடா வண்ணம் பாதுகாப்பது அவசியம். மேலும் இந்த கொடிகள் உதிரும் வரை குழந்தையை தூக்கி, வேலைகள் செய்வதும் பயணிப்பதும் சற்று கடினமாக இருக்கும்.

எப்பொழுது உதிரும்?

எப்பொழுது உதிரும்?

குழந்தைகள் பிறந்து நன்கு அல்லது ஐந்து வாரங்கள் ஆன பின், தொப்புள் கொடி உதிர்ந்து விழுந்து விடும். நாமாக வெட்டினால், ஏற்படும் நோய்த் தாக்குதலுடன், நோய்தொற்றுடன் ஒப்பிடும் பொழுது, அதுவாக விழும் பொழுது ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. மேலும் நஞ்சுக்கொடியும் சில வாரங்களில் வறண்டு, குழந்தையின் உடலை விட்டு பிரிந்து விழுந்து விடும்.

மேலும் படிக்க: ஸ்மார்ட் போன் பயன்பாடு தம்பதியர்களிடையே மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?

நீங்களும் செய்யலாம்!

நீங்களும் செய்யலாம்!

ஆகையால், குழந்தையின் தொப்புள் மற்றும் நஞ்சுக்கொடிகளை வெட்டாமல் விட்டால், நாம் சரியான கவனத்துடன் நடந்து கொண்டால் அதிகம் நன்மைகளே கிடைக்கும்; மேற்படி தீவிரமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இந்த முறையை உங்களுக்கு மனம் இருந்தால், உடலில் பலம் இருந்தால் நீங்களும் மேற்கொண்டு பார்க்கலாம்; இது தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் முடிவு செய்ய வேண்டிய விஷயம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Not Cutting Umbilical Cord: All You Need To Know

Not Cutting Umbilical Cord: All You Need To Know
Story first published: Tuesday, September 18, 2018, 15:52 [IST]
Desktop Bottom Promotion