Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
பெண்கள் கருத்தரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறதாமே! உங்களுக்கு தெரியுமா?
தேங்காய் எண்ணெய் பல பயன்களை சமையல், ஆரோக்கியம் என பலவகைகளில் தருகிறது; பெண்கள் கருத்தரிக்க தேங்காய் எண்ணெய் உதவும் விதம் குறித்து இங்கு படிக்கலாம்.
கருத்தரிப்பதற்காக தம்பதியர்கள் கண்ட மருந்துகளையும், காணுகின்ற கோவில் குளங்களையும், காணக்கிடைத்த மருத்துவர்களையும் தேடி சென்று - வேண்டி வருகின்றனர். ஆனால், அவர்கள் அறியாத விஷயம் ஒன்று உள்ளது. தாங்கள் தினமும் சமையலுக்கும், முடி வளர்ச்சிக்கும், தேகப்பராமரிப்பிற்கும் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் - தம்பதியரின் வாழ்க்கைக் கனவான வாரிசையும் அளிக்க உதவுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அப்படிப்பட்ட அந்த பொருள் என்ன என்பதை பதிப்பினுள் சென்று படித்து அறியலாம், வாருங்கள்!

அது என்ன பொருள்?
தம்பதியருக்கு வாழ்க்கையை அளித்து, அவர்தம் வாழ்வை வாரிசளித்து - வசந்தமாக்க உதவும் அந்த பொருள் தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய் பல வகைகளில், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டு வருகிறது; முடிக்காக, உடலுக்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துபவர்களும், உணவிற்காக இந்த எண்ணெயை பயன்படுத்துபவர்களும் அறியாத ஒரு விஷயம் - தேங்காய் எண்ணெய் கருத்தரிக்கவும் உதவும் என்பது தான்!

எப்படிப்பட்ட எண்ணெய்?
தேங்காய் எண்ணெயை எந்தவொரு பயன்பாட்டிற்கும் தேர்வு செய்யும் பொழுது, அது தூய்மையான எண்ணெயாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்! தூய்மை என்று கூற வருவது வேதிப்பொருட்கள், பதப்படுத்திகள் என எதுவும் சேர்க்கமால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆக இருக்க வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெய் நூறு சதவிகிதம் தூய்மையானதாக, மரச்செக்கில் சுகாதாரமானதாக அரைத்து தயாரிக்கப்பட்டதாக இருந்தால் மேலும் நல்லது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கருத்தரித்தலில் பயன்படும் விதத்தை கீழ்க்கண்ட பத்திகளில் படித்தறியலாம்.

லூப்ரிகன்ட் - தளர்த்தி
லூப்ரிகன்ட் என்பது ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் பொழுது, உள்நுழைத்தல் எளிதாக இருக்க, வலி கொடுக்காமல் அமைய பயன்படுத்தப்படும் ஒரு பொருள். பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் ஈரம் உள்நுழைத்தலுக்கு போதுமானது தான்; ஆனால், ஈரம் இல்லாத நிலையில் மற்றும் பிறப்புறுப்பில் ஈஸ்ட் நோய்த் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க தம்பதியர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயை லூப்ரிகண்டாக பயன்படுத்தும் பொழுது அது விந்துக்கள் பெண்ணின் உடலில் வேகமாக நுழைவதை ஊக்குவிக்கிறது; மேலும் விந்து மற்றும் அண்டத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

உணவு மூலமாக!
தேங்காய் எண்ணெயை நீங்கள் உண்ணும் உணவு மூலமாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது ஆண்களும், முக்கியமாக பெண்கள் தங்கள் பருகும் பானங்களில், பழச்சாறுகளில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து பருகி வருவது கருத்தரிப்பு செயல்பாட்டில் மிகவும் உதவும். மேலும் சமைக்கும் பொழுது, சாதாரண எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், அதுஉடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்; அதே சமயம் கருத்தரிப்பிற்கும் நன்மை பயக்கும்.
கிட்டத்தட்ட கேரள மக்களை போல், உணவு சமைத்து, உட்கொள்ள தொடங்குங்கள்! அது உங்கள் வம்சத்தின் வாரிசை அளிக்க வல்லது. உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திட வல்லது!

மாஸ்டரைசர் - ஈரப்படுத்தி
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை முறை மாஸ்டரைசர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே! இந்த மாஸ்டரைசரை கை, கால்கள் என இந்த பாகங்களுக்கு பயன்படுத்துவதுடன் நில்லாமல், தொடைகளின் இடுக்குகள், பிறப்புறுப்பு பகுதிகள் என அனைத்திற்கும் தடவி வருதல் வேண்டும்; அவ்வாறு தடவி வந்தால், அது பிறப்புறுப்பில் ஏற்பட இருக்கும் நோய்த் தொற்றுகளை தடுத்து நிறுத்தவும், நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் காக்கவும் உதவும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் உடலிலும் பிறப்புறுப்பினில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படுவதை அறவே தடுக்கிறது.

பிறப்புறுப்பு pH அளவு!
பெண்களின் உடலில் பலவித ஹார்மோன்கள் சுரக்கின்றன; ஆண்களின் உடலிலும் பல ஹார்மோன்கள் உள்ளன. ஆனால் பெண்களின் உடலில் மாதவிடாயின் பொழுதும், கர்ப்ப காலம், பிரசவம், தாய்ப்பால் அளித்தலின் பொழுது என வாழ்வின் ஒவ்வொரு பரிணாமத்திலும், அதற்கேற்ற வகையில் பெண்ணின் உடல் வேறுபட்ட ஹார்மோன்களை சுரந்து கொடுக்கிறது. இதனால், உடலின் ஹார்மோன் மாற்றத்தில், அவற்றின் pH அளவுகளில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

pH-ல் நடுநிலை!
ஆனால், தேங்காய் எண்ணெயை தொடர்ந்து, உணவின் மூலமாக உட்கொண்டு வருதல், உடலிற்கும், சரும பராமரிப்பிற்கும், கேசத்திற்கும் பயன்படுத்தி வருதல் மிகவும் உதவியாக இருக்கும்; இவ்வாறு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வருதல், பெண்களின் ஹார்மோன் அளவை நடு நிலையாக வைத்து, முக்கியமாக பிறப்புறுப்பு ஹார்மோன்களின் அளவை சரியாக வைத்து பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பின் சதவிகிதத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது! ஆண்களுக்கும் பிறப்புறுப்பு pH அளவை நடு நிலையில் வைக்க உதவுகிறது.

பிற முக்கிய பயன்கள்!
தேங்காய் எண்ணெயை தினசரி உணவாக, உணவு மூலமாக எடுத்துக் கொள்வது, பெண்கள் மற்றும் ஆண்களின் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, வெளியேற்ற உதவுகிறது. மேலும் மனித உடலில் சுரக்கப்படும் முக்கிய ஹார்மோன்களான இன்சுலின் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவை கட்டுக்குள் வைத்து, உடலில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது! தேங்காய் எண்ணெயின் இந்த முக்கிய பயன்கள் குறித்து அறிந்தவர்கள் மிகச்சிலரே! மற்றவர்கள் அறிந்து, அனைவரும் பயனடைய இந்த பதிப்பை பகிர்ந்து உதவுவீராக!



Click it and Unblock the Notifications