குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் விளைவுகளும்!

பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். அது ஏன் என்ற

பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது; எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர். அது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா? குழந்தைகளின் இந்த பழக்கத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா?

reasons for baby putting hands in mouth

இந்த பதிப்பில் குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பு உணர்வு

பாதுகாப்பு உணர்வு

குழந்தைகள் பத்து மாதங்கள் தாயின் இருட்டறைக்குள் வாழ்ந்து எது வெளிச்சம், எது இருட்டு மனிதர்கள் எப்படி இருப்பர் என எதை பற்றியும் அறியாமல், தெரியாமல் வாழ்ந்து வந்து இருப்பர்; அவ்வாறு வளர்ந்த அவர்கள் பிறந்த பின் தனியே குறுகி இருந்த இடத்தை விட்டு வெளிவந்த பின், பலவித மாற்றங்களை பார்க்கின்றனர். அவர்களின் கண் பார்வை ஒரு வயதின் பொழுது தான் கூர்மை அடையும்; கிட்டத்தட்ட கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், பூமியில் பிறந்த குழந்தைகள் உணர்கின்றனர்.

அனைத்து மாற்றங்களும், புதிய பொருட்களும் குழந்தையின் மனதில் பய உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பய உணர்வை போக்க குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு எது கை எது வாய் என்று கூட தெரியாது; ஏதோ பயத்தில் தானாக இது மாதிரி வைத்துக் கொள்கின்றன. இப்படி வைத்துக் கொண்டால் அவர்தம் மனதிற்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது.

பசி உணர்வு

பசி உணர்வு

பய உணர்வை போன்று குழந்தைகளுக்கு பசி என்ற உணர்வு ஏற்பட்டாலும் குழந்தைகள் தங்கள் கையை வாயில் வைத்துக் கொள்வர்; குழந்தைகளின் அழுகை, வயிற்றின் அளவு, இம்மாதிரி கையை வாயில் வைத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும்; பசி நீங்கினால், குழந்தைகள் கையை வாயில் வைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும்.

தூக்கம்

தூக்கம்

குழந்தைகள் தூங்கும் பொழுது கையை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வர்; ஏனெனில் அவர்களுக்கு தூங்கும் பொழுது ஒருவித பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்; எனவே, தன்னை தானே சமாதானப்படுத்தி கொள்ள குழந்தை தன் வாயில் கையை வைக்கிறது. நீங்கள் எத்தனை முறை கையை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் மனதில் உள்ள பயம், பசி போன்ற உணர்ச்சிகளே!

தனிமை உணர்வு

தனிமை உணர்வு

குழந்தைகளை அதிக நேரம் தனித்து விட்டாலோ, அன்னையானவள் குலந்தியை அதிக நேரம் பிரிந்து வேறு எங்கும் சென்று விட்டாலோ குழந்தை பயம், பதட்டம் மற்றும் அன்னையை காணவில்லை என்ற ஏக்கம், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படல் போன்ற காரணங்களால் கையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும். இந்த உணர்வு தனித்து விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே! ஏன் இத்தனை வளர்ந்த நாமே தனித்து விடப்பட்டால் நகத்தை கடிப்பது, உதடை பிய்ப்பது என எதையாவது செய்து கொண்டிருப்போம்.

பல் முளைத்தல்

பல் முளைத்தல்

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் அதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும்; மெல்ல வேண்டும் போன்று இருக்கும்; அதனால் அந்த சமயத்தில் குழந்தைகள் தங்கள் கையை முழுவதுமாக வாய்க்குள் விட்டு கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளின் அர்த்தம் மற்றும் என்ன செய்வது என்று அறியாமல் குழந்தைகள் குழந்தைத் தனமாக செய்யும் விஷயம் தான். இதற்கு குழந்தைகளை அடித்து திட்டாமல் அன்பு காட்டி அவர்களின் பய மற்றும் மற்ற உணர்வுகளுக்கு நிவாரணம் அளிக்க முயலுங்கள்!

இப்பொழுது குழந்தைகளின் இந்த கையை வாயில் வைக்கும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்க்கலாம்.

தீர்வு தான் என்ன?

தீர்வு தான் என்ன?

காரணத்தை அறிந்து கண்டோம்; அந்த காரணம் ஏற்படாத சூழலை உருவாக்கி குழந்தைகளை காப்பாற்றுவது தான் தீர்வு. மேலே பார்த்த காரணங்களில் குழந்தைகளின் பசியை போக்க போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை கையை வாயில் வைக்க விடாமல் பார்த்துக் கொள்வது, குழந்தையை தனித்து விடாமல், பத்திரமாக கூடவே இருந்து பார்த்து கொண்டு அதன் பய உணர்வு மற்றும் தனிமை உணர்வுகளை போக்க முயற்சிக்க வேண்டும்.

திசை திருப்புதல்

திசை திருப்புதல்

குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க அவர்தம் கையில் ஏதேனும் பொம்மையை அளித்து, அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும்; தூங்கும் பொழுதும் குழந்தையின் கையி பிடித்துக் கொள்ள பொம்மை அல்லது உங்களை கட்டி அணைத்துக் கொள்ளுமாறு குழந்தையை தூங்க வைக்கலாம். பல் முளைத்தலின் பொழுது குழந்தைக்கு அதற்கென விற்கப்படும் பொம்மைகளை குழந்தையின் கையில் அளிப்பது, பழங்களை அளித்து கடிக்க செய்வது இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிறந்த பெற்றோர்!

சிறந்த பெற்றோர்!

குழந்தைகள் என்பவர்கள் புதிதாய் பூத்த மலர்கள்; ஒரு செடியை நட்டு வைத்து அது நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்க எத்தனை கவனம், பராமரிப்பு தேவையோ அதைவிட பல நூறு மடங்கு கவனத்தை உங்கள் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்குவதில் இருக்க வேண்டும்; அப்படி இருந்து விட்டால், நீங்கள் தான் சிறந்த பெற்றோர் மற்றும் உங்கள் குழந்தை தான் மிகவும் அதிர்ஷ்டசாலி! குழந்தைகள் பிறந்த தருணம் முதல் அவர்களின் செய்கைகளுக்கு அர்த்தம் அறிந்து செயல்படுங்கள்! உங்கள் வாழ்க்கையும் சரி குழந்தையின் வாழ்க்கையும் சரி மிகவும் அழகாக பயனுள்ளதாக மற்றும் அர்த்தமுள்ளதாக இருக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, August 21, 2018, 15:10 [IST]
Desktop Bottom Promotion