Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை
குழந்தைக்கு தடுப்பூசி போட்டபின் காய்ச்சல் ஏற்படுவது ஏன்? என்ன காரணம்?
நாம் வளர்ந்த பின் தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் ஏற்படுவதில்லை; ஆனால், குழந்தைகளுக்கு அதிலும் ஓரிரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு உடனேயே காய்ச்சல் ஏற்பட்டு விடு
குழந்தைகள் பிறந்த உடன் மற்றும் பிறந்த பின் சில தடுப்பூசிகள் போடப்படும்; இந்த தடுப்பூசிகள் போடும் செயல் குழந்தைக்கு ஓரிரு வயது ஆகும் வரை அவ்வப்போது நடந்தேறும். மேலும் ஏதேனும் வைரஸ் தாக்குதலால் சில உயிர்கொல்லி நோய்கள் பரவும் பொழுது, அந்த சமயங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் தடுப்பூசி போடப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் வளர்ந்த பின் தடுப்பூசி போட்டுக் கொண்டால் காய்ச்சல் ஏற்படுவதில்லை; ஆனால், குழந்தைகளுக்கு அதிலும் ஓரிரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு உடனேயே காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது. அது ஏன் என்று என்றேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா? அதற்கான காரணம் என்ன? ஏற்படும் காய்ச்சலை போக்குவது எப்படி என்று யோசித்ததுண்டா?
இந்த கேள்விகளுக்கான விடையை இந்த பதிப்பு கொண்டுள்ளது; வாருங்கள்! படித்து பயனடையலாம்.

காய்ச்சல் ஏற்படுவது ஆபத்தானதா?
குழந்தைகளுக்கு பிறந்த பின் சில தடுப்பூசிகளை போட்ட பின் அல்லது எப்பொழுது தடுப்பூசி போட்டாலும் அவர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும்; அந்த சமயங்களில் காய்ச்சலையும் தடுப்பூசி போட்டதால் உண்டான வலியையும் தாங்க முடியாமல் குழந்தைகள் வீறிட்டு அழுவதுண்டு. இது ஆபத்தானதா என்றால், ஆம் மற்றும் இல்லை என்ற இரண்டுமே இந்த கேள்விக்கான விடையாக அமையும்.

எதிர்வினை வேண்டும்.!
குழந்தையின் உடல் தடுப்பூசி போட்ட பின் சாதாரணமாக காய்ச்சல் அடித்து ஓரிரு நாட்களில் சரியாகி விட்டால் அதற்கு பெற்றோர்கள் பயம் கொள்ள தேவையில்லை. குழந்தைக்கு அவ்வாறு தடுப்பூசிக்கு பின் காய்ச்சல் ஏற்படுவது அவர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளதை குறிக்கிறது. போட்ட தடுப்பூசிக்கு எதிர்வினை குழந்தையின் உடலில் கட்டாயமாக நடந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள்!

ஆபத்து எப்பொழுது?
ஆனால், இதில் ஆபத்தான சூழல் எப்பொழுது உருவாகிறது என்றால், குழந்தைக்கு காய்ச்சலுடன் - குழந்தையின் உடல் மிகவும் பலவீனம் அடைந்து மயங்குதல், உணவினை விழுங்க முடியாத நிலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு, காது போன்ற உறுப்புகளில் வலி, மூன்று நாட்களுக்கு பிறகும் நீடித்த காய்ச்சல் என இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது குழந்தையின் உடல் ஆபத்தான நிலையில் உள்ளதை குறிக்கிறது.

ஏன் ஏற்படுகிறது?
குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின் அதன் உடலின் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் ஏற்படுவது ஏன் என்று பார்த்தால், குழந்தையின் உடலில் ஏற்கனவே குடி இருக்கும் நோய்க்கிருமிகளை உள்ளே சென்ற தடுப்பூசி மருந்து அழிக்க முயல்கிறது; அந்த சமயத்தில் உடலின் வெப்பநிலையை அதிகரித்தால் தான் தடுப்பூசி மருந்தால் நோய்க்கிருமிகளை அழிக்க முடியும். இந்த காரணத்திற்காக தான் தடுப்பூசி போட்ட பின் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
இந்த நிகழ்விற்கு இன்னொரு காரணமும் உண்டு; அது என்னவெனில் குழந்தையின் உடல் தனக்குள் புதிதாக நுழைந்த மருந்தை எதிர்த்து போராட முயல்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது; இது குழந்தையின் உடல் ஆரோக்கியமாக உள்ளதை குறிக்கிறது. இப்பொழுது காய்ச்சல் ஏற்பட்ட குழந்தையை எப்படி கையாள்வது என்பது குறித்து அடுத்த பத்திகளில் படித்து அறியலாம்.

குழந்தையுடன் இருக்கவும்!
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் சமயங்களில் தாயானவள் கண்டிப்பாக குழந்தையுடனேயே எப்பொழுதும் இருக்க வேண்டும்; குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத நேரங்களில் தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைத்தால் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வதோடு, காய்ச்சலின் தாக்கம் அன்னையின் அணைப்பால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை பெறுவர். தாய் குழந்தையுடன் நேரத்தை செலவிடும் பொழுது, அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

உடைகள்
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் தருணங்களில், அது வெயில் காலமாக இருந்தால் குழந்தைக்கு பருத்தி மற்றும் காட்டன் ஆடைகளை அணிவியுங்கள்; இது குளிர்காலமாக இருந்தால் அதற்கு தகுந்த ஆடைகளை அணிவித்து குழந்தை காய்ச்சலின் தாக்கத்தை அதிகம் உணராதவாறு பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

நீரும் காற்றும்
குழந்தையின் உடலில் ஏற்பட்ட காய்ச்சலால் குழந்தை நீர்ச்சத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது; ஆகையால் குழந்தைகளுக்கு நன்கு நீர்ச்சத்து அடங்கிய உணவுகளை அளிக்கவும்; மேலும் குழந்தைக்கு தெடர்ந்து நீராகாரங்களை அளித்து வர வேண்டும். குழந்தையை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகள்
குழந்தையின் காய்ச்சல் விரைந்து குணமாக, போட்ட தடுப்பூசியின் செயலுக்கு பங்கம் விளைவிக்காத மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பெற்று, குழந்தைகளுக்கு அளித்து வருதல் வேண்டும். குழந்தைகளின் காய்ச்சல் மருந்து கொடுத்த பின்னர் எப்படி இருக்கிறது, குறைந்துள்ளதா, இல்லையா என்று சோதித்து அதற்கேற்ப மருந்துகளை அளித்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications