குழந்தைகளை ஏன் பெண்ணியவாதிகளாக வளர்க்க வேண்டும்? - ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம்!

பெற்றோர் தான் குழந்தை என்னும் சிலையை செதுக்கும் உளிகள்; அரசியல்வாதியாக இருப்பதை காட்டிலும் அப்பாவாக இருப்பதே முதன்மை - ஜஸ்டின் ட்ரூடோ எழுதிய கட்டுரை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பெற்றோர் தான் குழந்தை என்னும் சிலையை செதுக்கும் உளிகள்; இன்று அதாவது அக்டோபர் 11 ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் "குழந்தைகளை ஏன் பெண்ணியவாதிகளாக வளர்க்க வேண்டும்?" என்ற தலைப்பில் - ஜஸ்டின் ட்ரூடோ ஒரு கட்டுரை எழுதி சென்றாண்டு வெளியிட்டுள்ளார்.

Justin Trudeau Wrote Article About International Girl Child Day

குழந்தை வளர்ப்பில் தன் அனுபவத்தை மற்றும் கருத்தை முன்னிறுத்தி ஜஸ்டின் எழுதிய அந்த பழைய கட்டுரையை இன்றைய நாட்களின் நிஜங்களோடு இணைத்து கருத்துக்களை இந்த பதிப்பு வடிவில் சமர்பிக்கிறேன். அரசியல்வாதியாக இருப்பதை காட்டிலும் அப்பாவாக இருப்பதே முதன்மை - ஜஸ்டின் ட்ரூடோ எழுதிய கட்டுரை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சென்றாண்டு எழுதிய பதிப்பு!

சென்றாண்டு எழுதிய பதிப்பு!

இன்று பெண் குழந்தைகளுக்கான உரிமையை மற்றும் அவர்களின் முக்கியத்துவத்தை, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இன்றைய காலத்தில் பல அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அநீதிகளை பெண்களுக்கு ஆண்கள் மற்றும் சில சமயங்களில் பெண்களே இழைக்கின்றனர்.

பெண் குழந்தைகளை, பிள்ளைகளை பெண்ணியவாதியாக ஏன் வளர்க்க வேண்டும் என்று ஜஸ்டின் சென்றாண்டு கூறியதை நாம் இன்று கண்டிப்பாக நினைவு கூற வேண்டியது அவசியம்.

ஜஸ்டின் ட்ரூடோ!

ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா நாட்டின் பிரதமர், அரசியலில் பெரும் தலை என்பதை காட்டிலும் தனக்கு அப்பாவாக இருப்பது தான் மிகவும் முக்கியமானது; அது தான் முதன்மையான விஷயம் என்று கூறுகிறார் ஜஸ்டின். ஜஸ்டின் தனது பிள்ளைகளை தனது மற்றும் அவரவர் சுயநலத்திற்காக வளர்ப்பதை காட்டிலும் சமூகத்திற்கானவர்களாக வளர்க்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புவதாக கருத்து தெரிவித்து உள்ளார்.

வீட்டில் நான் எப்படி?

வீட்டில் நான் எப்படி?

வீட்டில் ஜஸ்டின் தனது மனைவி சோஃபியாவுடன் சேர்ந்து குழந்தைகளை வளர்ப்பதில் தனது பங்களிப்பை முழுமையாக நல்குவதாக கூறியுள்ளார்; மேலும் தம்பதியர் இருவரும் இணைந்து மனிதனின் முக்கிய குணங்களாக இரக்கம், அளவு, சமூகநீதி, சமூகத்தின் அக்கறை போன்றவற்றை குழந்தைகளுக்கு போதிப்பதாக தகவல் தெரிவித்து உள்ளார், ஜஸ்டின்.

குழந்தைகளின் வளர்ச்சி கண்டு, தனது மகன் மற்றும் மகளின் வளர்ச்சி கண்டு ஆனந்தம் அடைவதாக கூறி உள்ளார்; எனது மகள் துடிப்பும் ஆற்றலும் கொண்டவர் என்று மகள் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார், ஜஸ்டின்.

இன்றைய சூழல்!

இன்றைய சூழல்!

இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக அநியாயம் இழைப்படுகின்றது; இந்த அநியாய செயல்களால், பல பெண்கள் தங்களது கனவுகளை எட்ட முடியாமல், நினைத்ததை செய்ய முடியாமல், பாகுபாடுகள் மற்றும் சமமற்ற தன்மை காட்டப்பட்டு பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட சூழல்கள் இன்று சிறுமியாய் இருக்கும் என் மகள், நாளை வளர்ந்து பெண்மணியாக திகழும் பொழுது அவளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று எந்தன் மனம் துடிக்கிறது என்று ஒரு தந்தையாக தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஜஸ்டின்.

நான் எதிர்பார்ப்பது..

நான் எதிர்பார்ப்பது..

என்னால் என் குழந்தையை எளிதில் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் காத்து விட முடியும்; அவள் விரும்புவதை அவள் அடைய என்னால் உதவ முடியும். ஆனால் தன்னை தானே காத்துக் கொள்ளும் தைரியமும், தனது பிரச்சனைகளை தானே சரிசெய்து அவற்றை வென்று காட்டும் திறனையும் என் மகள் தானாக யாருடைய உதவியும் இன்றி வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம்; இது தான் நான் என் பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது!

நாங்கள் கற்பிக்கிறோம்!

நாங்கள் கற்பிக்கிறோம்!

நானோ என் மனைவியோ எல்லா நேரங்களிலும் அல்லது பிள்ளைகளின் ஆயுட்காலம் வரை அவர்களுடன் கூடவே இருக்க முடியாது; ஆகையால் அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை வளர்க்கிறோம். பிள்ளைகளை தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனநிலையை அடைய வைப்பதே எண்களின் இலக்கு.

எங்கள் பிள்ளைகள்!

எங்கள் பிள்ளைகள்!

எங்கள் பெண் குழந்தையும் தன்னால் எந்த பிரச்சனையையும் சமாளித்து வாழ்வில் வெற்றிநடை போடா முடியும் என்று நம்பிக்கை கொள்ளும் வகையில் அவளை வளர்ப்போம்; இதுவே பெண்ணியம் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார், ஜஸ்டின்.

மகளை பெண்ணிவாதியாக வளர்க்க வேண்டும் நாங்கள் முடிவு எடுத்ததை போல, எங்கள் இரு மகன்களையும் பெண்களுக்கு தோள் கொடுக்கும் நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படியே வளர்த்து வருகிறோம்.

ஆணின் துணை!

ஆணின் துணை!

ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நட்புணர்வோடு பழகி, ஒருவர் முன்னேற மற்றவர் உதவ வேண்டும். ஆண்களும் பெண்களை தனக்கு கீழானவர்கள் என்று எண்ணாமல், அவர்களை சக மனுஷியாக மதித்து பாகுபாடு இன்றி வேறுபாடு காட்டாமல் அவர்களுடன் பழக்க வேண்டும். இந்த இரண்டு இன நபர்களும் ஒற்றுமையோடு பாடுபட்டால் தான் சமுதாயம் வளரும் என்று ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஜஸ்டின் எடுத்துரைத்து உள்ளார்.

பெண்ணியம் இதுதான்!

பெண்ணியம் இதுதான்!

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டும் அல்ல; ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்ந்து ஒருத்தருக்கு மற்றவர் உதவி முன்னேற பாடுபடுவது தான் உண்மையான பெண்ணியம். எங்கள் பிள்ளைகளை இந்த உண்மையான பெண்ணியத்தின் புரிதல் அவர்களுக்கு ஏற்படும் வகையில் தான் நாங்கள் அவர்களை வளர்க்கிறோம்.

மாபெரும் சக்திகள்..!

மாபெரும் சக்திகள்..!

இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வளர்த்து விட்டால், இந்த சமுதாயத்தில் பெண்கள் யாராலும் பாதிக்கப்பட மாட்டார்கள்; சமுதாயம் ஆண் மற்றும் பெண் எனும் இரு மாபெரும் சக்திகளின் கூட்டு முயற்சியால் வேகமாக முன்னேறும். இந்த தாழ்மையான கருத்தை அனைத்து பெற்றோர்களுக்கும் பண்போடு, மரியாதையோடு அறிவுறுத்தி உள்ளார், ஜஸ்டின்.

இதை வாசகர்களும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி தரமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்கு முயற்சியை மேற்கொள்ளுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion