For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் ஹைபர் ஆக்டிவ் மற்றும் கவனக் குறைபாட்டிற்கு காரணம் எது தெரியுமா?

|

சில குழந்தைகள் ஹைபர் ஆக்டிவாக ஒரு இடத்தில் ஒரு நொடி கூட இல்லாமல் தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். தூக்கமும் அவர்களை பாதிக்கும். அதேபோல், சில குழந்தைகள் கவனக் குறைப்பாட்டோடு இருப்பார்கள். ஒரு தடவைக்கு பல தடவை சொன்னால்தான் கவனிப்பார்கள்.

Fast Food During Pregnancy may cause for APHD Risk in Kids

இது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகும். இது பிரசவத்தின் போது தாய் சிக்கல்கள் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது ஊட்டச் சத்து குறைப்பாட்டினாலோ வரும் என முந்தைய ஆராய்ச்சியில் கூறி வந்தனர். ஆனால் அதற்கான காரணங்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள கிங்க்ஸ் காலேஜில் இந்த மாதிரியான பாதிப்புகள் எப்படி உருவாகின்றன என ஆராய்ச்சியை சமீபமாக மேற்கொண்டனர்.

இதில் இவ்வாறு அசாதரண நடவடிக்கைகள் கொண்ட 81 குழந்தைகளிடம் ஆய்வை நடத்தியபோது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பு வகை உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

அதேபோல் அவசர கதியில் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் , அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவ் மற்றும் கவனக் குறைப்பாடு வர வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு உருவாகும் IGF2 என்ற ஜீன்தான் கரு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் காரணமான மரபணு. கர்ப்பிணிகள் அதிக இனிப்பு கலந்த உணவுகளையும், அதிக கொழுப்பு உணவுகளையும் சாப்பிடும்போது, அது IGF2 ஜீனை அதிகமாக தூண்டுகின்றன.

இதனால்தான் பிறக்கும் குழந்தைகள் அதிக துறுதுறுப்புடன் இருக்கின்றன என தலைமை ஆராய்ச்சியாளர் எட்வார்டு கூறியிருக்கிறார். அதனால் கர்ப்பம் அடைந்தவர்கள் நல்ல சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்தால் அவர்களுக்கு நல்ல அறிவுடன் கூடிய குழந்தைகள் பிற்க்கும் என மேலும் அவர் கூறுகிறார்.

English summary

Fast Food During Pregnancy may cause for APHD Risk in Kids

Fast Food During Pregnancy may cause for APHD Risk in Kids
Desktop Bottom Promotion