கருவில் இருக்கும் குழந்தை சிறுநீர் வந்தால் என்ன செய்யும்?

கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தை சிறுநீர், மலம் கழிக்குமா. அப்படி என்றால் அது எங்கே போகும். குழந்தையின் உறுப்புகள் எவ்வாறு வளர்ச்சி அடையும் போன்ற சுவராஸ்யமூட்டும் தகவல்கள்.

By Suganthi Rajalingam

கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும். தன் வயிற்றில் வளரும் குழந்தையின் பாதுகாப்பும் நம்பிக்கையும் தாயின் அரவணைப்பு மட்டுமே. நீங்கள் கர்ப்பமானதை அறிந்த பிறகு உங்கள் குழந்தையின் அசைவுகளை ஒவ்வொரு ஸ்கேனிலும் பார்ப்பது உண்மையில் ஒரு சந்தோஷமான ஆச்சர்யமும் கூட.

do babies drink pee in the womb

கிட்டத்தட்ட 18-20 வாரங்கள் கடந்த பிறகு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது. உங்கள் குழந்தையின் வளர்ச்சியும் அசைவுகளும் நன்றாக இருந்தால் உங்கள் கர்ப்ப காலம் ஆரோக்கியமானதாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவில் குழந்தை

கருவில் குழந்தை

உங்கள் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்காணித்து வருவார்கள் மருத்துவர்கள். உங்கள் குழந்தை கர்ப்ப பைக்குள் பாதுகாப்பாக வளர அனைத்து சூழல்களும் இயற்கையாகவே உருவாக்கப்படும். உங்கள் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன், உணவு, குழந்தையின் கழிவு பொருள் இதெல்லாம் எப்படி கிடைக்கிறது எப்படி வெளியேற்றப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? கர்ப்ப பையில் வளரும் குழந்தையின் ஒவ்வொரு செயல்களுமே நம்மை அதிசயக்க வைக்கும்.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள் அடங்கியது. இந்த ஒன்பது மாதங்களையும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். முதல் காலம் என்பது முதல் மூன்று மாதங்களையும், இரண்டாவது காலம் என்பது அடுத்த மூன்று மாதங்களையும் (4,5&6),இறுதி காலம் என்பது 7,8&9 ஆவது மாதங்களையும் குறிக்கிறது. இந்த ஒவ்வொரு மாதங்களும் ஒரு பெண்ணின் உடல்நிலை மற்றும் மன நிலையானது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக் கொண்டே வரும். இந்த மூன்று படி நிலைகளும் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

குழந்தையின் உறுப்பு வளர்ச்சி

குழந்தையின் உறுப்பு வளர்ச்சி

கருவில் வளரும் குழந்தையின் இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக வளர்ச்சியை தான் முதலில் மருத்துவர்கள் கண் காணிப்பார்கள். அதன் வளர்ச்சியை பொருத்தே கருவின் நிலைப்பாட்டை கூறி விடுவார்கள்.

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்கள் கர்ப்பமான பெண்ணின் ஹார்மோனில் மாற்றம் ஏற்படும். இந்த ஹார்மோன் மாற்றத்திற்கு பிறகு தான் கரு உருவாக்குவதற்கான ஏதுவாக பெண்ணின் உடல் நிலை மாறக் கூடும்.

இந்த ஹார்மோன் மாற்றத்தால் கர்ப்பமான பெண்களுக்கு காலையில் எழுந்ததும் வாந்தி, குமட்டல், சோர்வு, தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கருவுற்ற பெண்ணின் இதயம் இருமடங்கு வேலையை செய்யும். அதிகமான இரத்தத்தை குழந்தைக்கு சேர்த்து பம்ப் செய்யும், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜனும் தாயின் நுரையீரல் வழியாக செலுத்தப்படும்.

இந்த மூன்று மாதங்கள் போலிக் அமிலம் மற்றும் விட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில் இந்த மாதங்களின் தான் குழந்தையின் உறுப்புகள் ஒவ்வொன்றாக வளரத் துவங்கும். எனவே இந்த மாதிரியான நேரங்களில் தீய பழக்க வழக்கங்களை விடுத்து ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தின் இரண்டாவது பகுதி

கர்ப்பத்தின் இரண்டாவது பகுதி

இந்த காலகட்டத்தில் தாயின் உடலமைப்பு அப்படியே குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக் கொண்டே வரும். உங்கள் வயிற்று பகுதி பெரிதாகி உடைகள் அணிய கூட சிரமத்தை சந்திப்பீர்கள். அதிகமான பசி ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும். நெஞ்செரிச்சல், கால் வலி போன்றவற்றை அடிக்கடி சந்திப்பீர்கள்.

சில உணவுகள் உங்களுக்கு ரெம்ப பிடிக்கும். விரும்பி சாப்பிட ஆசைப்படுவீர்கள். கருப்பையில் இருக்கும் குழந்தை தாயின் சிறுநீர்ப்பைக்கு அழுத்தம் கொடுப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் குழந்தையின் இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவை முழுவதுமாக வளர்ச்சி அடைந்து இருக்கும். அதே மாதிரி குழந்தையின் தண்டுவடம், விரல்கள், கால் விரல்கள் போன்றவை வளர்ச்சி அடைந்து இருக்கும்.

அதே மாதிரி குழந்தையின் முகத்தில் இமைகள், புருவங்கள், இமை முடிகள் போன்றவை வளர்ந்து இருக்கும். குழந்தையின் இனப்பெருக்க மண்டலம் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து விடும். இரண்டாவது காலக்கட்டத்தின் இறுதியில் குழந்தைக்கு தாயின் குரல் மற்றும் அக்கம் பக்கத்தினர் பேசுவது கேட்கும். குழந்தையின் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் வளர்ச்சி அடைந்து குழந்தை கொட்டாவி விடுதல், நீட்டித்தல், கை கால்களால் உதைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்.

கர்ப்பத்தின் மூன்றாம் பகுதி

கர்ப்பத்தின் மூன்றாம் பகுதி

நுரையீரல் இறுதியாக இந்த பகுதியில் தான் முழுமையாக வளர்ச்சி அடைந்து முடியும். குழந்தை இதற்கு பிறகு இந்த உலகத்திற்கு வரத் தயாராக இருக்கும். அப்படியே கர்ப்ப பையில் மிதந்து கொண்டே சுழன்று சுழன்று வரும். இப்பொழுது தான் விரல்களில் நகங்கள் வளரத் துவங்கும். குழந்தையின் கண் இமைகள் நன்கு வளர்ச்சியடைந்து அதிகப்படியான வெளிச்சத்தை உணரும் திறனை பெறும். சில அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பார்த்தால் தெரியும் குழந்தைகள் விரல் சூப்பும், இரட்டை குழந்தைகள் என்றால் கைகளை பிடித்து கொண்டு இருக்கும். மூன்றாவது காலம் குழந்தையின் எடைக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிறது.

எந்த பகுதியில் குழந்தை சிறுநீர் கழிக்கும்

எந்த பகுதியில் குழந்தை சிறுநீர் கழிக்கும்

ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய புரிதல் இப்பொழுது நமக்கு இருக்கும். அப்படி என்றால் குழந்தை எப்பொழுது சிறுநீர் கழிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இரண்டாவது கர்ப்ப காலத்தில் தான் சிறுநீரகம் முழுவதுமாக வளர்ச்சி அடைந்து இருக்கும். எனவே சிறுநீரகத்தில் இரத்த ஓட்டம் சீராகும் போது குழந்தை சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விடும்.

இந்த சிறுநீர் கர்ப்பப்பையை சுற்றியுள்ள அமினோட்டிக் திரவத்துடன் தானாகவே கலந்து விடும். இந்த அமினோட்டிக் திரவத்தை குழந்தை குடித்து மறுபடியும் சிறுநீரகாக வெளியிட்டு கொண்டே இருக்கும். எனவே அமினோட்டிக் திரவத்தின் அளவு குழந்தையின் சீரண மற்றும் சிறுநீரக உறுப்புகளின் சரியான செயலப்பாட்டையும் ஆரோக்கியத்தையும் குறுக்கிறது.

இயற்கை அதிசயம்

இயற்கை அதிசயம்

குழந்தை மலம் கழிக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? குழந்தையின் சீரண மண்டலம் உணவை நேரடியாக சீரணிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்காது. குழந்தைக்கு தேவையான ஆற்றல், ஊட்டச்சத்துகள் எல்லாம் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கு வந்து சேரும். ஆக்ஸிஜன் நேரடியாக கர்ப்ப பைக்குள் அனுப்பப்பட்டு குழந்தையின் இரத்த குழாய்களை அடையும். எனவே கர்ப்ப காலம் என்பது எளிதான காலம் கிடையாது.

இந்த மாதிரியான சமயங்களில் பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளையும், மருத்துவர்கள் கூறும் வழிகளையும் பின்பற்ற வேண்டும். கருவில் ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது இயற்கை தரும் அதிசயம் எனலாம். எனவே தாய்மார்கள் அதை கவனத்துடன் பார்த்துக் கொள்வது தாயுக்கும் சேயுக்கும் நன்மை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, August 14, 2018, 16:30 [IST]
Desktop Bottom Promotion