Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
குழந்தைகளின் சமூக பண்புநலன்கள் மேம்பட பெற்றோர் செய்ய வேண்டியவை!
மனிதர்களுக்கு சமூகப்பண்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது; சமூகத்தில் குழந்தைகள் நல்ல முறையில் முன்னேற பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
மனிதர்களுக்கு சமூகப்பண்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது; குழந்தைகள் பிறந்து வளரும் கால கட்டத்தில் அவர்களுக்கு நற்பண்புகளை கற்பிப்பதோடு, நாளை வளர்ந்த பின் வாழ போகும் சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்பித்தல் அவசியம். குழந்தைகளுக்கு சமூக பண்புகள் என்பதனை தன்னோடு பழகும் நபர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து நவ நாகரீகம் வரையில் படிப்படியாக கற்பிக்க வேண்டும்.

சமூகத்தில் குழந்தைகள் நல்ல முறையில் முன்னேற பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

சமூக பண்புகள் என்றால்.?
குழந்தைகள் மற்றவர்களிடம் அதாவது பழகி அறியாத மற்ற நபர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், புதிதாய் ஒருவரை சந்திக்கும் பொழுது அல்லது பழகிய நபருடன் உரையாடும் பொழுது எப்படி பேச வேண்டும், எது சரியான நடைமுறை? எது தவறு? வேற்று நபர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நல்லவர் யார்? கெட்டவர் யார்? போன்ற விஷயங்களை குழந்தை தரம் பிரித்து பார்க்க உதவும் விஷயங்களே, சமூக பண்புகள் மற்றும் சமூக குணநலன்கள் என்று கூறப்படுகின்றன.

சிறு விஷயத்தில் தொடங்கி..!
குழந்தைகள் தங்களோடு பழகும் சக தோழர்களுக்கு அல்லது தனக்கு தெரிந்தவர்களை சந்திக்கும் பொழுது அவர்களை கிரீட் செய்து அதாவது "ஹாய், ஹலோ, வணக்கம்" என்று கூறி பேச தொடங்கி, முடிந்து போகையில் நன்றி கூறுவது மற்றும் தான் ஏதேனும் தவறு இழைத்தால் அதற்கு மன்னிப்பு கேட்பது என ஒவ்வொரு சின் விஷயமும் குழந்தையின் எதிர்கால வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
இந்த அடிப்படை பண்புகள் அறிந்து வளரும் குழந்தைகள் தான் நாளை அனைவராலும் போற்றப்படுவர்; மதிக்கப்படுவர்.

ஏன் முக்கியம்!?
ஏன் இந்த சமூக பண்புகள் மிகவும் முக்கியம் என்றால், இதில் முழுக்க முழுக்க குழந்தையின் வளர்ச்சி மற்றும் நன்மை மட்டும் தான் நிறைந்து உள்ளது. குழந்தைகள் பால்ய பருவத்திலேயே மற்றவரிடம் உரையாடும் முறையை அறிவது அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு தான் மிகவும் உதவும். மேலும் எந்தெந்த சொல்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகள் கற்பர்.

முக்கிய விஷயங்கள்!
குழந்தைகளுக்கு இந்த சமூக பண்புகளை போதிப்பதன் மூலம், குழந்தைகளால் புதிதாகா பார்க்கும் நபர்களுடன் எப்படி பேச வேண்டும், நன்கு தெரிந்தவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற வேறுபாட்டை அறிய முடியும்; ஒருவர் பேசும் பொழுது நன்கு உள்வாங்கி, எப்படி தக்க சமயத்தில் பதில் அளிக்க வேண்டும் என்பது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்வது, நட்பை எப்படி பாதுகாத்து வளர்ப்பது போன்ற விஷயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்வர்.

அறிவு நிலை குறைந்த குழந்தை!
குழந்தைகள் இந்த சமூக பண்புகளை தங்களுக்குள் வளர்ப்பது அவர்களின் அறிவு மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிக்க கட்டாயம் உதவும். குழந்தைகள் தங்களின் சுற்றுப்புறத்தையும், சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து நடந்து கொள்ள பழகி விட்டால், பின்னர் எளிதில் அவர்களால் எதையும் கற்று தெளிவு பெற்று விட முடியும்.
இதை சரியாக கற்காத குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களில் பின்தங்கி இருப்பர்; அவர்களின் அறிவு நிலையம் குறைந்தே காணப்படும்.

எப்படி அறிவது?
குழந்தைகள் இந்த விஷயங்களை கற்று கொள்கிறார்களா? இல்லையா? அவர்களுக்கு இந்த விஷயனாகில் மனதில் பதிந்து உள்ளதா? தெரிகிறதா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை அவர்களின் நடத்தையே தரும். குழந்தைகள் எந்த ஒரு செயல் செய்யவும் தயங்கி, சோம்பேறி தனத்துடன் இருந்தால் அவர்களிடம் கொஞ்சம் பிரச்சனை உளது என்றே அர்த்தம்.

முக்கிய அறிகுறிகள்!
குழந்தைகள் பேசும் பொழுது தெளிவில்லாமல் இருப்பது, மறந்து போவது, நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை மட்டும் செய்வது - அதாவது எடுப்பார் கைப்பிள்ளை போல், நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்து கொள்வதில் கடினம் போன்ற விஷயங்களில் குழந்தைகளின் சமூக பண்பு நலன்கள் குறித்த கற்றல் எளிதாக வெளிப்பட்டு விடும்.

பெற்றோர் செய்ய வேண்டியது!
குழந்தைகளிடம் இது போன்ற மாற்றங்களை காணும் பெற்றோர், பயந்து குழந்தைகளை அடித்து, கண்டித்து கற்று கொடுக்காமல், அவர்களின் நிலையை எப்படி மேம்படுத்துவது என்று யோசியுங்கள். குழந்தைக்கு ஒரு விஷயத்தை வாயால் சொன்னால் புரியவில்லை எனில், அதை படங்கள் மற்றும் காணொளி அல்லது நடைமுறை விஷயங்கள் மூலமாக எடுத்துக்கூற முயலுங்கள்.

முயன்றால் முடியும்!
முதலில் குழந்தைகளின் விருப்பு மற்றும் வெறுப்புகளை அறிந்து கொண்டு அதன் படி நடக்க முயலுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்த பாணியில் செய்ய முயலுங்கள்; கற்றுக்கொடுக்க முயலுங்கள். குழந்தைகளுக்கு எந்த வகையில் சொன்னால் புரிகிறது என்பதை முதலில் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் குழந்தைகளின் அறிவு திறனை மற்றும் சமூக பண்பு நலனை உயர்த்த பாடுபடுங்கள்! இந்த விஷயங்களை அன்பான முறையில் கையாண்டு, சிறந்த பெற்றோராக திகழ முயலுங்கள்!



Click it and Unblock the Notifications