For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டு உணவு உங்கள் குழந்தைகளுக்கு எல்லா சமயத்திலும் ஆரோக்கியமல்ல !!

|

இது அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது . ஆனால் அது உண்மை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வீட்டு உணவுகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு பிரத்யோகமாக தயாரிக்கப்படும் பாக்கெட் உணவுகள் சரியான ஊட்டச் சத்தை தருகிறது.

வீட்டில் சமைக்கப்படும் உணவில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை விட, 44 % புரோட்டின், 26 % எனர்ஜி, மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது.

Home made food are not always healthy for infants

வீட்டில் எல்லாருக்கும் பொதுவாக சமைப்பதுண்டு. எல்லா காய்கறிகள், பருப்பு வகைகள் என சேர்த்து சமைக்கப்படுவது குழந்தைகளுக்கான சரியான உணவு அல்ல.

மிதமான புரதம், கொழுப்பு அமைந்திருக்க வேண்டும். அவ்வகையில் பாக்கெட்டில் தரப்படும் உணவில் அதிகமான பால் சத்துக்களும் , மிதமான மற்ற சத்துக்களும் கலந்துதான் தயாரிக்கிறார்கள். இதனால் குழந்தைகளு சரியான ஊட்டச் சத்து கிடைக்கிறது.

அதனால் குழந்தைகளுக்கு தரப்படும் பாக்கெட் உணவுகளே அவர்களுக்கு போதுமானது. அவற்றில் எல்லாவித சத்துக்களும் சரிவிகிதத்தில் அமைந்துள்ளன. ஆனால் பெற்றோர்கள் சமாதானமடையாமல், அதிக புரத சத்துக்கள் கொண்ட உணவுகளை தருகிறார்கள்.

இதன் விளைவால், அதிகப்படியான சத்துக்களை உண்டு உடல் பருமனுக்கு ஆளாகுகிறார்கள்.

இந்த் ஆய்விற்கு 278 ரெடி மேட் உணவுகள், 174 ஆர்கானிக் உணவுகள்மற்றும் 408 வீட்டு உணவுகள் குழந்தைகளுக்காய் தயார் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பால் சத்துக்கள் வீட்டு உணவில் 16 % இருந்தன. ஆனால் ரெடி மேட் உணவுகளில் 27 % அதிகமாக இருந்தன.

இந்த ஆய்வின் வீட்டு உணவு வகைகளில் கடல் உணவு மற்றும் இறைச்சி ஆகியவை கொழுப்பை அதிகப்படுத்தி, கால்சியம் அளவை குறைக்கின்றன. ஆனால் ரெடி மேட் உணவுவகைகளில் பால் பொருட்கள் அதிகம் இருப்பதாலும், போதிய அளவு மீன் வகைகளையும் குழந்தைகளுக்கு தரப்படும்போது, தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றது என்ரு ஆய்வாளர் பாப்பர் கூறுகிறார்.

இந்த ஆய்வு குழந்தைகளைப் பற்றியும் அவர்களுக்கு வரும் நோய்களைப் பற்றியும் ஆய்வு செய்யும் மருத்துவ இதழில் வெளிவந்துள்ளது.

English summary

Home made food are not always healthy for infants

Home made food are not always healthy for infants
Story first published: Thursday, July 21, 2016, 17:42 [IST]
Desktop Bottom Promotion