Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
குழந்தையை தூக்குவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
குழந்தையை தூக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; குழந்தையை தூக்குவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று இங்கு படிக்கலாம்.
குழந்தைகள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள்; மிகவும் மிருதுவானவர்கள். புதிதாக தங்களுக்கென ஒரு குழந்தை பிறந்த பின் தம்பதியர்கள் எந்த அளவுக்கு ஆனந்தம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு பயமும் கொள்வர். ஏனெனில், பிறந்த குழந்தையை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; பிறந்த பச்சிளம் குழந்தைகளின் மீது ஏற்படுத்தும் தொடுதல், தூக்குதல் என அனைத்தும் மிகவும் கவனமாக அமைய வேண்டும்.

ஏனெனில், புதிதாய் பிறந்த குழந்தைகள் பூமியின் வாழும் தன்மையை அடைய, நோய் கிருமிகள் தாக்குவதை தடுத்து கொள்ள அவர்கள் இன்னும் பழக்கப்படவில்லை!

தூக்குவதில் இருக்கும் பயம்!
புதிதாய் பெற்றோரான தம்பதியர் முதல் முறையாக தங்களது குழந்தையை தூக்கி வைத்து கொள்ள அதிகம் பயம் மற்றும் பதட்டம் அடைவது உண்டு. அது ஏன் என்று பார்த்தால், குழந்தையின் தலை நேராய் நிற்காதது, நம் கை அழுத்தம் கொடுத்து விட்டால், அது குழந்தைக்கு வலி ஏற்படுத்தி விடுமோ, நாம் தூக்குவதால் ஏதாவது எசகு பிசகாக மாறி விடுமோ என்ற பயம் பெற்றோர் ஆகிய தம்பதியர்களின் மனதில் நிலவும்.

அதிக கவனம் தேவை!
புதிதாய் பிறந்த குழந்தையை தொடுவதில், தூக்குவதில் என ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குழந்தையின் பெற்றோரில் முக்கிய நபரான அன்னை, குழந்தையை தூக்கி அணைத்துக் கொள்வதில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையை தூக்கி அணைக்கும் முன் சில முக்கிய விஷயங்களை பெற்றோரும் சரி, குழந்தையை தூக்க நினைக்கும் மற்றோரும் சரி கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த முக்கிய விஷயங்களை செய்த பின், குழந்தையை தூக்குவது குழந்தைகளுக்கு நல்லது.
இப்பொழுது குழந்தைகளை தூக்குவதற்கு முன், பெற்றோரும் மற்றோரும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

கை கழுவுதல்!
குழந்தைகளை தூக்குவதற்கு முன், பெற்றோரும் சரி, தூக்க நினைக்கும் மற்றோரும் சரி கண்டிப்பாக கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஏனெனில் கைகளில் இருக்கும் நோய்க் கிருமிகள் குழந்தையை தாக்கி விடும் அபாயம் அதிகம் இருப்பதால், குழந்தைகளை தூக்கும் முன் கட்டாயம் கை கழுவுங்கள்! குழந்தைகள் வளர்ச்சி அடையும் பருவம் கொண்ட மிக நுண்ணிய உள்ளுறுப்புகளை பெற்று இருப்பர்; அவர்களுக்கு நம்மால் எந்த ஒரு நோய்தொற்றும் அசௌகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் நிலை!
குழந்தையை தூக்குவதற்கு முன், உங்களின் நிலை மிகவும் திடமாக உள்ளதா, எந்த ஒரு தடுமாற்றமும், கை மற்றும் கால், பிற உடல் உறுப்புகளில் நடுக்கம் போன்றவை இல்லை தானே என்று ஒரு முறைக்கு இரு முறை நிச்சயம் செய்து கொண்டு, பின்பு தான் குழந்தையை தூக்க வேண்டும். குழந்தையை தூக்கும் பொழுது நிலை தடுமாறி பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாமல் இருக்க, செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது!
இதை விளையாட்டாக எண்ணமால், நிலை தடுமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, நிலையை உறுதி படுத்திக் கொண்டு குழந்தையை தூக்க முயலுங்கள்!

சரியான நிலை!
குழந்தையை தூக்கிய பின் சரியான அந்நிலையில் அமர்ந்தோ, நின்று மிகச்சரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சரியாக பிடித்துக் கொள்ளாமல் ஏனோ தானோ என்று குழந்தையை பிடித்துக் கொள்ள நேர்ந்தால், அது ஏதேனும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்! ஆகவே, உங்களை நிலை மற்றும் குழந்தையை தூக்கி பிடித்திருக்கும் நிலை சரியானதா என்று நன்கு சோதித்து கொள்ளவும்; சரியாக இல்லை எனில், உடனே நிலையை சரி படுத்திக் கொள்ளவும்.

குழந்தையின் வளர்ச்சி!
குழந்தைகள் பிறந்த உடன் அவர்களின் தலை நிற்காது, அது நிற்க 3 மாத காலம் தேவைப்படும் மற்றும் பிற உறுப்புகளும் அழுத்தி தொட்டால் உடைந்து விடும் போன்று இருக்கும். அதனால், குழந்தையை தூக்கும் பொழுது, அதன் உடல் தசைகளில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் இருக்குமாறு மற்றும் குழந்தையின் கழுத்து பகுதியை அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஆபத்து ஏற்படுமா?
குழந்தையை தூக்கும் பொழுது சரியாக தூக்கவில்லை எனில், தூக்குவதற்கு முன்னான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை எனில், பெரிய பாதிப்புகள் ஏற்படலாம். அது தற்சமயம் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், குழந்தைகள் வளரும் பொழுது அவர்களின் உடலில் ஏற்படும் பாதிப்புகள், வளர்ச்சியில் கோணல் தன்மை அல்லது சரியற்ற வளர்ச்சி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, முதலில் இருந்தே எந்த பின் விளைவுகளும் ஏற்பட்டு விடா வண்ணம் குழந்தையை வளர்த்து வருதல் வேண்டும்.!



Click it and Unblock the Notifications











